பொருத்துக i. சாமுத்ரி - 1. அச்சுப் பதிப்பு ii. ஹென்ரிக்ஸ் - 2. ஹைதராபாத் நிஜாம் iii. முஜாபர் ஜங் - 3. சந்தா சாகிப் iv. ஆற்காட்டு நவாப் - 4. கள்ளிக்கோட்டை அரசர் (அ) 4, 1, 2, 3 (ஆ) 4, 3, 2, 1 (இ) 3, 2, 1, 4 (ஈ) 2, 1, 4, 3
Answers
Answered by
0
4, 1, 2, 3
சாமுத்ரி - கள்ளிக்கோட்டை அரசர்
- இந்தியாவிற்கு போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோடகாமா வந்த போது, கள்ளிக்கோட்டையின் அரசராக இருந்தவர் சாமுத்ரி (சமாரின்) ஆவார்.
- சாமுத்ரியின் வரவேற்பு மற்றும் நட்பினால் வாஸ்கோடகாமா மகிழ்ச்சி அடைந்தார்.
ஹென்ரிக்ஸ் - அச்சுப் பதிப்பு
- போர்த்துகல் நாட்டு யூதரான ஹென்ரிக்ஸ் தமிழ் அச்சுப் பதிப்பின் தந்தை என அழைக்கப்பட்டார்.
முஜாபர் ஜங் - ஹைதராபாத் நிஜாம்
- பிரெஞ்சுக்கார்களின் புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளே அவர்களின் முயற்சியினால் ஹைதராபாத் நிஜாமாக முஜாபர் ஜங் பதவி ஏற்றார்.
ஆற்காட்டு நவாப் - சந்தா சாகிப்
- ஆற்காட்டு நவாப் அன்வாருதீன் ஆம்பூர் போரில் கொல்லப்பட்ட பிறகு சந்தா சாகிப் நவாப்பாக ஆற்காட்டினுள் நுழைந்தார்.
Similar questions