India Languages, asked by riyajha46, 9 months ago

Essay on summer vacation in Tamil language

Answers

Answered by Anonymous
2

Explanation:

கோவை கமிஷனர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மில் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். புகார் கொடுக்க அனுமதிக்காததால் இப்படி செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த மாதம் 27-ம் தேதி கோவை கமிஷனர் அலுவலகத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர் இன்னும் சிறிது நேரத்தில் கமிஷனர் அலுவலகம் வெடித்துச் சிதறப்போகிறது என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதனையடுத்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியோடு கமிஷனர் அலுவலகக் கட்டிடத்தில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. அந்த அழைப்பு வெறும் புரளி என தெரிய வந்தது.

இதனையடுத்து மிரட்டல் விடுத்த நபரைக் கண்டுபிடிக்க சைபர் கிரைம் உதவி கமிஷனர் செல்வராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டையில் ஆண்டிபட்டி அருகேயுள்ள மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தேனி ராஜா எனும் மில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

மிரட்டல் ஏன்?

பத்து வருடங்களுக்கு முன் கோவை வந்த தேனி ராஜா பல்வேறு மில்களில் பணியாற்றியுள்ளார். ஈரோட்டில் உள்ள மில்லில் வேலை பார்த்தபோது உடன் வேலை செய்த தாளவாடி பெண் ஒருவரை காதலித்துள்ளார். அவரை திருமணம் செய்ய முயன்றபோது பெண்ணின் பெற்றோர் தடுத்துள்ளனர். அந்தப் பெண்ணை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி கமிஷனரிடம் மனு கொடுக்க வந்துள்ளார். ஆனால், போலீசார் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த கோபத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக டெலிபோன் செய்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேற்கு மண்டல ஐ.ஜி செல்போன் எண்ணுக்கும், சூலூர் காவல் நிலையத்திற்கும் இதே மாதிரி டெலிபோன் மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Answered by ashauthiras
0

Answer:

கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து சில நாட்களேனும் தப்பிக்கவும், கோடை விடுமுறையை அனுபவிக்கவும் ஊட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வார இறுதி விடுமுறை மற்றும் மே தின விடுமுறையையொட்டி கடந்த இரு நாட்களில் மட்டும் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு 42 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்தனர். முக்கியமான சுற்றுலா தலங்களான தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், கோத்தகிரி சாலை ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக் கூட இடம் இல்லை. ஊட்டிக்கு வரும் லாரி போன்ற கனரக வாகனங்கள் லவ்டேல் சந்திப்பில் இருந்து மஞ்சகொரை வழியாக ஊட்டிக்கும், கூட்செட் சாலை வழியாக கூடலூருக்கும் திருப்பி விடப்படுகிறது. என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் சாலையில் இருமங்கிலும் அணிவகுத்து நிற்கும் வாகன நெரிசலை சமாளிக்க முடியவில்லை. இதற்கு வாகன ஓட்டிகள் சாலை விதிகளைக் கடைப்பிடிக்காததும் ஓர் காரணம். இடது ஓரமாக ஒன்றன் பின் ஒன்றாக மலையேறும் வாகனங்கள் சென்றால்தான் சிக்கலில்லாமல் செல்ல முடியும். ஆனால், பெரும்பாலான வாகன ஓட்டிகள் வலது பக்கம் ஏறிச்செல்வதால் அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது என்று காவல்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். பயணத்தின் போதே விதிகளை காற்றில் பறக்கவிடும் பயணிகள் ஊட்டியில் தங்கி இருக்கும் காலத்தில் என்னென்ன சூழல் சீர்கேட்டினை உருவாக்குவோர்களோ என்பது சூழலியலாளர்களின் கவலையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டு சீசனின் போதும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் டன் கணக்கில் பிளாஸ்டிக் குப்பைகளைக் கொட்டுகிறார்கள். இயற்கையை அனுபவிக்க வாருங்கள், சீரழிக்க வராதீர்கள் என்பதே இவர்களது கோரிக்கையாக இருக்கிறது.

Explanation:

Similar questions