Female freedom fighters essay in tamil
Answers
Answer:
She is the first freedom fighter of India
Born in Ramanad and was married to the king of Sivangangai. She was the only daughter to her parents.She was well versed in all the war fight,well versed in seven languages.His husband was killed by the Britishers and took over the kingdomShe fought against the Britishers even before the actual protest or independence movement started in IndiaShe fought against the Britishers 8 years before Rani of Jhansi.She is the fight freedom fighter who defeated the Britishers and ruled her kingdom for the next 10 years.
For further details, you can read about her in this blog:
First Women Freedom Fighter of India - Velu Nachiyar by Kavi Priya on MyIndiaTales
SORRY I DON'T KNOW ABOUT TAMIL....
Answer:
இந்திய சுதந்திர போராட்டத்தின் வரலாறு, பெண்களின் பங்களிப்புகளைக் குறிப்பிடாமல் முழுமையடையாது. இந்திய பெண்கள் செய்த தியாகம் எப்போதுமே முதலிடத்தைப் பிடிக்கும் என்று கூட கருதலாம். அவர்கள் உண்மையான உயிர்ச்சக்தியுடனும், தைரியத்துடனும் போராடி, சுதந்திரம் பெற்றுத்தர பல்வேறு சித்திரவதைகளையும், சுரண்டல்களையும், கஷ்டங்களையும் எதிர்கொண்டனர்.
பெரும்பாலான ஆண் சுதந்திரப் போராளிகள் சிறையில் இருந்தபோது இந்திய பெண்கள் தாமாக முன் வந்து போராட்டத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் அனைவரையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் வரலாற்று புத்தகத்தின் பக்கங்கள் நீண்டுகொண்டே போகும்.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு 1817 ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. பீமா பாய் ஹோல்கர், பிரிட்டிஷ் கர்னல் மால்கமுக்கு எதிராக தைரியமாக போராடி அவரை கொரில்லா போரில் தோற்கடித்தார். கிட்டூரின் ராணி சன்னாமா, அவாத்தின் ராணி பேகம் ஹஸ்ரத் மஹால் உட்பட பல பெண்கள் 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்திற்கு எதிராக போராடி வெற்றியும் பெற்றிருக்கின்றனர்.
1857 சுதந்திரப் போரில் (மாபெரும் கிளர்ச்சி) பெண்கள் ஆற்றிய பங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது மற்றும் கிளர்ச்சியின் தலைவர்களின் பாராட்டையும் பெற்றிருக்கிறது. ராம்கரைச் சேர்ந்த ராணி, ராணி ஜிந்தன் கவுர், ராணி டேஸ் பாய், பைசா பாய், சவுகான் ராணி, தபஸ்வினி மஹாராணி ஆகியோர் தங்கள் படைகளை தைரியமாக போர்க்களத்திற்கு அழைத்துச் சென்றதற்கான வரலாற்று சான்றுகள் ஏராளமாக உள்ளது. ஜான்சியின் ராணி லட்சுமி பாய், அவரது வீரமும், சிறந்த தலைமையும் உண்மையான தேசபக்திக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
20 ஆம் நூற்றாண்டில் சரோஜினி நாயுடு, கஸ்தூர்பா காந்தி, விஜயலக்மி பண்டிட் மற்றும் அன்னி பெசாந்த் ஆகியோர் போர்க்களத்திலும் அரசியல் துறையிலும் அவர்களின் தனித்துவமான பங்களிப்புக்காக இன்றும் நினைவுகூரப்படுகிறார்கள்.
சுதந்திர போராட்ட ஏடுகளில் பல பெண்களின் பெயர்கள் இருந்தாலும் மேற்கூறிய சில பெண்களின் பெயர்கள் போதுமானது, இந்திய விடுதலைப் பணியில் இந்திய பெண்களின் பங்களிப்பை பற்றி தெரிந்துகொள்ள.