India Languages, asked by gayathrisacttivel200, 9 months ago

Global warming essay in Tamil using the given hints: munnurai - ulagaveppamayamadhal - kadugalin azhivu - manidhathevaigal - mazhai yinmaiyal vilaiyum kedugal - marangal valarpu -mudivurai urgent pls answer

Answers

Answered by hayarunnisamuhammedp
3

Answer:

இப்போது எங்கு திரும்பினாலும் குளோபல் வார்மிங், கிளைமேட் சேஞ்ச் என்பது போன்ற வார்த்தைகள் கேட்கின்றன. உலகம் அழிவின் விளிம்பை நோக்கிச் செல்கிறது. புயல், வெள்ளம் தாறுமாறாக அதிகரித்திருப்பதற்கும், மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கும் இவைதான் காரணம் என்கிறார்கள். இப்படி ஒட்டுமொத்த உலகுக்கே ஆபத்தை உருவாக்கும் குளோபல் வார்மிங், கிளைமேட் சேஞ்ச் என்றால் என்ன? சிக்கலான அறிவியல், சுற்றுச்சூழல் விஷயங்களாகக் கருதப்படும் புவிவெப்பமடைதல், பருவநிலை மாற்றம் பற்றி எளிமையாகப் புரிந்துகொள்ள, இதோ ஒரு வழிகாட்டி.

.புவி வெப்பமடைதல் (Global Warming): வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்கள் அதிகரிப்பதால், பூமி இயல்புக்கு மாறாக வெப்பமடைவதே புவி வெப்பமடைதல். கடந்த 100 ஆண்டுகளில் பூமியின் சராசரி வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இந்தக் காலத்தில் பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற புதைபடிம எரிபொருள்களை கட்டுமீறி பயன்படுத்தியதும், காடழிப்பும் பசுங்குடில் வாயுக்களின் அளவை அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம்.

2.காலநிலை மாற்றம் (Climate Change): புவி வெப்பம் அடைவதால் பூமியின் பருவகாலநிலை, தட்பவெப்பநிலை, இயற்கைச் சீற்ற நிகழ்வுகள் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களே காலநிலை மாற்றம். ஒரு பகுதியின் சராசரி வானிலையில் ஏற்படும் மாற்றம்தான் காலநிலை மாற்றம் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.

3.பசுங்குடில் வாயுக்கள் (Greenhouse Gases): பூமியின் வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் ஒரு போர்வை போல சேகரமாகி இருக்கும் நீராவி, கார்பன் டை ஆக்சைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட வாயுக்கள் சூரிய வெப்பத்தை பூமிக்குள் அனுமதிக்கின்றன. ஆனால், பூமியின் மேற்பரப்பில் இருந்து எதிரொளிக்கப்படும் வெப்பத்தை (அகச்சிவப்பு கதிர்களை) விண்வெளிக்கு அனுமதிக்காமல் தடுத்து, பூமிக்கே திரும்ப அனுப்புகின்றன. இதனால் பூமி கூடுதல் வெப்பமடைகிறது. கிரீன்ஹவுஸ் எனப்படும் கண்ணாடிக் கூடு போல, இந்த வாயுக்கள் பூமியை வெப்பமடையச் செய்வதால் இந்தப் பெயர் வந்தது.

4.பசுங்குடில் விளைவு (Greenhouse Effect): வளிமண்டலத்தில் பசுங்குடில் வாயுக்கள் இல்லை என்றால், பூமியின் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் குறைவாகவே இருக்கும். அப்போது எல்லாம் உறைந்து போய் உயிரினங்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே, பூமியில் உயிரினங்கள் வாழ பசுங்குடில் விளைவு அவசியமே. ஆனால் தொழிற்புரட்சிக்குப் பின் பசுங்குடில் வாயுக்களின் வெளியீடு எல்லை கடந்து அதிகரித்துவிட்டதால், அவற்றின் அடர்த்தி அதிகரித்து அதிக வெப்பத்தை பிடித்து வைத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டன. இதுவே பிரச்சினைக்குக் காரணம்.

5.புதைபடிம எரிபொருள்கள் (Fossil Fuels): நிலத்தில் இருந்த தாவரங்கள், கடலில் இருந்த உயிரினங்கள் நிலத்துக்கு அடியில் புதைந்து, கடும் அழுத்தத்துக்கு உள்ளாகி கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு மக்கும்போது, கார்பனை மூலப்பொருளாகக் கொண்ட நிலக்கரி, கச்சாஎண்ணெய், எரிவாயு ஆகியவை உருவாகின்றன. இவற்றை பயன்படுத்துவதால், பசுங்குடில் வாயுக்கள் அதிக அளவில் வெளியிடப்படுகின்றன.

