கீழ்கண்டவற்றைப் பொருத்தி சரியான
விடையைத் தேர்வு செய்க
பத்தி I பத்தி II
அ) பகிர்ந்து
வாழும் வாழ்க்கை
1. சிங்கம் மற்றும் மான்
ஆ) உதவி பெறும்
வாழ்க்கை
2. உருளைப்புழு மற்றும்
மனிதன்
இ) ஒட்டுண்ணி
வாழ்க்கை
3. பறவைகளும்
அணில்களும் உணவிற்குப்
போட்டியிடுதல்
ஈ) போட்டி
வாழ்க்கை
4. கடல் அனிமோன்
மற்றும் துறவி நண்டு
உ) கொன்றுண்ணி
வாழ்க்கை
5. பறவைகளும்
பாலூட்டிகளும் விதை
பரவுதலுக்கு உதவுதல்
அ) அ-4 ஆ-5 இ-2 ஈ-3 உ-1
ஆ) அ-3 ஆ-1 இ-4 ஈ-2 உ-5
இ) அ-2 ஆ-3 இ-1 ஈ-5 உ-4
ஈ) அ-5 ஆ-4 இ-2 ஈ-3 உ-1
Answers
Answered by
15
Answer:
அ) அ-4 ஆ-5 இ-2 ஈ-3 உ-1.........
Answered by
0
பொருத்துதல்
அ-4 ஆ-5 இ-2 ஈ-3 உ-1
பகிர்ந்து வாழும் வாழ்க்கை
- பகிர்ந்து வாழும் வாழ்க்கை முறையில் ஈடுபடும் இரு உயிரினங்களும் பலன் அடைகின்றன.
- (எ.கா) கடல் அனிமோன் மற்றும் துறவி நண்டு.
உதவி பெறும் வாழ்க்கை
- உதவி பெறும் வாழ்க்கையில் ஒரு உயிரி பலனடையும். மற்றொன்று நம்மையோ தீமையோ அடைவது கிடையாது.
- (எ.கா) பறவைகளும் பாலூட்டிகளும் விதை பரவுதலுக்கு உதவுதல்.
ஒட்டுண்ணி வாழ்க்கை
- ஓட்டுண்ணி வாழ்க்கை முறையில் ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்தினை உணவு, இருப்பிடம் முதலிய தேவைக்காக சார்ந்து வாழ்கிறது.
- (எ.கா) உருளைப்புழு மற்றும் மனிதன்.
போட்டி வாழ்க்கை
- குறைவான வளத்தினால் ஒரே சிற்றின அல்லது வெவ்வேறு சிற்றினத்தினை சார்ந்த உயிரினங்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
- (எ.கா) பறவைகளும் அணில்களும் உணவிற்குப் போட்டியிடுதல்.
கொன்றுண்ணி வாழ்க்கை
- கொன்றுண்ணி வாழ்க்கை முறையில் ஒரு விலங்கு மற்றொரு விலங்கினை உணவிற்காக வேட்டையாடுகிறது.
- (எ.கா) சிங்கம் மற்றும் மான்.
Similar questions