நோய்க்காரணம் (Etiology) வரையறு
Answers
Answer:
நோய் மற்றும் பிற மருத்துவ தலைப்புகளைப் படிக்கும் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் பொதுவாக பெயர்ச்சொல் பயன்படுத்தப்படுகிறது. நோய் அல்லது மருத்துவக் கோளாறுகளை விவரிக்க நீங்கள் அதைப் பயன்படுத்தும் போது இது "தோற்றம்" என்று பொருள்படும், மேலும் இது விஷயங்கள் ஏற்படும் விதம் பற்றிய ஆய்வையும் குறிக்கிறது.
நோய் முதலியல் அல்லது நோய்க்காரணம் (etiology) என்பது ஒரு நோயின் மூல காரணத்தைப் பற்றி ஆராய்ந்தறியும் அறிவியல் துறை.
விளக்கம்:
மருத்துவத் துறை மட்டுமின்றி இயற்பியல், தத்துவவியல், நிருவாகவியல், உளவியல், இறையியல் போன்ற துறைகளிலும் மூல காரணத்தைக் கண்டறிவது அவசியமாகிறது. அதை போல் இடங்களில் இது காரண காரியவியல் என அறியப்படுகிறது.
தொற்று நோய்கள் உருவாக நுண்ணுயிரிகளே காரணம் என்பதை இராபர்ட் காச் (Robert Koch) என்பவர் தான் முதன் முதலில் கண்டுபிடித்தார். அதற்கு முன் வரை ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு காரணம் சொல்லப்பட்டு வந்தது. மலேரியா என்ற சொல்லுக்கு கெட்ட காற்று என்று பொருள்.
கெட்ட காற்றினால் மலேரியா வருவதாக நம்பினர். இந்தியாவில் பிறந்த ரொனால்டு ராஸ் என்ற ஆங்கில மருத்துவர் தான் அது பெண் அனாஃபிலசு கொசுக்களால் பரவும் பிளாஸ்மோடியத் தொற்றுயிரியினால் பரவுவதை கண்டு பிடித்தவர்.