6.புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy): நிலக்கரி, பெட்ரோல் போன்ற மரபு சார்ந்த ஆற்றல்களுக்கு மாறாக, சூரியசக்தி, காற்று, புனல் (தண்ணீர்) ஆற்றல் போன்ற எக்காலத்திலும் தீராத, மீண்டும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் ஆதாரங்கள். இதன் மற்றொரு பெயர் மரபுசாரா எரிசக்தி.

7.தட்பவெப்பநிலை (Weather): ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட காலத்தில் வளிமண்டலம் எப்படிப்பட்ட நிலையில் உள்ளதோ அதுவே தட்பவெப்பநிலை. காற்று, வெப்பநிலை, ஈரப்பதம், வளிமண்டல அழுத்தம், மேகங்கள், மழைப்பொழிவு ஆகிய அம்சங்களின் மூலம் இது அளவிடப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் நேரத்துக்கு நேரம், நாளுக்கு நாள், பருவத்துக்குப் பருவம் தட்பவெப்பநிலை மாறுபடும்.

Explanation:

HOPE THIS HELPS YOU BETTER

PLZ MARK ME AS BRAINLIEST

Answered by Anonymous
0

Answer:

புவி வெப்பமடைதல் என்பது பூமியின் வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலை மாறுபட்ட காரணங்கள் காரணமாக அதிகரிப்பதாக வரையறுக்கப்படுகிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, மனிதர்களின் நடவடிக்கைகள் காரணமாக, வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இப்போது இந்த கட்டுரை அதன் காரணங்கள், விளைவுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகள் சிலவற்றை வழங்குகிறது.

புவி வெப்பமடைதலின் பிரதான காரணங்கள்: மனித நடவடிக்கைகள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் தேவையற்ற வாயுக்கள் அல்லது பசுமை இல்ல வாயுக்களின் வாயுவும் அடங்கும். சராசரியான உலகளாவிய மேற்பரப்பு வெப்பநிலை 21 ஆம் நூற்றாண்டில் 1.1 முதல் 6.4 ° C வரை உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது

வாயுக்களின் உட்பொருளின் விளைவாக. பூமியில் நீராவி, கார்போண்டிப்சைடு (CO2), மீத்தேன் (CH4), ஓசோன் (O 3) மற்றும் நைட்ரோஸ் ஆக்சைடு (N2O) ஆகியவை அடங்கும். இந்த வாயுக்கள் திடமான கழிவுப்பொருட்களை, உராய்ந்த எரிபொருள்கள், விறகு மற்றும் நவீன விவசாயம் ஆகியவற்றை எரித்து தயாரிக்கின்றன. இதேபோல்,

வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இந்த தேவையற்ற வாயுக்களை உருவாக்கும் பிற காரணிகளாக இருக்கின்றன. ஆகையால்,

நகர்ப்புறமயமாக்கல், தொழில்மயமாக்கல், மக்கள்தொகை மற்றும் காடழிப்பு ஆகியவை என்று நாம் கூறலாம்

உலகளாவிய வெப்பமயமாதலின் மனிதனால் உருவாக்கப்பட்ட காரணங்கள் அளவிடப்படுகின்றன.

இதேபோல், எரிமலை வெடிப்புகளும் வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலையை அதிகரிக்கச் செய்கின்றன, ஆனால் அது மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாது.

பூகோள வெப்பமயமாதலின் சில ஆபத்தான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றில் சில பனிப்பொழிவு, கடல் மட்ட உயர்வு, கடுமையான மழை, மழை போன்ற வானிலை வரம்புகள், மற்றும் பல. புவி வெப்பமடைதலின் பிற விளைவுகள் மழையளவு, விவசாய விளைச்சல், வர்த்தக பாதை, பனிப்பாறை பின்வாங்கல், இனங்கள் அழிவு மற்றும் புதிய நோய்களின் வெளிப்பாடு ஆகியவை அடங்கும். இதனால், இந்த இயற்கை பேரழிவுகள் புவி வெப்பமடைதலுக்கு காரணமாக அமைந்தன.ஏனெனில் இந்த பேரழிவுகளால், அதிகரித்துவரும் இறப்புக்கள், மக்கள் இடப்பெயர்ச்சி, பொருளாதார இழப்புக்கள், நிலச்சரிவுகள், வெள்ளப் பெருக்கு போன்றவை நேரடியாக காரணமாக இருக்கும். உதாரணமாக, மக்கள் சூடான பிராந்தியங்களில் குடியேற முடியாது, மேலும் குளிர்ச்சியான பகுதிகளுக்கு குடிபெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், இது சில குளிர் நிலங்களில் அதிக மக்கள் தொகையை ஏற்படுத்துகிறது.

Explanation:

hope it helped you friend if it helps you mark it as brainliest

Similar questions