Environmental Sciences, asked by rohitttty3748, 1 year ago

how they tour experience write letter to friend in tamil

Answers

Answered by nithishgaming
2

ஊட்டி: கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து சில நாட்களேனும் தப்பிக்கவும், கோடை விடுமுறையை அனுபவிக்கவும் ஊட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வார இறுதி விடுமுறை மற்றும் மே தின விடுமுறையையொட்டி கடந்த இரு நாட்களில் மட்டும் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு 42 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்தனர். முக்கியமான சுற்றுலா தலங்களான தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், கோத்தகிரி சாலை ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக் கூட இடம் இல்லை. ஊட்டிக்கு வரும் லாரி போன்ற கனரக வாகனங்கள் லவ்டேல் சந்திப்பில் இருந்து மஞ்சகொரை வழியாக ஊட்டிக்கும், கூட்செட் சாலை வழியாக கூடலூருக்கும் திருப்பி விடப்படுகிறது.

Similar questions