"கீழ்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை? (i) அணுக்கரு உலை மற்றும் அணுகுண்டு ஆகியவற்றில் தொடர் வினை நிகழும் (ii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்பட்ட தொடர்வினை நிகழும் (iii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்படாத தொடர்வினை நிகழும் (iv) அணுகுண்டு வெடித்தலில் தொடர்வினை நிகழாது அ) (i) மட்டும் சரி ஆ) (i) மற்றும் (ii) சரி இ) (iv) மட்டும் சரி ஈ) (iii) மற்றும் (iv) சர"
Answers
Answered by
2
(i) மற்றும் (ii) சரி
அணுக்கரு உலை
- அணுக்கரு உலை என்பது முழுவதும் தற்சார்புடைய கட்டுப்படுத்தப்பட்டஅணுக்கரு வினை நடைபெற்று உற்பத்தி செய்யும் இடம் ஆகும்.
- அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்பட்ட தொடர் வினை நிகழ்கிறது.
- 1942 ஆம் ஆண்டு உலகின் முதல் அணுக்கரு உலை அமெரிக்காவின் சிகாகோ நகரில் கட்டப்பட்டது.
அணுக்குண்டு
- கட்டுப்பாடு அற்ற தொடர்வினை என்ற தத்துவத்தின் அடிப்படையில் அணு குண்டு செயல்படுகிறது.
- கட்டுப்பாடற்ற தொட்ர் வினையில் வெளிவரும் நியூட்ரான்களின் எண்ணிக்கை மற்றும் அணுக்கருப் பிளவு வினை ஆகிய இரு வினையும் கட்டுக்கடங்காமல் பெருக்குத்தொடர் முறையில் பெருகுகின்றன.
- இதனால் மிக அதிக ஆற்றல் உடைய பெரு வெடிப்பு நிகழ்வு மிக குறுகிய காலத்தில் நிகழ்கிறது.
Similar questions