India Languages, asked by armyblink1515, 3 months ago

புதிய நம்பிக்கை கட்டுரை ‌for grade 10​

Answers

Answered by amithasulthana1974
3

Explanation:

1.  முன்னுரை

2.  மேரியின் குடும்பம்

3.  மேரியின் இளமை

4. மேரிக்கு ஏற்பட்ட அவமானம்

5.  மேரியின் இயக்கம்

6. புதிய நம்பிக்கை

7. மேரியின்  கனவு நனவானது 

8.  பள்ளிப்படிப்பு

9.   பட்டமளிப்பு விழா

10. மேரியின் மேல்படிப்பு

11. மேரியின் மேல்படிப்பு

12.  தொடர் வண்டிப் பயணம்

13.  முடிவுரை

Essay writing  ;

1.  முன்னுரை :

                   வரலாற்றில்  பல மனிதர்கள்  சாதனைப் படைத்து வருகிறார்கள் . பலர்  மக்களுக்கு ஒற்றையடிப்  பாதையிட்டு  அதையே  பெருஞ்சாலையாக  ஆக்குகிறார்கள்.  கல்வி அறிவற்ற  இருள் சூழ்ந்த சமுதாயத்தில்  ஓராயிரம் சுடர்களை ஏற்றுகிறார்கள் .  அவர்களுள் "  மேரி மெக்லியோட் பெத்யூன் "  என்பவரைப் பற்றி   இக்கட்டுரையில் தெளிவாக காண்போம் .

2.  மேரியின் குடும்பம் :

        தந்தை -  சாங்

        தாய் -   பாட்ஸி

 பாட்டி  ,  சகோதர  சகோதரிகளைக் கொண்ட  ஏழ்மையான குடும்பம் .  காலை 5 மணி முதல் மாலை வரை  உழைக்கும்  கல்வியறிவில்லாத  குடும்பம் .

3.மேரியின் இளமைப்பருவம் :

          மேரிக்கு பதினோரு வயது . அனைத்துப் பிள்ளைகளில் மேரிஜேன்  வித்யாசமானவள் .  தனது தாய் அழைக்கும் போதும் ,  பருதி செடி பூ பூக்கும் போதும்  பூவை  முதலில் தான் தான் பார்க்கவேண்டும் என்ற  எண்ணம் கொண்டவள் .

4.  மேரிக்கு ஏற்பட்ட  துயரம் :

           மேரி   தன்  தாயுடன்  வெள்ளை மாளிகை பென்வில்சனின்  வீட்டிற்கு செல்கிறாள்.  அங்கே வெள்ளை குழந்தைகள் விளையாடுவதையும் ,பைண்டிங் செய்யப்பட்ட புத்தகத்தையும்  பார்த்து  அதை எடுத்தாள் .  அப்போது வில்சனின் இளையமகள்  புத்தகத்தை வெடுக்கென்று பிடுங்கி "  நீ இதை எடுக்கக்கூடாது !  உன்னால் படிக்க முடியாது !  என்று கூறினாள் .  இதனால் மேரி துவண்டாள் . உடனே வீட்டை விட்டு வெளியேறினார் .

5.  மேரியின் முடிவு :

          மேரி  மனம் கசந்தாள். " நான் படிக்க வேண்டும் . நான் பள்ளிக்கூடத்திற்கு போகவேண்டும் .  கடவுளே இதை எப்படியாவது நடக்க வேண்டும் . "  என  முடிவெடுத்து  இந்த இடம் கூறுகிறாள் .  " நான் படிக்க விரும்புகிறேன் " -   மேரி தனக்குத்தானே சொல்லிக்கொண்டான் .

Book to read  ;

6.  புதிய நம்பிக்கை ;

         வயலில் இருந்து  பருத்திப்  பொதிகை முதுகிலிருந்து இறக்கி வைக்கும்போது அறிமுகமில்லாத  ஒரு  பெண் தன் முன்னால் நின்று ,  புன்னகைத்து ,  " நான்தான் மிஸ் வில்ஸன்.. "  உன்னைப் போன்ற குழந்தைகள்  படித்தாக வேண்டும் .  எவ்வளவு சீக்கிரம் வேலைகளை முடித்துவிட்டு மேயெஸ்வில்லிக்கு   வருகிறாயா  ?  வா என்று கூறினாள் .

