History, asked by shahanabhuvanesh, 1 year ago

history of kamarajar in tamil

Answers

Answered by keerthika1998lekha
3
காமராஜர் விருதுநகரில் பிறந்தவர்.மராஜர் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார்.1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார்.காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார்.காலப்போக்கில் காமராஜர், விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

கல்விக்கண் கொடுத்தவர்

ஒருமுறை சுற்றுப்பயணத்தின் போது ஒரு கிராமத்திற்கு காரில் காமராஜர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவனைப்பார்த்து காரை நிறுத்தச் சொன்னார். காரைவிட்டு இறங்கி சிறுவனிடம் வந்தார் காமராஜர்.

“தம்பி நீ பள்ளிக்கூடம் போகலியா? ஏன் போகவில்லை?” எனக் கேட்டார்.

“எங்க ஊரில் பள்ளிக்கூடமே கிடையாதே. நான் எப்படி பள்ளிக்கூடம் போகமுடியும்?உங்கள் ஊரில் பள்ளிக்கூடம் இருந்தால் நீ படிப்பாயா?” என அவனிடம் கேட்டார் காமராஜர்.

“பள்ளிக் கூடத்திற்கு நான் போயிட்டால் சோறு யார் தருவார்கள்?” என எதிர்க்கேள்வி கேட்டான் சிறுவன்.

“ஓ…அப்படியா..., சரி உனக்கு சோறு தந்தால் நீ படிப்பாயா?” என காமராஜர் கேட்டார்.
“ஆமாம்” என்ற சிறுவன், “என் அப்பாவிடம் கேளுங்கள்” என்றான்.

உணவும் கொடுத்து பள்ளிக்கூட வசதியும் செய்து கொடுத்தால் கிராமங்களில் கல்வித்தரம் உயரும் என நம்பிய காமராஜர் சென்னை வந்த உடனே அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் நெ.து. சுந்தர வடிவேலு அவர்களை அழைத்து “மதிய உணவுத திட்டத்தை” உடனே அமுல் படுத்துங்கள்.

விடுதலைப் போர் :
1952 - நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
1954 - காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார்.
 காமராஜர் ஆட்சியில்தான் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சீரிய திட்டமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. சுமார் 30 ஆயிரம் ஆரம்பப்பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.

முடிவுரை:
ஏழை, பணக்கார மாணவர்கள் என்ற வித்தியாசம் கல்வி நிலையங்களில் இருக்கக்கூடாது என்பதை உணர்ந்த காமராஜர் சீருடை வழங்கும் சீரிய இலவச்ச் சீருடை வழங்குவதன் மூலம் ஏழை மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் ஏற்படவும் வழிவகுத்தார்.விருதுநகரிலே ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கற்கவும் வசதியற்ற சூழ்நிலையிலே வளர்ந்து, வாழ்ந்து, பின்னர் அரசியலிலே தொண்டராக ஒரு மாபெரும் கட்சியிலே இணைந்து, தனது உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர். அவரது சாதனைகள் யாவுமே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவைகள்.1975- ஆம் வருடம், அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி, காமராஜர் இறந்தார்.

Answered by shilpasundhar1996
4

பெருந்தலைவர் என்று தமிழ்நாடு மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் காமராஜர். இவர் ஏழை எளிய மக்களுக்காக ஆற்றிய பணிகள் அதிகம். இவர் முதல்வராக இருந்த போது ஏழை மக்களுக்கு அது பொற்காலமாக இருந்தது. அந்த அளவிற்கு அவர் தாழ்த்தப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு அவரை தனது உதவிகளை அவரது திட்டத்தின் மூலம் நிறைவேற்றினார். அந்த ஒப்பற்ற வள்ளல் குறித்து இந்த பதிவில் நாம் முழுமையாக காணஉள்ளோம். காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவினை வாசிக்கவும்.

காமராஜரின் பிறப்பு மற்றும் பெயர்க்காரணம் :

காமராஜர் தமிழகத்தின் விருதுநகரில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மை என்ற தம்பதிக்கு 1903ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி மகனாய் பிறந்தார். இவர் பிறந்ததும் இவரது தந்தை அவர்களது குலதெய்வத்தின் அருளால் பிறந்த பிள்ளை என்பதனால் அவருடைய குலதெய்வமான "காமாட்சி" என்று பெயர் சூட்டினார்.



அவரது அம்மா அவரை ஆசையாக ராஜா என்று அழைப்பார்கள். இந்த பெயரே நாளடைவில் மருவி காமராஜர் என்றானது.



இயற்பெயர் - காமாட்சி


பிறந்த தேதி மற்றும் ஆண்டு - ஜூலை 15, 1903


பெற்றோர் - குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மை


பிறந்த ஊர் - விருதுநகர் [தமிழ்நாடு]


மருவிய பெயர் - காமராஜர்



கல்வி மற்றும் படிப்பு:


தனது தொடக்க பள்ளி படிப்பை தனது சொந்த ஊரான விருதுநகரில் சத்திரிய வித்யா சாலா என்ற பள்ளியில் பயின்றார். காமராஜர் படிக்கும் போது இருந்தே அவருக்கு விட்டுக்கொடுக்கும் பண்பு மற்றும் அமைதியாக எல்லோருடனும் பேசும் பண்பு போன்ற நல்ல குணங்களை தன்னுள் வைத்திருந்தார்.



இருப்பினும் அவரால் தொடந்து படிக்கமுடியவில்லை. அதன் காரணம் யாதெனில் அவரது பள்ளி படிப்பினை துவங்கிய சிறிது காலத்தில் அவரது தந்தை இறந்து விட்டார் . இதன் காரணமாக அவரது தாய் அவரை மிகவும் கடினப்பட்டு வளர்த்தார். தாயின் கஷ்டத்தை உணர்ந்த காமராஜர் தனது படிப்பினை துறந்து தன்னுடைய அம்மாவிற்காக அவரது மாமாவின் துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார்.

Source: https://dheivegam.com/kamarajar-biography-tamil/

Similar questions