பின்வரும் சொற்களை தாவர திசு வளர்ப்பு முறையோடு வரிசைப்படுத்தி
விவரி.
(i) புறத்தோற்றமாக்கம் (1) வலுப்பெறுதல்
(iii) உட்செலுத்துதல் (iv) கரு உருவாக்கம்
Answers
Answered by
0
திசு வளர்ப்பு முறையோடு வரிசை
- புறத்தோற்றமாக்கம்
- வலுப்பெறுதல்
- உட்செலுத்துதல்
- உருவாக்கம்
1. புறத்தோற்றமாக்கம்:
- ஆக்ஸிஜன் மற்றும் சைட்டோகைனின்களின் தூண்டுதலால் கேலஸிலிருந்து உறுப்புகள் தோற்றுவிக்கப்படுகின்றன.
- இது புறத்தோற்றமாக்கம் எனப்படும்.
2. வலுப்பெறுதல்:
- தாவர திசு வளர்ப்பின் முக்கிய படிநிலை வலுப்பெறுதல் நிலையாகும்.
- இந்த படிநிலையில், இனத் தாவரங்களைப் படிபடியாக இயற்கை சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றமடைய செய்வதே வலுப்பெறுதலாகும்.
- இறுதியாக ஊடகத்தில் வளர்க்கப்படும் தாவரங்கள் நிலத்திற்கு மாற்றப்படுகின்றன.
3. உட்செலுத்துதல்:
- வளர்ப்பு ஊடகத்திற்கு தாவரத்தின் திசு அல்லது தாவரங்களின் பகுதிகளாகிய வேர், தண்டு மற்றும் இலை ஆகியவற்றை செலுத்துவது உட்செலுத்துதல் எனப்படும்.
- இது சுத்தமான லாமினார் காற்றோட்ட அறையில் நடைபெறும்.
4. கரு உருவாக்கம்:
- கேலஸிலிருந்து தண்டு மற்றும் வேரை உடைய இரு துருவ அமைப்பு தோன்றுவதே கரு உருவாக்கம் எனப்படும்.
- இந்த கருக்கள் உடல கேலஸ் திசுவிலிருந்து தோன்றுவதால் உடல கருக்கள் அல்லது எம்பிரியாய்டுகள் அல்லது சோமகுளோனல் கருக்கள் என்றும் அழைக்கப்படுகின்றது.
Similar questions