நிறமி அமைப்பு I மற்றும் நிறமி அமைப்பு II இடையேயான வேறுபாடுகளை தருக
Answers
Answered by
0
can't understand language please ask question in hindi or english language
Answered by
0
நிறமி அமைப்பு I மற்றும் நிறமி அமைப்பு II இடையேயான வேறுபாடுகள் நிறமி அமைப்பு I
- இது சுழல் மற்றும் சுழலா ஒளி பாஸ்பரிகரணத்தில் பங்கு பெறுகிறது.
- இதன் வினை மையம் P700 ஆகும்.
- இதில் நீரின் ஒளி பிளத்தல், ஆக்சிஜன் விடுவித்தல் நடைபெறுவது கிடையாது.
- இது சுழலா ஒளி பாஸ்பரிகரணத்தின் போது எலக்ட்ரான்களை நிறமி அமைப்பு II விலிருந்து பெறுகிறது.
- இதில் குளோரோஃபில் மற்றும் கரோடினாய்டு விகிதம் 20 முதல் 30: 1 ஆகும்.
நிறமி அமைப்பு II
- இது சுழலா ஒளி பாஸ்பரிகரணத்தில் மட்டுமே பங்கு பெறுகிறது.
- இதன் வினை மையம் P680 ஆகும்.
- இதில் நீரின் ஒளி பிளத்தல், ஆக்சிஜன் விடுவித்தல் நடைபெறுகிறது.
- இது நீரின் ஒளி பிளத்தல் மூலமாக எலக்ட்ரான்களை பெறுகிறது.
- இதில் குளோரோஃபில் மற்றும் கரோடினாய்டு விகிதம் 3 முதல் 7:1 ஆகும்.
Similar questions
Chemistry,
5 months ago
Math,
5 months ago
Computer Science,
5 months ago
Political Science,
10 months ago
English,
10 months ago
Hindi,
1 year ago