(i) மிக முன்னதாகவே வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812இல் வெளியிடப்பட்டது. (ii) பனையோலைகளில் எழுதப்பெற்ற பல்வேறு தமிழ் இலக்கண இலக்கிய கையெழுத்துப் பிரதிகளை மறைமலையடிகள் சேகரித்துத் தொகுத்தார்.(iii) இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் இல்லாத ஒப்புமை திராவிட மொழிகளுக்கிடையே நெருக்கமாக நிலவுவதை நிரூபித்தார். தமிழின் தொன்மையையும் நிரூபித்தார்.
(iv) திரு.வி. கல்யாணசுந்தரம் தொழில் சங்க இயக்கத்தின் தொடக்ககால முன்னோடியாக இருந்தார். அ) (i), (ii) ஆகியன சரி
ஆ) (i), (iii) ஆகியன சரி இ) (iv) சரி ஈ) (ii), (iii) ஆகியன சர
Answers
Answered by
2
(i), (iii) ஆகியன சரி
- 1709 ஆம் ஆண்டு சீகன் பால்டு என்பவரால் முழுமையான அச்சகம் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது.
- 1812 ஆம் ஆண்டு தொடக்க கால தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் அச்சேற்றப்பட்டு வெளி வந்தது.
- பனை ஓலைகளில் எழுதப்பெற்ற பல்வேறு தமிழ் இலக்கண இலக்கிய கையெழுத்துப் பிரதிகளை சி.வை. தாமோதரனார் சேகரித்துத் தொகுத்து பதிப்பித்தார்.
- இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகள் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளுக்கு இடையில் இல்லாத ஒப்புமை திராவிட மொழிகளுக்கு இடையே நெருக்கமாக நிலவுவதை நிரூபித்தார்.
- மேலும் தமிழின் தொன்மையையும் நிரூபித்தார்.
- ம. சிங்காரவேலர் என்பவர் தொழில் சங்க இயக்கத்தின் தொடக்க கால முன்னோடியாக இருந்தார்.
Answered by
20
வினா:
(i) மிக முன்னதாகவே வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812இல் வெளியிடப்பட்டது. (ii) பனையோலைகளில் எழுதப்பெற்ற பல்வேறு தமிழ் இலக்கண இலக்கிய கையெழுத்துப் பிரதிகளை மறைமலையடிகள் சேகரித்துத் தொகுத்தார்.(iii) இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் இல்லாத ஒப்புமை திராவிட மொழிகளுக்கிடையே நெருக்கமாக நிலவுவதை நிரூபித்தார். தமிழின் தொன்மையையும் நிரூபித்தார்.
(iv) திரு.வி. கல்யாணசுந்தரம் தொழில் சங்க இயக்கத்தின் தொடக்ககால முன்னோடியாக இருந்தார். அ) (i), (ii) ஆகியன சரி
ஆ) (i), (iii) ஆகியன சரி இ) (iv) சரி ஈ) (ii), (iii) ஆகியன சர
விடை :
(i), (iii) ஆகியன
Similar questions