Essay on bharathiyar.
Answers
Answer:
Chinnaswami Subramania Bharathi, also known as Bharathiyar (11 December 1882 – 11 September 1921), was a Tamil writer, poet, journalist, Indian independence activist and a social reformer. Popularly known as "Mahakavi Bharathi", he was a pioneer of modern Tamil poetry and is considered one of the greatest Tamil literary figures of all time. His numerous works included fiery songs kindling patriotism during the Indian Independence movement.[1]
Answer:
சுப்பிரமணிய பாரதி இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய தமிழ் கவிஞர். அவரது பெயர் இந்திய வரலாற்றின் பக்கங்களில் ஒரு தீவிர தேசபக்தரென பிரகாசிக்கிறது. சுப்பிரமணிய பாரதி டிசம்பர் 11, 1882 அன்று தமிழ்நாட்டின் எட்டாயபுரத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை சின்னசாமி ஐயர் மற்றும் தாய் லட்சுமியம்மால். அவர் ஒரு கணித மேதையாக இருக்க வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார். ஆனால் பாரதிக்கோ சிறுவயது முதலே தமிழ் மொழி மீதும் அதன் இலக்கியம் மீதும் பற்று உண்டாகிற்று.
பாரதிக்கு பதினான்கு வயதாக இருந்தபோதே திருமணம் நடந்ததுவிட்டது. அவரது மணமகள் ஏழு வயது செல்லம்மால். ஆனால், திருமணமானது அவரது அறிவுக்கான பசியை அணைக்கவில்லை. தன பதினாறு வயதில் பனாரசுக்கு சென்று அங்கேய் நன்கு ஆண்டுகள் இருந்தார். அந்த நான்கு ஆண்டுகளில் நிறைய கற்றுக்கொண்டார். தேச பக்தி அவரின் ஆழ்மனதில் ஆழமாய் பதிந்தது. கவிதைகள் பல படைத்தார். காட்டுத்தீ பூல் அவரது எண்ணங்கள் அவரது கவிதைகளில் தெரியும். இக்கவிதைகளை கேட்பவர் காதுகளிலும், இதயங்களிலும் தேன் வார்த்தது போல் இருக்கும். பின்பு சுதந்திர உணர்வையும் தூண்டும்.
பாரதியின் கவிதைகளை எந்த பத்திரிகைகளும் பிரசுரிக்க முன்வரவில்லை எனவே 1907 ஆம் ஆண்டில் இந்தியா என்ற தனது சொந்த வார இதழை வெளியிடத் தொடங்கினார். அதில் அவரது கருத்துக்களை சுதந்திரமாக ஒளிபரப்பினார், பொதுமக்கள் அவற்றை ஆவலுடன் வாசித்தனர். இந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஜீரணிக்க முடியவில்லை. பிரிட்டிஷ் பிராந்தியத்தை விட்டு வெளியேறி பாண்டிச்சேரியில் தங்குமாறு அவர்கள் அவரை வற்புறுத்தினர். அவருக்கு அனுப்பப்பட்ட அனைத்தையும் பிரிட்டிஷார் பறிமுதல் செய்வார்கள்.
பத்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழகத்திற்கு வந்தார் பாரதி. கவிதைகள் படைத்தார். புகழின் உச்சத்திற்கேய் சென்றார். பிரிட்டிஷாருக்கு பயப்படாமல் சுதந்திர கவிதைகள் படைத்தார். அவரது 38-ஆம் வயதில் பார்த்தசாரதி கோயிலின் யானை மிதித்து உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். வெகுகாலம் எமனோடு போராடி 1921, செப்டம்பர் 12 அன்று உயிர் நீத்தார்.