.
செயற்கைக் கோள் எவற்றுக்கொம்
பயப்படுகிறது I need short answer
Answers
kadavulai pathu bayapadukiradhu
Explanation:
இந்தியா புதன்கிழமை பரிசோதித்துப் பார்த்த செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகணையை ராணுவத்தில் சேர்ப்பதற்கு அதிக காலம் எடுக்காது என்று இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற உயரதிகாரி டபிள்யூ.செல்வமூர்த்தி தெரிவித்தார்.
கடந்த 7-8 ஆண்டுகளாகப் பாடுபட்டுதான் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர் புதன்கிழமை நடந்த பரிசோதனை முழு வெற்றி பெற்றிருப்பதாகவும், தரையில் இருந்து ஏவக்கூடிய இந்த செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகணை சுமார் 300 கி.மீ. தொலைவில் இருந்த இலக்கை தாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இப்போது ஏதாவது எதிரி நாட்டின் செயற்கைக் கோள் மூலம் இந்தியா பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கிறதா என்று கேட்டபோது, "இப்போது இந்தியாவுக்கு அப்படி எந்த அச்சுறுத்தலும் இல்லை. ஆனால், இந்த பலத்தை இந்தியா பெற்றிருப்பது, இந்தியாவின் விண்வெளி சொத்துகளை தாக்க நினைக்கும் நாடுகளுக்கு எச்சரிக்கையாக இருக்கும் என்றார் அவர்.
ஆரணி மக்களவைத் தொகுதி: பட்டுப் போன பட்டுப் பொருளாதாரம் தேர்தலை தீர்மானிக்குமா?
ஐ.பி.எல்: பஞ்சாப் அணியின் தோல்விக்கு காரணமான சிறு தவறு
பாதுகாப்புத் தயார் நிலை என்பது முக்கியமானது. நீங்கள் பலமாக இருந்தால் அடுத்தவர்கள் தாக்கமாட்டார்கள். இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக் கோள், நேவிகேஷன் செயற்கைக்கோள் உள்ளிட்ட பல செயற்கைக் கோள்கள் உள்ளன. அவற்றின் பாதுகாப்பு முக்கியம் என்று தெரிவித்தார் அவர்.
இந்த செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகணையைக் கொண்டு எல்லாவிதமான செயற்கைக் கோள்களையும், ஊடுருவும் எதிரி ஏவுகணைகளையும் இலக்குவைக்க முடியும். இலக்கின் திசைவேகத்துக்கு ஏற்ப இந்த ஏவுகணையின் வேகத்தைப் பொருத்தினால் போதுமானது என்றார்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா மட்டுமே தற்போது இத்தகைய வல்லமையைப் பெற்றுள்ள நாடுகள் என்று கூறிய செல்வமூர்த்தி, இந்தியா செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகணையைப் பெற்றுள்ள நான்காவது நாடாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.
20-22 கி.மீ. உயரம் வரையில் உள்ள புவிமண்டலத்துக்கு உட்பட்ட தூரத்திலோ, புவி மண்டலத்துக்கு அப்பாற்பட்ட தூரத்தில் உள்ள இலக்குகளையோ இந்த ஏவுகணையால் தாக்க முடியும். புதன்கிழமை நடத்திய சோதனை இந்த தொழில் நுட்பத்தின் அத்தனை அம்சமும் நன்றாக உள்ளதைக் காட்டுகிறது என்றார் அவர்.