English, asked by lakshmi0708, 7 months ago

essay about solar system in Tamil​

Answers

Answered by shaikhmahewish1127
0

Answer:

பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரு மிகப்பெரிய மூலக்கூறு மேகத்தில் ஏற்பட்ட ஈர்ப்புவிசைச் சுருக்கம் காரணமாக கதிரவ அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் எடையில் பெரும்பகுதியைக் கதிரவனே கொண்டுள்ளது. அதற்கடுத்து மிக அதிக எடை கொண்டது வியாழன் கோளாகும். புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு உட்கோள்கள், புவியொத்த கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பொதுவாகப் பாறைகள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றால் உருவானவையாகும். ஏனைய நான்கு புறக்கோள்களும் புவியொத்த கோள்களை விட நிறைமிக்கனவாகும். அவற்றில் மிகப்பெரிய கோள்களான வியாழன் மற்றும் சனி போன்றவை பெரும்பாலும் ஐதரசன் மற்றும் ஈலியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளதால் வளிமப் பெருங்கோள்கள் என்றும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்றவை மீதேன், அமோனியா போன்ற உயர் உருகு நிலை கொண்ட பொருட்களைக் கொண்டுள்ளதால் பனிப பெருங்கோள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அனைத்தும் தனித்தனி நீள்வட்ட சுற்றுப்பாதைகளில் (Orbital path) கதிரவனைச் சுற்றிவருகின்றன.

கதிரவ அமைப்புச் சிறு பொருட்களையும் கொண்டுள்ளது. செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கிடையே அமைந்துள்ள சிறுகோள் பட்டை அகக்கோள்களைப் போல் உலோகங்கள் மற்றும் தனிமங்களையே பெரும்பாலும் கொண்டுள்ளது, இதில் சியரீசு குறுங்கோள் அமைந்துள்ளது. பனிக்கட்டிகளால் உருவான கைப்பர் பட்டை நெப்டியூனின் வட்டப்பாதையில் அமைந்துள்ளது. இதில் புளுட்டோ, அவுமியா, மேக்மேக் மற்றும் ஏரிஸ் ஆகிய குறுங்கோள்கள் அமைந்துள்ளன. இந்த இரு பகுதிகளைத் தவிர, பல்வேறு சிறு சிறு பொருட்களும் தடையின்றிப் பயணித்து வருகின்றன. ஆறு கோள்களையும், குறைந்தபட்சம் நான்கு குறுங்கோள்களையும் பல சிறு பொருட்களையும் துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன. இவை நிலவுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. புறக்கோள்கள் ஒவ்வொன்றையும் தூசு மற்றும் சிறு பொருட்களால் ஆன ஒரு கோள் வளையம் சுற்றியுள்ளது.

HOPE THIS HELP YOU....

Similar questions