India Languages, asked by hamsa2662, 3 months ago

நூலகம் பற்றி கட்டுறை எழுதுக

good evening​

Answers

Answered by kramesh77
1

Answer:

நூலகம்

நூலகம் பயன்கள்:

நூலகம் அறிவை வளர்க்கும் ஓர் இடமாகும். வாழ்வியல், வரலாறு, இலக்கியம், நிலநூல், மேற்கோள் நூல்கள், சிறுகதைகள், மனோதத்துவம், வார, மாத சஞ்சிகைகள், நாளிதழ்கள் அனைத்தும் நூலகங்களில் கிடைக்கும்.

நூலகம் எங்கெங்கும்:

நம் நாட்டில் கிராமம் முதல் நகர்ப்புறங்களிலும் நூலகங்கள் இருக்கின்றன. அத்துடன் தேசிய நூலகம், பொது நூலகங்களும், மற்றும் நடமாடும் நூலகங்களும் இருப்பினும் அதனைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் படித்துப் பயனடையும் வகையில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அறிய வேண்டிய சில பலன்கள்:

நூலகத்தில் அறிவை வளர்க்கக்கூடிய பலதரப்பட்ட விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம். நமது ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் விஷயங்களும் அங்கு கிடைக்கும். மேலும், நமது மொழி வளத்தைப் பெருக்குவதற்கும் வாசிப்பைச் சரளமாக்குவதற்கும் நூலகம் முக்கிய பங்கை வகிக்கிறது.

“நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்று ஒளவையார் கூறியுள்ளார். நாம் எவ்வளவு படிக்கிறோமோ அந்த அளவிற்கு நமது அறிவு வளர்ச்சியடையும். அதற்கு முதுகெலும்பாகத் திகழ்வது நூலகமே.

தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் நூலத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, மாணவர்களாகிய நாமும் நூலகம் தரும் பயம் அறிந்து அங்கு நூல் பல கற்று அறிவை வளர்த்துக் கொள்வோம்.

படிப்பில் ஆழ்ந்த படிப்பு, அகன்ற படிப்பு, என இருவகை உண்டு. பொதுத்தேர்வுக்குப் படிப்பதை ஆழ்ந்த படிப்பு என்றும் போட்டித் தேர்வுக்கு படிப்பதை அகன்ற படிப்பு என்றும் கொள்ளலாம். அதே போல சீரிய படிப்பும் உண்டு. பொழுது போக்குக்காக நூல்களை படிப்போரும் இருக்கிறார்கள்.

சிறப்பு :

ஒரு மாணவன் நூலகம் சென்று பாட நூல்களோடு பிறநூல்கள், மாத இதழ்கள், நாளிதழ்கள் ஆகியவற்றை கற்று வந்தால் நிச்சயம் அவன் பல்துறை அறிவுடைய சிறந்த மாணவனாக வருவான். வளர்ச்சி என்பது படிப்படியாக நிகழக்கூடிய ஒன்று. ஒரு பயிர் முறையாக பராமரிக்கப்பட்டு வந்தால் மட்டுமே அது நல்ல முறையில் வளர்ந்து பலன் கொடுக்கும். அதுபோல மாணவர்களின் வளர்ச்சியும் சீராக அமைந்து உரிய பலன் கிடைக்க நூல்களை படிப்பதை அன்றாடப் பணியாகக் கருத வேண்டும்.

முடிவுரை:

நூலகங்களைப் பேணிப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். நூலக புத்தங்களில் குறிப்புகள் எழுதுவதோ தாள்களை மடிப்பதோ, கிழிப்பதோ, எச்சில்தொட்டு புரட்டுவதோ கூடாது. ஒரு மலரைக் கையாள்வது போல் மென்மையாகக் கையாள வேண்டும்.

and good evening, eppadi irrukinga, tamila ?

Answered by aniruth1234
2

HI I'M FINE

AND UH

SAPTEN NEENGA

GONNA SLEEP

GOODNIGHT SWEET DREAMS TC

Similar questions