India Languages, asked by subash123456, 5 months ago

Form a katturai pls
Only Tamil
Don't spam​

Attachments:

Answers

Answered by jeyapreethapreetha
1

Answer:

கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகவும் அரசின் உத்தரவுப்படி கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.

பொங்கல் பண்டிக்கைகு விசேஷம் ஒன்று உண்டு. சூரிய பகவான், தை மாதத்திலிருந்து ஆனி மாதம் வரை ஆறு மாதங்களுக்கு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கிறார். இதை உத்தராயண காலம் என்பார்கள்.

அதேபோல ஆடி முதல் மார்கழி வரை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணமாகிறார். இதை தட்சிணாயணம் என்பார்கள்.

இந்த உத்தராயண காலத்தின் தொடக்கத்தை ஆதி காலத்தில் இந்திர விழாவாகக் கொண்டாடியிருக்கிறார்கள். அதுதான் இன்றைய பொங்கல் விழா.

இந்திர விழா அக்காலத்தில் கிட்டத்தட்ட 28 நாட்களுக்கு கொண்டாடப்பட்டதாம். இந்திரனுக்கான விழாவாக இது கொண்டாடப்பட்டுள்ளது. இதனால்தான் இந்த விழாவின் முக்கிய அம்சமாக, இந்திரனின் கரும்பு வில்லை நினைவு கூரும் விதமாக கரும்பு பிரதான இடத்தைப் பிடித்துள்ளது.

உத்தராயண காலத்தின் தொடக்க நாட்களை போகிப் பண்டிகை, பொங்கல் பண்டிகை, உழவர் திருநாள் (மாட்டுப் பொங்கல்) என கொண்டாடுகிறார்கள் இப்போது. தற்போது காணும் பொங்கலும் கடைசி நாள் விழாவாக இணைந்துள்ளது

போகி, பொங்கல் பண்டிகையின் முதல் திருநாளாக வருகின்றது. போகி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தின் கடைசி நாள் கொண்டாடப்படுகிறது. அதாவது ஜனவரி 13 அல்லது 14ஆம் தேதிகளில் வரக் கூடியதாக இருக்கும். இந்தாண்டு 2021 ஜனவரி 13 (மார்கழி 29) புதன் கிழமை போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாவட்டங்களில் வெகு சிறப்பாக போகி கொண்டாடப்படுகின்றது.

பழையன கழிதலும், புதியன புகுதலும் தான் இந்த போகியின் மிக முக்கிய நோக்கம். அதாவது பயனற்ற பழையனவற்றை வெளியேற்றி, விட்டெறியக் கூடிய நாளாக கருதப்படுகின்றது.

பழையனவற்றைப் போக்கக் கூடிய இந்த பண்டிகைக்கு போக்கி என்ற பெயர் இருந்தது, அது காலப்போக்கில் மருவி போகி என மாறியுள்ளது. அந்த கால வழக்கப்படி கடந்த ஆண்டிற்கு நன்றியை தெரிவிக்கும் விதமாகவும், புது ஆண்டை வரவேற்கும் விதமாகவும் போகி பண்டிகை கொண்டாடப்பட்டது.தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை தைத் திங்கள் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தமிழர்களுக்கே மிகவும் சிறப்பான ஒரு நாள். இந்த நாளன்று உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் சாதி, மதம் என்ற எந்த ஒரு வேறுபாடில்லாமல், அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடப்படும் ஒரு பண்டிகை.

சொல்லப்போனால், அது தமிழர்களின் ஒரு தேசிய திருவிழா என்றும் சொல்லலாம். ஏனெனில் இந்த பொங்கல் பண்டிகை உலமெங்கும் இருக்கும் தமிழர்களால் இன்றும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. ஆனால் பலருக்கும் இந்த பொங்கல் பண்டிகை எதற்கு கொண்டாடுகின்றோம் என்றே தெரியாது. தெரியாமலேயே இத்தனை வருடங்களாக பலரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றோம். சரி, இப்போது இந்த பொங்கல் பண்டிகை எதற்கு கொண்டாடுகின்றோம் என்று பார்ப்போமா!!!

இந்த உலகில் மனிதன் உயிர் வாழ்வதற்கு வேண்டிய அடிப்படை தேவைகளுள் ஒன்று தான் உணவு. பழங்காலத்தில் மக்கள் உயிர் வாழ்வதற்கு உணவைத் தேடி அலைந்துள்ளனர். அப்போது அந்த நிலையை மாற்றுவதற்கு, மக்கள் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு விவசாயத்தில் ஈடுபட்டு, உணவை உற்பத்தி செய்ய முயன்றனர். அவ்வாறு அயராது உழைத்ததன் பலனாய், அவர்கள் நெல்லை பயிரிட்டு அறுவடை செய்தனர். இப்போது தமிழ்நாட்டின் முதன்மை உணவுப் பொருளே அரிசி தான்.

பொதுவாக இந்த நெல்லானது ஆடி மாதத்தில் இருந்து பயிரிடப்படும். அப்போது இந்த உணவுப் பொருளை விளைவிக்க உறுதுணையாக இருந்த இயற்கை மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தான் பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்றோம். இந்த பொங்கல் பண்டிகையானது நான்கு நாள் கொண்டாடப்படும்.

தை மாதம் இரண்டாம் நாள் கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கலை, திருவள்ளுவர் நாள் என்றும் சொல்வார்கள். பொதுவாக இந்த நாளில் விவசாயம் செய்வதற்கு பெரிதும் உதவியாக இருந்த கால்நடைகளுக்கு நன்றியை செலுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் பிறந்த திருவள்ளுவர் தமது திருக்குறளின் மூலம், தமிழின் பெருமையையும், தமிழர்களின் பெருமையையும் உலகிற்கு தெளிவாக என்றும் அழியாத வகையில் வெளிப்படுத்தியுள்ளதால், இந்த நாளை திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடுகின்றோம்.

இந்த நாள் தை மாதம் மூன்றாம் நாள் கொண்டாடப்படுகிறது. இதனை கன்னிப் பொங்கல் என்றும் அழைப்பார்கள். இந்த நாளன்று உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கு செல்வது மற்றும் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவது போன்றவை அடங்கும். அதுமட்டுமின்றி இந்த நாளன்று தமிழர்களின் வீர விளையாட்டுக்கள் பலவும் நடைபெறும், முக்கியமாக இந்த நாளானது பெண்களுக்குரியது. ஏனெனில் இந்த நாளில் பெண்கள் பொங்கல் பானையில் கட்டியிருக்கும் மஞ்சள் கொத்தினை, முதிர்ந்த சுமங்கலிகள் ஐந்து பேரின் கையில் கொடுத்து வாங்கி, அதனை முகம் மற்றும் உடலில் பூசுவார்கள்.

hi mate hope it helps you

please mark me as brainliest

Similar questions