India Languages, asked by ammu20041025, 5 months ago

வாடிவாசல் கதை வாயிலாக நீங்கள் உணர்ந்தகருத்துக்களை விளக்குக ( I need this for 1 and half page ) please who knows tamil alone answer for this question. ​

Answers

Answered by nidhisaasenthil
5

Answer:

புத்தகத்திலிருந்து: ’மிருகத்துக்கு ரோசம் வந்தாலும் போச்சு; மனுசனுக்கு ரோசம் வந்தாலும் போச்சு!’

களம் என்பது இங்கே வேறுவேறானதுதான். மாடுகளுக்கு ஜல்லிக்கட்டு. மனிதர்களுக்கு வாழ்க்கை. ஆனால், ஏதோ ஒரு புள்ளியில் மிருகங்களும், மனிதர்களும் ஒரே நேர்கோட்டில் இணைந்து பயணிக்கிறார்கள். அது ஆதியிலேயே குருதியில் கலந்த பிறப்பின் குணம். சில நேரங்களில் மிருகங்களிடம் கூட தர்ம, நியாயங்களைக் காண முடியும். வளர்ந்த மனிதனோ, எல்லா தீய குணங்களையும் செடிகளின் இடையில் வளரும் களையின் தாக்கமாய் மனதிற்குள்ளேயே புதைத்துக் கொண்டு சுற்றி வருகிறான்.

இதோ, ஜல்லிக்கட்டு என்னும் வீர விளையாட்டின் உள்ளே புதைந்து கிடக்கும் நிகழ்வுகளையும், நெகிழ்வுகளையும், அதே ஆட்டக்களத்துடன் பின்னிப் பிணைந்து கிடக்கும் மனிதர்களின் வாழ்க்கையையும், வாடிவாசலில் நிற்கும் ஒவ்வொரு வீரனும், வெளியில் வரவிருக்கும் வெறுப்பு ஊற்றப்பட்ட மிருகத்தினை அடக்கக் காத்திருக்கும் இன்னொரு மிருகம் என்பதையும் வர்ணனைகளுடன் கண் முன்னே காட்சிப்படுத்துகிறது சி.சு.செல்லப்பா அவர்களின் ‘வாடிவாசல்’.

1959 ஆம் ஆண்டில் முதன்முதலில் வெளிவந்த இப்புத்தகம், இன்றைய சூழலுக்குப் பொருந்திப் போகும் வகையிலான வார்த்தைகளாலும் , வட்டார மொழியின் வீச்சு சற்றும் குறையாமலும் படைக்கப்பட்டிருப்பது இதன் வெற்றி. அதுதான், கடந்த ஆண்டு அதன் 16ம் பதிப்பாக இப்புத்தகத்தை மறுபிரசுரம் வரை கடத்திக் கொண்டு வந்திருக்கிறது.

மதுரைக்காராரான சி.சு.செல்லப்பா இந்த வாடிவாசலை வார்த்தைகளால் எழுதியிருக்கிறார் என்பதை விட வாடிவாசலிலேயே வாழ்ந்திருக்கிறார் என்பதுதான் உண்மை. தன்னுடைய முன்னுரையில் இப்படி எழுதியிருப்பார் செல்லப்பா; ‘ஒத்தைக்கு ஒத்தையாக கோதாவில் இறங்கும் மிருகத்துக்கும், மனுசனுக்கும் நடக்கிற விவகாரத்துக்கு இரண்டிலொரு முடிவு காணும் இடம் அந்த வாடிவாசல்’...

இங்கு, இந்தக் கணம், இன்றைய தேதியில் எல்லாமே வாடிவாசல்கள்தான்.... இங்கே எல்லோருக்குள்ளும் ஒரு மிருகம் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறது... இப்புத்தகத்தை முழுதாய் படித்தால் மட்டுமே அதை நீங்கள் உணர முடியும்!

-பா.விஜயலட்சுமி

Answered by anu103820
7

Answer:

hiiii

i am fine dear

I am studying in 10th std

what about you

where are you coming from

Similar questions