பின்வருவனவற்றில் அணிசேரா இயக்கத்துடன் தொடர்பு இல்லாதது எது? (i) அணிசேரா இயக்கம் என்ற சொல் வி.கிருஷ்ணமேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.(ii) இதன் நோக்கம் இராணுவக் கூட்டமைப்பில் சேர்ந்து வெளி
விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தைப் பராமரித்தல் ஆகும். (iii) தற்போது இது 120 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. (iv) இது பொருளாதார இயக்கமாக மாற்றமடைந்துள்ளது. அ) (i) மற்றும் (ii) ஆ) (iii) மற்றும் (iv) இ) (ii) மட்டும் ஈ) (iv) மட்டும
Answers
Answered by
0
Answer:
I don't understand please write in English or hindi
Answered by
0
(ii) மட்டும்
- அணிசேரா இயக்கம் என்ற சொல் ஆனது 1953 ஆம் ஆண்டு ஐ.நா. சபையில் உரையாற்றிய வி.கிருஷ்ண மேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
- அணி சேரா இயக்கத்தின் நோக்கம் ராணுவக் கூட்டணியில் சேராமல் வெளி நாட்டு விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தினைப் பராமரித்தலே ஆகும்.
- அணி சேரா இயக்கம் ஆனது 120 உறுப்பு நாடுகள், 17 பார்வையாளர் நாடுகள், 10 சர்வதேச நிறுவனங்கள் முதலியனவற்றினை கொண்டு உள்ளது.
- அணி சேரா இயக்கம் ஆனது அரசியல் இயக்கத்திலிருந்து பொருளாதார இயக்கமாக மாறியுள்ளது.
அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள்
- ஜவஹர்லால் நேரு (இந்தியா), டிட்டோ (யுகோஸ்லாவியா), நாசர் (எகிப்து), சுகர்னோ (இந்தோனேசியா) மற்றும் குவாமே நிக்ரூமா (கானா)
Similar questions