இல்லாரை ______ எள்ளுவர்.
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
திருக்குறள்
Answers
விடை:
இல்லாரை எல்லாரும் எள்ளுவர்.
விளக்கம்:
"இல்லாரை எல்லாரும் எள்ளுவர்" என்னும் தொடர், கீழ்க்கண்ட குறளில் கையாளப்பட்டுள்ளது.
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு
- குறள் 752
பொருள் இல்லாதவரை எல்லாரும் இகழ்வார், செல்வரையோ எல்லாரும் பெருமைப்படுத்துவர். பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும் தான் இன்று உலக நடப்பாக உள்ளது. மேலோட்டமாக பார்த்தால் இதை ஏற்புடையதாக தோன்றும். ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்தால் அவ்வாறு இல்லை என்பதே உண்மை.
உதாரணமாக, ஊரில் உள்ள பணம் படைத்தவர்களை எல்லோரும் போற்றுவர். ஆனால் உண்மையிலேயே அவர் ஒரு அயோக்கியர் என்று தெரிந்தால் அவர் செல்வந்தர்களாக இருந்தாலும் அவரை நாம் இகழ்வோம். அதே போல ஒருவர் ஏழ்மை நிலையில் வாழலாம். ஆனால் அவர் தன்னுடைய நற்பண்புகளில் மேலோங்கி இருந்தாறேன்றால் எல்லோரும் அவரை போற்றுவர். ஆதலால் செல்வம் என்பது வெறும் பணத்தை மட்டுமே குறிக்காது.
