CBSE BOARD X, asked by vijili, 2 months ago

Essay of Tamil in Tamil​

Answers

Answered by swapnil5881
4

Answer:

மொழி நம் பண்பாட்டின் விழி. மொழியில்லாத வாழ்க்கை ஒளியில்லாத வாழ்க்கை. மூச்சைப் போல் மொழியும் முக்கியம்.

பேச்சைப் போல் அதில்உள்ளுறைந்து வாழ்வின் வழியை நமக்குக் காட்டும் தாய்மொழி அதைவிட முக்கியம். அறிதலுக்கும் தெரிதலுக்கும் புரிதலுக்கும் உணர்தலுக்கும் ஆராய்தலுக்கும் காரணமான உயிர் ஊடகம் மொழிதான். மனித இனத்தின் நாகரிகத்தின் அடையாளம் மொழி. பண்பாட்டின் அடையாளம் தாய்மொழி. தாயிடம் இருந்து கற்கும் மொழி தாய்மொழி. தாயாக நம்மைக் காக்கும் மொழி தாய்மொழி.

தமிழ்க்குடியின் நீண்ட வரலாறும் அதன் தொன்மையும் தொடர்ச்சியும் நம் தாய்மொழியில்தான் பொதிந்து வைக்கப்பட்டுள்ளது. '5000 ஆண்டு பழமை உடைய ஹராப்பா, மொகஞ்சாதரோ புதைபொருட்களில் இடம்பெற்றுள்ள உருவ எழுத்துகள் தமிழ் எழுத்துகளே' என அறிஞர்கள் கருதுகின்றனர். தமிழ் எழுத்துமொழி மூவாயிரம் ஆண்டுகள் பழைமையானது எனக்கொண்டால், தமிழ்ப் பேச்சுமொழி ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று புரிந்துகொள்ளலாம்.

திராவிட மொழிக்குடும்பத்தின் தாயாகத் திகழ்வது தமிழ்தான் என்றும், தமிழில் இருந்துதான் திராவிட மொழிகள் தோன்றின எனவும் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.அறிவின் வளர்ச்சி தாய்மொழியால் மட்டுமே சாத்தியம். தாய்மொழியே நம் அடையாளம், பண்பாட்டின் நீட்சி. சிந்தையில் விந்தையை ஏற்படுத்தும் ஆற்றல் தாய்மொழிக்கு மட்டுமே உண்டு. மக்களால் பேசப்படாத மொழி மரித்துப் போகிறது. உலகில் இரண்டு வாரங்களுக்கு ஒரு மொழி வழக்கிழந்து அழிந்துபோகிறது. மொழியின் உயிர்ப்பு மக்கள் பயன்பாட்டில் இருக்கிறது.

நோபல்பரிசு பெற்ற தாகூரின் 'கீதாஞ்சலி' அவர் தாய்மொழியான வங்கமொழியில்தான் முதலில் எழுதப்பட்டது. மகாத்மா காந்தி சுயசரிதையை, தாய்மொழியான குஜராத்தியில்தான் முதலில் எழுதினார். நம் சிந்தனைகளை தாய்மொழியில் மட்டுமே தங்குதடையில்லாமல் நம்மால் தரமுடியும்.

மூவாயிரம் ஆண்டுகளாக தமிழ் மொழி, மக்களால் பேசப்பட்டும் எழுதப்பட்டும் இந்த நுாற்றாண்டிலும் இளமையாகவும் இனிமையாகவும் உயிர்ப்போடும் இருக்கிறது. உலக நாடுகளில் 90 மில்லியன் மக்களாலும் பேசப்படும் மொழியாக நம் அன்னைத் தமிழ் திகழ்கிறது.

எத்திசையும் புகழ் மணக்க எல்லோராலும் விரும்பப்படும் மொழியான நம் தாய்மொழியில் பேசும்போது, நமக்குக் கிடைக்கும் இன்பம் கொஞ்சநஞ்சமா?'என்றுமுள தென்தமிழ்' என

கம்பரால் புகழ்ந்து பாராட்டப்பட்ட தமிழ் பழமையானது. தமிழ் பேசினாலும் கேட்டாலும் இனிமை தரும் மொழியாய் திகழ்வதால் மகாகவி பாரதியார், 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என பாடியுள்ளார். தமிழ் எனும் சொல்லின் பொருள் இனிமை என்பதாகும்.

ஆங்கில வழிப்பள்ளிகளில் நம் குழந்தைகள் பயிலத்தொடங்கிய பின் தமிழில் எழுதுவதும் பேசுவதும்கடினமாக மாறத்தொடங்கியது. 'பத்து' என்று சொன்னால் புரியாத நிலையில் 'டென்' என்று சொல்லிப் புரியவைக்க வேண்டியுள்ளது. மலேஷிய நாட்டில் தாய்மொழியோடு தங்கள் வேரறுந்து போகாமல் இருக்க ஐநுாறுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகளை நடத்துகிறார்கள். இங்கிலாந்து நாட்டில் இருபது தமிழ் அமைப்புகள் இணைந்து வாரவிடுமுறை நாட்களில், புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளுக்காகமுறையாக வகுப்புகள் நடத்தி தமிழுணர்வை ஊட்டி வருகின்றன. பிறமொழி பேசும் மக்களுக்குத் தமிழ்ப் பயிற்சி தரும் தமிழ்ப் பள்ளிகளை உலகெங்கும் நாம் உருவாக்கவேண்டும்.

Answered by Sreekala4mt
4

Answer:தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ்[13], ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.[14] இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதன்மையாக உள்ளதாக 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கூகுள் கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும்  மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.

Similar questions