Essay on games in Tamil 500 words
Answers
Answer:
விளையாட்டு
முன்னுரை
விளையாட்டு (Game) என்பது பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், சில வேளைகளில் கற்பித்தல் நோக்கத்துக்காகவும் நடத்தப்படும் கட்டமைப்புக் கொண்ட ஒரு செயற்பாடு ஆகும். விளையாட்டு சில சமயங்களில் வேலை, என்பதுடன் தொடர்புடையது போல் காணப்படுகிறது. ஆனால், வேலை ஊதியத்துக்காகச் செய்யப்படுவது. விளையாட்டு ஒரு கலை என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. ஆனால் கலையைப்போல் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒன்றாக விளையாட்டு இருப்பதில்லை. இருந்தாலும், எப்போதும் இவற்றுக்கு இடையேயான எல்லைகள் தெளிவாக இருப்பதில்லை. தொழில் முறை விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு வருமானத்துக்கான ஒரு தொழிலாகவே உள்ளது.
பாரதி
"ஓடி விளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா. கூடி விளையாடு பாப்பா" என்பது பாரதியின் கூற்று. விளையாட்டு அனைத்து மனிதர்களும் இயல்பாக விரும்பி ஈடுபடும் செயற்பாடுகளில் ஒன்று.
நாம் விளையாட்டுக்களை போட்டியாக விளையாடுகின்றனர்.இதனால் மனிதர்கள் வெற்றி தோல்வியை சாதரணமாகக்கொண்டுள்ளனர்.
விளையாட்டு வகைகள்
பிரிவு 1 - உள்ளக விளையாட்டு, வெளியக விளையாட்டு.
பிரிவு 2 - கோட்டு விளையாட்டு, கோடில்லா விளையாட்டு.
பிரிவு 3 - குழு விளையாட்டு, தனி விளையாட்டு,
உள்ளக விளையாட்டு
இடங்களுக்கு உள்ளே விளையாடும் விளையாட்டுகளை உள்ளக விளையாட்டு என்று அழைப்பார்கள்.
எ.கா.:-
சதுரங்கம்
கேரம்
ஏணியும் பாம்பும்
தாயம்
மேசைப்பந்து
பூப்பந்து
வெளியக விளையாட்டு
இடங்களுக்கு வெளியே விளையாடும் விளையாட்டுகளை வெளியக விளையாட்டு என்று அழைப்பார்கள்.
எ.கா.:-
துடுப்பாட்டம்
கரப்பந்து
கூடைப்பந்து
உதைபந்து
வலைப் பந்தாட்டம்
எறிபந்து
கோட்டு விளையாட்டு
விளையாட்டை கோட்டுக்குள்ளே விளையாடினால் அது கோட்டு விளையாட்டு.
எ.கா.:-
ஓட்டம்
சாக்கு ஓட்டம்
அஞ்சலோட்டம்
கோடில்லா விளையாட்டு
விளையாட்டை கோட்டுக்கு வெளியே விளையாடினால் அது கோடில்லா விளையாட்டு. எ.கா.:-
நீளம் பாய்தல்
உயரம் பாய்தல்
கோலூன்றிப்பாய்தல்
குழு விளையாட்டு
விளையாடும் விளையாட்டை குழுவாக விளையாடினால் அது குழு விளையாட்டு. எ.கா.:-
கிரிக்கெட்
கரப்பந்து
கூடைப்பந்து
உதைபந்து
வலைப் பந்தாட்டம்
எறிபந்து
ஓணப்பந்து விளையாட்டு
கிட்டிப் புள்ளு
கிளித்தட்டு
தனி விளையாட்டு
விளையாடும் விளையாட்டை தனியாக விளையாடினால் அது தனி விளையாட்டு. எ.கா.:-
ஓட்டம்
சாக்கு ஓட்டம்
நீளம் பாய்தல்
உயரம் பாய்தல்
கோலூன்றிப்பாய்தல்
சதுரங்கம்
கரம்
ஏணியும் பாம்பும்
தாயம்
மேசைப்பந்து
விளையாட்டு வகைகள்
விளையாட்டுகள் உடற்றிறன் விளையாட்டுகள், பலகை விளையாட்டுகள், நிகழ்பட விளையாட்டுகள் எனப் பல வகைகளாக உள்ளன.
