India Languages, asked by Anku8083, 10 months ago

Five sentence about garden in tamil

Answers

Answered by NamanSrivastava2777
1

Explanation:

தோட்டம் என்பது வீட்டுக் கொல்லை அல்லது வீட்டுக்கு வெளிப்புற நிலத்தைப் பண்படுத்தி, அதில் தாவர வகைகளை உணவுக்காகவோ அல்லது காட்சிப்படுத்தவோ அல்லது அழகு நுகர்விற்காகவோ வளர்ப்பது ஆகும். இதில் இயற்கை, செயற்கைத் தாவரங்களும் அடங்கும். இயற்கையில் பல தோட்ட அமைவுகள் இயல்பாக அமைதலும் உண்டு. இன்று வீட்டுத் தோட்டங்களே மிகவும் பரவலாக ஏற்பட்டுள்ளன. கீரைகள், காய்கறிகள், பழம் தரும் மரங்கள், அழகுச் செடிகள் போன்றவை இதில் அடங்கும். பொது மரபாக இவை அனைத்துவகைத் தோட்டங்களையும் குறிக்கும். இயற்கையான சூழலில் காட்டு விலங்குகளை வளர்க்கும் விலங்கு காட்சியகங்களும் உயிரியல் தோட்டங்களாகும். [1][2] மேற்கத்தியத் தோட்டங்கள் பெரும்பாலும் தாவரங்களால் நிரம்புவதால் அவை தாவரத் தோட்டங்கள் எனப்படுகின்றன. யப்பான் சென் தோட்டங்களைப் போன்ற சில கிழக்கத்திய மரபான தோட்டங்களில் தாவரங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக அல்லது முற்றிலும் இல்லாமலும் போகலாம்.

தோட்டங்கள் பல்வேறு பாணிகளும் கட்டமைவுகளும் கொண்டமையலாம். இவை நீர்நிலைகளிலும் குளங்களிலும் ஏரிகளிலும் சரிவான பள்ளத்தாக்குகளிலும் அமையலாம். தோட்டங்களில் குளுமைக்காகவும் அழகுக்காகவும் நீரூற்றுகளும் அமைக்கப்படுகின்றன.நீரூற்றுகளைச் சுற்றியும் தோட்டங்கள் அமைக்கப்படுவதுண்டு. சில தோட்டங்கள் அழகுக்காக மட்டுமே அமைக்கப்படுகின்றன. வேறு சில தோட்டங்கள் உணவையும் தனிப்பகுதியிலோ அல்லது அழகுதரும் தாவரங்களுக்கிடையே இடைமிடைந்தோ பயிரிடலால் தருவதுண்டு. உணவுத்ரும் தோட்டங்கள் பண்ணைகளை விட சிறியனவாகும். இவை மிகுந்த உழைப்பைக் கோருபவை. இவற்றின் நோக்கம் பொழுதுபோக்கே தவிர வணிகப்பயன் அல்ல. பூந்தோட்டங்கள் பலவகை உயரம், வண்ணம், கட்டமைவு, நறுமணம் கொண்டவையாகவும் புலன்களுக்கு ஆர்வமும் மகிழ்ச்சியும் தருவனவாகவும் அமைகின்றன.

தோட்ட வளர்ப்பு தோட்டத்தை வளர்த்துப் பேணிக்காக்கும் செயல்பாடு அல்லது கலையாகும். இப்பணி பயில்நிலைத் தோட்டக்காரர்களாலோ அல்லது தொழில்முறைத் தோட்ட வல்லுனர்களாலோ செய்யப்படுகிறது. தோட்டம் பூங்காக்களிலும் சாலையோரங்களிலும் பிற பொதுவெளிகளிலும் அமைக்கப்படுகிறது.

நில இயற்கை அழகியல் அத்துரைவல்லுனர்களின் தொழில்முறைப் பணியாகும். இவ்வல்லுனர்கள் பொதுவிட அமைப்புகளிலும் தொழிற்குழும வாடிக்கையாளர்களுக்கும் நில இயற்கை வடிவமைப்பைச் செய்து தருகின்றனர்.

Similar questions