7.  மேரியின்  கனவு நனவானது :

           தன் வீட்டின் மேஜை மீது இருந்த  பைபிளை  எடுத்து நான் இதைப் படித்து விடுவேன்  எனது கனவு கண்டாள் . மேரிக்கு சிலேட் ,  சாக்பீஸ்  சாம் வாங்கிக் கொடுத்தார் . தான் கற்றுக் கொண்டு வந்து கோதர சகோதரிகளுக்கும் சொல்லித் தருவேன்  என்ற உறுதியோடு ,  மகிழ்ச்சியோடு ஐந்து மைல்கள்  நடந்து மேயெஸ்வில்லிக்குச் சென்றாள் .

8.  பள்ளிப்படிப்பு :

        மேரி  தனது பள்ளியில்  புதிது புதிதாக கற்றுக் கொண்டு வந்தாள் .  தனது பாதையில்  உயர உயர  போய்க்கொண்டிருக்கிறோம் என்று மனதில் அசை போடுவாள்....!

9.   பட்டமளிப்பு விழா :

                 மேரியின் மக்களுக்கு முதன்முதலில்  பட்டமளிப்பு விழா  மிகவும்   முக்கியத்துவம் வாய்ந்தது .  மதிப்புமிக்க  வெள்ளைத்தாள் சுருள்களில் ,

 " இந்தப் பட்டம் பெறும் மாணவர்கள் எழுதவும் படிக்கவும் கூடியவர்கள் "   என்று  எழுதப்பட்டிருக்கும் . மேரி தன்னுடைய டிப்ளொமாவை வாஞ்சையுடன்  பெற்று  நெஞ்சோடு  அணைத்துக்கொண்டாள் .

10. மேரியின் மேல்படிப்பு :

          மேரிஜேன்,  மேரியை அணைத்தபடி இப்போது  நீ என்ன செய்யப் போகிறாய் ?  என்றார் .   "மிஸ் ,  நான் என்னுடைய படிப்பைத்  தொடர விரும்புகிறேன் "  என்றாள்  .

11. மேரியின் மேல்படிப்பு :

            மீண்டும் பருத்திக் காட்டில் வேலைக்குத்  திரும்பினாள் . அப்போது  மிஸ் வில்சன்  அங்கு வந்து ,   " ஒரு வெள்ளைக்கார பெண்மணி ஒரு கருப்பின குழந்தையின் படிப்பிற்காக பணம் அனுப்பியிருக்கிறார் . அதை பெறுவதற்குரிய  ஆளாக நீதான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாய் . டவுனுக்குப் போக வேண்டும்  தயாராகு "  என்றார் .

12.  தொடர் வண்டிப் பயணம் :

          குடும்பத்தாரும் அக்கம்பக்கத்தவரும்  தெருவில் சிலரும்  குழுவாக சேர்ந்து ரயில் நிலையத்தை அடைந்தனர் . அங்கே மிஸ் வில்சன்  மேரியை  அணைத்து    செல்லவேண்டிய இடம் ,  சந்திக்க வேண்டிய ஆசிரியர் பற்றிய குறிப்புகளை  விளக்கினார் . அனைவரும் மேரியை பெருமிதத்தோடு  வாழ்த்தி  வழி அனுப்பி வைத்தார்கள் .

"  குட் பை  மேரி " ,  " குட் பை "

"  வெற்றி உண்டாகட்டும் "

" குட் பை மேரி "  வாழ்த்தொலிகள் வந்துகொண்டே இருந்தன . எனக்காக மகேஷ் சாதனை படைப்போம் கையசைத்து விடைபெற்றாள் . ரயில் வேகமெடுத்தது .

13.  முடிவுரை :

                 மேரி  கறுப்பினத்தின் சாதாரணப் பெண்ணாக பிறந்து   தனது முயற்சியாலும் பலரது உதவியாலும்  "  உனக்குப் படிக்கத் தெரியாது "  என்ற வார்த்தையை  உடைத்தெறிந்து சாதித்தாள் . மேரியைப்  போலவே  அவமானங்களை  எளிதாகக் கடந்து வெற்றிப் படிகளில் ஏறி சாதனை புரிவோம்..

   

Similar questions