CBSE BOARD X, asked by febinabose, 10 months ago

கோபல்லபுரத்து மக்கள் கட்டுரை for class 10

Answers

Answered by nareshsivakumar1
53

Explanation:

முன்னுரை :

கோபல்லபுரத்து மக்கள் என்ற கதை சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற கி. ராஜநாராயணன் அவர்கள் எழுதியது. அன்னமய்யா என்னும் பெயருக்கும், அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினை இக்கதையில் காண்போம்.

அன்னமய்யாவுடன் வந்த வாலிபன் :

சுப்பையாவுடன் புஞ்சையில் அன்று அருகு எடுக்கும் வேலை. அன்னமய்யா வேலைக்கு ஒரு ஆளை அழைத்து வந்தார். அன்னமய்யாவுடன் வந்தது சன்யாசியோ, பரதேசியோ இல்லை. கிட்டே போய் பார்த்த பிறகுதான் தெரிந்தது அவன் ஒரு வாலிபன். வாலிபனது தாடியும், அழுக்கு ஆடையும், தள்ளாட்டமும் அவனை வயோதிபனைப் போலவும் சாமியாரைப் போலவும் காட்டியது.

நீச்சுத் தண்ணீ ர் :

அன்னமய்யாவைப் பார்த்த அவ்வாலிபன், குடிக்கத் தண்ணி கிடைக்குமா? எனக் கேட்டான். அதற்கு அன்னமய்யா நீச்சுத் தண்ணீ தரவா? எனக் கேட்டான். கரிசல் மண்ணில் பாதி புதைக்கப்பட்டு இருந்த கரிய மண் பாத்திரத்தின் வாய் கற்களால் மூடப்பட்டிருந்தது. அன்னமய்யா மண்பாத்திரத்தின் மேலிருந்த கல்லை அகற்றினான்.

ஜீவ ஊற்று :

அன்னமய்யா கலசத்திலிருந்து கஞ்சின் நீத்துப்பாகத்தைச் சிரட்டையில் ஊற்றிக் கொடுத்தான். நீத்துப் பாகமாகிய மேல் கஞ்சை வாலிபன் குடித்ததும் கலயத்தை அலசி தெளிவு மறைந்த சோற்றின் மகுளி கஞ்சையும் வாலிபனுக்கு ஊற்றிக் கொடுத்தான் அன்னமய்யா.வாலிபனுக்குள் ஜீவ ஊற்று பொங்கியது. அவன் உற்சாகம் அடைந்தான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.4 கோபல்லபுரத்து மக்கள்

அன்னமய்யாவின் மனநிறைவு :

கஞ்சியைக் குடித்த வாலிபன் வேப்ப மர நிழலைச் சொர்க்கமாய் நினைத்துத் தூங்கினான். இதைக்கண்ட அன்னமய்யாவுக்கும் மனநிறைவு ஏற்பட்டது. மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்து அப்படியே தூங்கிவிடும் குழந்தையைப் போலவே அவ்வாலிபனையும் பார்த்தான்.

பெயர் பொருத்தம் :

தூக்கம் தெளிந்து எழுந்த வாலிபன் “உன் பெயர் என்ன?” என்று அன்னமய்யாவிடம் கேட்டான். அதற்கு அவன் அன்னமய்யா என்றான். எவ்வளவு பொருத்தம். ‘எனக்கு இன்று நீ இடும் அன்னம் தான்’ என் வாழ்வுக்கு மீண்டும் உயிர் கொடுத்தது என்று மனதுக்குள் கூறினான் அவ்வாலிபன்.

பரமேஸ்வரன் (மணி) :

அன்னமய்யா அந்த வாலிபனின் பெயரைக் கேட்டார். அவன் தன் பெயர் பரமேஸ்வரன் என்றும் தற்போதைய பெயர் மணி என்றும் சொன்னான். கம்மஞ்சோறும் துவையலும் கொடுத்தார்கள். பசியால் அதையும் உண்டு உறங்கினான்.

முடிவுரை :

அன்னமய்யா என்ற பெயருக்கு ஏற்ப அன்னமிட்டு மனிதநேயம் காத்த அன்னமய்யாவின் பெயர் அவனுக்கே பொருத்தமுடையதாக அமைகிறது. கம்மஞ்சோறும், துவையலும் கரிசல் மண்ணுடன் மணக்கின்றது.

Answered by sadiaanam
3

Answer:

கோபாலபுரம் என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சுற்றுப்புறமாகும்.

Explanation:

 இது அமைதியான, மரங்கள் நிறைந்த தெருக்களுக்காகவும், மியூசிக் அகாடமி மற்றும் கபாலீஸ்வரர் கோயில் போன்ற முக்கிய அடையாளங்களுக்கு அருகாமையில் இருப்பதாகவும் அறியப்படுகிறது.  கோபாலபுரம் பெரும்பாலும் குடியிருப்புப் பகுதியாகும், பல முக்கிய அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் அக்கம்பக்கத்தில் சொந்த வீடுகளைக் கொண்டுள்ளனர்.  இது பல பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கலாச்சார நிறுவனங்களின் தாயகமாகவும் உள்ளது.  கோபாலபுரம் சென்னையின் மற்ற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது, பொது போக்குவரத்து, ஷாப்பிங் சென்டர்கள் மற்றும் பொழுதுபோக்கு விருப்பங்களை எளிதாக அணுகலாம்.

For more such question: https://brainly.in/question/23938980

#SPJ2

Similar questions