India Languages, asked by kavitharavi621, 1 year ago

essay in Tamil about a day without food​

Answers

Answered by brosunny
9

Answer:

இன்று ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் கஷ்டப்படுபவர்கள் பலர் உள்ளனர். எல்லாருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என ஆண்டு தோறும் அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினம் கடைபிடிக்கபடுகிறது. 

ஆண்டுதோறும் கடை பிடிக்கப்படும் இந்த தினத்தின் இந்த ஆண்டின் மையக்கருத்து இடம் பெயர்பவர்களின் எதிர் காலத்தை மாற்ற வேண்டும்' என்பது. இவர்களுக்கான உணவு தேவையை பூர்த்தி செய்ய உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். உடல் ஊனமுற்றவர்கள், இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் வாழ உணவு கொடுப்பது ஒவ்வொரு அரசின் அவசியம் என ஐ.நா சபை தெரிவிக்கிறது. 

மக்களின் வாழ்க்கை முறை காரணமாக எதிர்காலத்தில் பணம் இருந்தாலும் உணவு கிடைக்காத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். அதனால் உணவு உற்பத்தி அதிகரித்தால் தான் எல்லா மக்களுக்கும் உணவு கிடைக்கும் என புரிந்து கொள்ள வேண்டும். உலக மக்கள் தொகையில் 79.5 கோடி பேர் பசியிலும், ஊட்டச்சத்து குறைபாட்டிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆப்ரிக்காவில் 20 சதவீதம் பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2015ன் படி உலக அளவில் இடம் பெயர்ந்தோர் எண்ணிக்கை 24 கோடியாக உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். 

Explanation:

please as your wish can you follow me

please mark me as brainliest

Similar questions