" கலம் I ஐ கலம் II மற்றும் III உடன் சரியாகப் பொருத்தி விடையைத் தனியே எழுதுக. உறுப்புகள் சூழ்ந்துள்ள சவ்வு அமைவிடம் மூளை புளூரா வயிற்றறை சிறுநீரகம் கேப்ஸ்யூல் மீடியாஸ்டினம் இதயம் மூளை உறைகள் மார்பறையில் நுரையீரல் பெரிகார்டியம் மண்டையோட்டுக் குழ"
Answers
Answered by
0
please translate this to English
Answered by
1
மூளை - மூளை உறைகள் - மண்டையோட்டுக் குழி
- முயலின் மண்டை ஓட்டினுள் மூளை அமைந்து உள்ளது.
- டியூராமேட்டர் என்ற வெளிச்சவ்வு, பயாமேட்டர் என்ற உட்சவ்வு, அரக்னாய்டு உறை என்ற இடைச்சவ்வு என மூன்று சவ்வுகளால் முயலின் மூளை சூழப்பட்டு உள்ளது.
சிறுநீரகம் - கேப்ஸ்யூல் - வயிற்றறை
- முயலின் சிறுநீரகங்கள் வயிற்று அறையில் அமைந்து உள்ளன.
- இவை கருஞ்சிவப்பு நிறம் மற்றும் அவரை விதை வடிவத்தினை உடையதாக உள்ளது.
- இது கேப்ஸ்யூல் என்ற சவ்வினுள் சூழ்ந்துள்ளது.
இதயம் - பெரிகார்டியம் - மீடியாஸ்டினம்
- முயலின் இதயம் ஆனது மார்பறையினுள் இரு நுரையீரலுக்கு இடையில் அமைந்து உள்ளது.
- இந்த பகுதிக்கு மீடியாஸ்டினம் என்று பெயர்.
- இதயம் ஆனது பெரிகார்டியம் என்ற இரு அடுக்கு சவ்வினால் சூழப்பட்டு உள்ளது.
நுரையீரல் - புளூரா - மார்பறையில்
- முயலின் நுரையீரல் ஆனது மார்பறையில் அமைந்து உள்ளது.
- ஒவ்வொரு நுரையீரலும் புளூரா என்ற இரட்டைச் சவ்வினால் சூழப்பட்டு உள்ளது.
Similar questions