கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு (i) அல்புகர்க் இந்தியாவில் போர்த்துகீசியப் பேரரசை உண்மையில் நிறுவியவர் ஆவார். (ii) உடன்கட்டை ஏறும் வழக்கத்தை நிறுத்த அல்புகர்க் முயன்றார். அ. (i) சரி ஆ. (ii) தவறு இ. இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு
Answers
இரண்டும் சரி
- அல்மெய்டாவிற்கு பிறகு இந்தியாவின் போர்த்துகீசிய ஆளுநராக 1509 ஆம் ஆண்டு அல்புகர்க் பதவியேற்றார்.
- அல்புகர்க் இந்தியாவில் போர்த்துகீசியப் பேரரசை உண்மையில் நிறுவியவர் ஆவார்.
- பீஜப்பூரின் அரசர் யூசுப் அடில் கானைத் தோற்கடித்த இவர் 1510 ஆம் ஆண்டு கோவாவைக் கைப்பற்றி அதை முக்கிய வணிக மையமாக வளர்த்தார்.
- ஐரோப்பியர் இந்தியப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு, போர்த்துகீசியர் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் குடியேறுவதை அல்புகர்க் ஆதரித்தார்.
- அல்புகர்க் முஸ்லீம் வணிகர்களைத் தோற்கடித்து, தற்போது மலேசியாவில்உள்ள மலாக்காவை கைப்பற்றியதால் போர்த்துகீசிய பேரரசு விரிவடைந்தது.
- 1515 ஆம் ஆண்டு இவரின் கட்டுப்பாட்டின் கீழ் ஆர்மசு துறைமுகம் வந்தது.
- உடன்கட்டை (சதி) ஏறும் வழக்கத்தை நிறுத்த அல்புகர்க் முயன்றார்.
Explanation:
உடன்கட்டை ஏறல் என்பது ஒரு இந்து சமயச் சடங்கு ஆகும். கணவனை இழந்த மனைவி தன் கணவரின் சடலம் தீ மூட்டப்படும் போது அந்தத் தீயில் தன்னை அழித்துக் கொள்ளுதல் உடன்கட்டை ஏறுதல் எனப்படுகிறது. சில சமயங்களில் மனைவி தானாக முன்வந்து தீயில் விழ்ந்து அழிந்து கொள்ளலாம். பிற நேரங்களில் மற்றவர் அவரை வற்புறுத்தி உடன்கட்டை ஏற வைப்பர்.
"இந்து சமயத்தை சேர்ந்த விதவைப் பெண் இறந்த கணவனுடன் எரிக்கப்படுதல்"
1815 இற்கும் 1818 இற்கம் இடைப்பட்ட காலத்தில் வங்காள மாநிலத்தில் உடன்கட்டை ஏறல் 378 இல் இருந்து 839 ஆக அதிகரித்தது. உடன்கட்டை ஏறலுக்கு எதிரான பரப்புரை கிறிஸ்தவ மறைபரப்புனர்களான வில்லியம் கேரி போன்றோரினதும், பிராமண இந்து சீர்திருத்தவாதிகளான இராசாராம் மோகன் ராய் போன்றோரினதும் பெரும் முயற்சியால், இந்தச் சடங்கு ஆங்கிலேயர் ஆட்சியில் 1829 ஆம் ஆண்டு சட்டத்துக்கு எதிரானதாக மாநில அளவில் ஆக்கப்பட்டது