Essay about pen sathanaiyalargal in Tamil
Answers
Answer:
ரோசா பார்க்ஸ் 1913 - 2005...
சமூக உரிமைப் போராளி. நிறவெறிக்கு எதிராக பேருந்தில் வெள்ளையருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து நிறவெறி மற்றும் தீண்டாமைக்கு எதிராக தமது வாழ்நாள் முழுதும் போராடியவர்
எமிலின் ஃபங்கர்ஸ்ட் 1858 - 1928...
சமூக சீர்த்திருத்தவாதி பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வேண்டும் என்று போராடிப் பெற்றுத் தந்தவர்.
ரோஸலிண்ட் ஃப்ராங்க்ளின் 1920 -1958
படிகவியலாளர் டிஎன்ஏ வின் டபிள் ஹெலிகல் அமைப்பைப் பற்றிய கட்டுரைகளையும், கண்டுபிடிப்புகளையும் முதன்முறையாக உலகின் முன் சமர்பித்தவர்.
அவர் மேரி கியூரி. தனது இயற்பியல் மற்றும் வேதியியல் கண்டுபிடிப்பு சாதனைகளுக்காக நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானியும் அவரே! பிரிட்டனில் பிபிசி தொலைக்காட்சி வியாழக்கிழமை நடத்திய நேயர் வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற 100 சாதனையாளர்களில் மேரி கியூரிக்கு முதலிடம் கிடைத்தது. கேன்சர் சிகிச்சையில் உலகம் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறதென்றால் அது மேரி கியூரியின் கண்டுபிடிப்பால் தான் என அவர் முதலிடம் பெற்றதற்கான காரணத்தை குறிப்பிடுகிறது
அவர் மேரி கியூரி. தனது இயற்பியல் மற்றும் வேதியியல் கண்டுபிடிப்பு சாதனைகளுக்காக நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானியும் அவரே! பிரிட்டனில் பிபிசி தொலைக்காட்சி வியாழக்கிழமை நடத்திய நேயர் வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற 100 சாதனையாளர்களில் மேரி கியூரிக்கு முதலிடம் கிடைத்தது. கேன்சர் சிகிச்சையில் உலகம் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறதென்றால் அது மேரி கியூரியின் கண்டுபிடிப்பால் தான் என அவர் முதலிடம் பெற்றதற்கான காரணத்தை குறிப்பிடுகிறது பிபிசி.
பிரிட்டன் பிரிட்டிஷ் சொஸைட்டி, ஹிஸ்டரி ஆஃப் சயின்ஸ் துறையின் தலைவரான பட்ரீஸியா ஃபாரா இந்த வாக்கெடுப்பு குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்;
‘மேரி கியூரி நிகழ்த்தியது சாதாரண சாதனை அல்ல. உலக அளவில் இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி அவர் தான். அது மட்டுமல்ல மீண்டும் 8 ஆண்டுகள் கழித்து தனது விடாமுயற்சி மற்றும் தொடர் ஆய்வுகளின் பயனாக வேதியியல் துறையிலும் இரண்டாம் முறையாக நோபல் பரிசு பெற்ற ஒரே பெண் மேரி கியூரி. இது அறிவியல் புலத்தில் மிக அரிதான சாதனை. மேரி கியூரி இந்த சாதனைகளை மிகத் திருப்திகரமான சூழலில் செளகர்யமாக வாழ்ந்து கொண்டு நிகழ்த்தவில்லை. அவருடன் முரண்பட்டிருந்தவர்கள், அவருடைய ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகளில் இருந்து முரண்பட்டவர்கள் அப்போது பலர் இருந்தனர். அவர்கள் ஒவ்வொரு நொடியிலும் மேரி கியூரியை கண்காணித்துக் கொண்டும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் விமர்சித்துக் கொண்டும் இருந்தார்கள். மேரி கியூரி விருது பெறுவதற்குத் தகுதியான விஞ்ஞானியாக நாமினேட் செய்யப்பட்ட போது அவரது நாட்டுப்பற்று மிக்க பெற்றோர்கள் போலந்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ரஷ்ய அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ஃபிரான்ஸில் அவர் சந்தேகத்திற்குரிய அந்நிய நாட்டவராகக் கருதப்பட்டு வந்தார். அது மட்டுமா? இத்தனை தொல்லைகள் போதாதென்று மேரி கியூரி தானொரு பெண் என்பதால் இத்துறையில் எத்தனை சாதனை நிகழ்த்தியிருந்த போதும் அவரை மலினப்படுத்தும் முயற்சியே பலருக்கும் இருந்து வந்தது. அத்தனையையும் தனது ரேடியம் கண்டுபிடிப்பு எனும் ஒரே சாதனையால் தூள் தூளாக்கி உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் லிஸ்டில் முதலிடம் பிடித்திருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமில்லை. அதனால் தான் சர்வதேச அளவில் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் கூட மேரி கியூரியை மக்கள் தங்கள் வாக்குகளின் மூலம் மீண்டும் முதலிடம் பிடிக்க வைத்திருக்கிறார்கள்.’ என்றார்.