உடற்திறன் விளையாட்டுகள் தொகு
மனிதன் தனது உடல் திறன்களை திடமாக்கிகொள்ளும் பரிசோதித்துக்கொள்ளும் களங்களில் விளையாட்டு முக்கியமானது. அனேக விளையாட்டுகள் உடலினது வலிமையை, தாங்குதிறனை, வேகத்தை, சுறுசுறுப்பை, ஒருங்கியக்கத்தை பயிற்சிக்கு உட்படுத்துகின்றன. உடலை முதன்மையாக ஈடுபடுத்தினாலும் விளையாட்டில் சிறப்பாக ஆட உள ஒழுக்கமும் ஒருமுனைப்படுத்தலும் இன்றியமையாதது.
விளையாடுவதால் கிடைக்கும் பயன்கள்
விளையாடுவதால் மனிதன் உடல் நலத்தையும், மன நலத்தையும், சமூக நலத்தையும் பெறலாம். விளையாட்டுகளை விளையாடுவதால் ஒற்றுமை வளர்கின்றது. விளையாட்டுகளை விளையாடுவதால் ஒவ்வொருவரிடமும் தலைமைத்துவத்தன்மை வளர்கிறது.
பழைய கால விளையாட்டுக்கள்
இவை பண்டைய மக்கள் பொழுதுபோக்கிற்காக விளையாடப்பட்டன. இவ்விளையாட்டுகளை விளையாடுவதால் மக்கள் தமது கவலைகளை மறந்து இன்பத்தில் மூழ்குகின்றனர்.அவர்கள் விளையாடிய விளையாட்டுகளில் சில.....
அச்சுப்பூட்டு
கிட்டிப் புள்ளு
கோலி
குச்சி விளையாட்டு
பட்டம்
பம்பரம்
ஆனமானத் திரி
கரணப்பந்து
குதிரைக்குக் காணம் காட்டல்
கொக்கு விளையாட்டு
கோழிக்கால்
தை தக்கா தை
நடைவண்டி ஓட்டம்
நொண்டி
பச்சைக் குதிரை
பொய்க்கால் நடை, கொட்டாங்குச்சி நடை
மந்தி ஓட்டம்
மாட்டுக்கால் தாண்டல்
மூக்குப்பிடி (துரத்திப் பிடி)
அணில் பிள்ளை
ஆடும் ஓநாயும்
புலியும் ஆடும்
நாயும் இறைச்சியும்
கணினி விளையாட்டுகள்
கணினியின் தொழில்நுட்பம் வளர்சியடைந்ததின் பயனாக, கணினி விளையாட்டுகளும் முன்னேறி வருகின்றன. 1990களின் இறுதியில், இணையம் மூலமாக விளையாடப்படும் விளையாட்டுகளும் தமது பங்கிற்கு வளர்ச்சியடைந்து வருகின்றன. தொடக்கத்தில், மோட்டார் சைக்கிள் மற்றும் தானுந்து பந்தயத்தை விரும்பி விளையாடிய மக்கள், காலப்போக்கில் அதிரடி மற்றும் புலனாய்வு விளையாட்டுகளையும் விளையாட ஆரம்பித்தனர். இவ்விளையாட்டுகளை பெரும்பாலும் 12 முதல் 19 வயதுடைய சிறுவர் சிறுமியரே அதிகம் விரும்பி விளையாடுகின்றனர்.
கணினியில் விளையாடப்படும் விளையாட்டுகள் தற்காலத்தில் கருதப்படுகிறது
கணினியில் விளையாடுதல்
நன்மைகள்
- கணினி விளையாட்டுகளால் மன அழுத்தம் குறையும்.
- மேலும் ஒரு வலி நிவாரணியாகவும் செயல்படுகின்றது.
- இதன் மூலம் சிறுவர்களின் படைப்பாற்றல் மேம்படுகின்றது.
- தன்னிச்சியாக முடிவெடுக்கும் திறன் வளர்கிறது.
- குழந்தைகளின் தன்னம்பிக்கை மேலோங்குகின்றது.
- பிரச்சினைகளை தீர்க்கவும், அறிவாற்றலை பெருக்கவும் கற்றுக் கொடுக்கின்றது.
- மேலும் விளையாடுபவர்களை மகிழ்ச்சியாக வைத்துள்ளது.
தீமைகள்
- கணினி விளையாட்டுகள் உங்களை அடிமைப்படுத்தும்.
- உங்கள் பொறுமையை இழக்கச் செய்துவிடும்.
- வெளியுலகத்தை மறக்கடிக்கச் செய்யும்.
உடலின் ஆரோக்கியம் குறையும்.
4.கண் பார்வை குன்றிவிடும்.
5.பொன்னான நேரத்தை வீணடிக்க கற்றுக்கொடுக்கும்.
6.மற்ற விசயங்களில் கவனத்தை இழக்கச் செய்யும்.
please mark as brainliest