English, asked by jayamalan6, 9 months ago

I want essay on மூத்தோர் சொல் கேள் I want in Tamil full​

Answers

Answered by kikibuji
14

Answer:

மூத்தோர் சொல் கேள்

உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் பல சூழ்நிலைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. நற்சூழலை நம்மால் எளிதில் எதிர்கொள்ள முடியும். ஆனால் சிறிது கடின காலங்களில் நமக்கு மூத்தோரின் உதவியும், அறிவுரையும் தேவை படுகிறது. அவர்களும் நம்மைப் போன்று சிறு வயதைக் கடந்து வந்தவர்கள்தாமே. இக்கால குழந்தைகளுக்கு அறிவுரை என்றாலே பிடிக்காது. ஆனால் அவர்கள் கூறுவது நம் நலனுக்காகத்தானே ! நம்மை விட அவர்களுக்கு அனுபவம் அதிகம். நாம் எதிர்கொண்ட அனைத்துச் சூழ்நிலைகளையும் மூத்தோர் நன்கறிவர். அவர்கள் சில பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வழிகளையும் அறிவர். அவர்தம் நல்லுரைகளைக் கடைபிடித்தாலே நம் வாழ்க்கையில் முன்னேறலாம். எது சரி, எது தவறு என்பதையும் மூத்தோர் நமக்கு விளக்குவர். அதனால் தான் மூத்தோர் தம் பிள்ளைகளுக்கு நற்கதைகளைக் கூறி வளர்ப்பர். நம் வாழ்க்கை சிறக்க பெரிதும் வழிகாட்டுவர்.

நாம் பிறக்கும் போதே அனைத்தையும் அறிந்திருக்க மாட்டோம். நம் சிறு வயதிலிருந்தே நம்மை மேம்படுத்தியது அவர்தம் சொற்கள் தானே! நமக்கு சாப்பிட, விளையாட , நடக்க, ஓட இவ்வாறான அனைத்தையும் கற்றுக் கொடுத்தவர் நம் மூத்தோர் தான். நாம் உலகை அறிவதற்கு முன் , நமக்குக் கற்றுக்கொடுத்த மூத்தோர் சொற்களைக் கேட்டு அவ்வாறாகவே செயல்படுகின்றோம். ஆனால் வளர்ந்ததும், அவர்தம் அறிவுரைகள் நமக்குக் கசக்கின்றனவோ? அவர்கள் கூறுவதை நாம் சிறிது சிந்தித்துப் பார்ப்போம். அவர்கள் கூறுவதில் தவறேதுமில்லை என்பதை உணரலாம்.

மூத்தோர் சிறு வயதில் தாம் அனுபவித்த கஷ்டங்கள் , நமக்கும் நிகழ கூடாது என்ற நன்னோக்கிலே கூறுகிறார்கள். அவர்தம் சொற்களைக் கேட்டு பின்பற்ற முயலுவோமாக !

Answered by raghuramansbi
7

Answer:

\huge{\underline{\mathtt{\red{❥A}\pink{N}\green{S}\blue{W}\purple{E}\orange{R}}}}மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்கனியும் முதலில் கசக்கும்; பின்னர் இனிக்கும்'என்பார்கள். உண்மையில் அனுபவபூர்வமாக உணர்ந்துகொள்ள வேண்டியது இது. அனுபவம்பெற்ற பழுத்த மரங்களாக இருக்கும் மூத்தவர்களை வணங்குதலும் அவர்களைப் போற்றலுமே நம்முடைய பண்பாடு. நேற்று சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட்டது. வயது முதிர்ந்தோர் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்கள் சவால்களை கருத்தில்கொண்டு 1991 அக்டோபர் 1ம் தேதி முதல் ஐ.நா.,வால் உலக முதியோர் தின கொண்டாட்டம் தொடங்கியது.

அன்பு மிகுந்தவர்கள்

நவீன உலகத்தில் நாம் இழந்தவைகளை பட்டியல் போட்டால் அதில் உணர்வும் நெகிழ்வும் மிக்க முதியவர்கள் என்ற உறவுகள்தான் நமது பெரியவர்கள். கடந்த தலைமுறைகளில் வாழ்ந்து அதற்கு முந்தைய தலைமுறைகளின் வரலாறு அறிந்தவர்கள். தாத்தாவின் கதைகள் கேட்டுக் கொண்டே உறங்கிப்போன நமது இளமைக் காலங்களை சற்று அசைபோட்டுப் பாருங்கள்.இன்றைய குழந்தைகளுக்கு அந்த அழகிய தருணங்களை நாம் வழங்கி இருக்கிறோமா ? பரமார்த்த குரு, தெனாலி ராமன், மரியாதை ராமன், பஞ்ச தந்திரக் கதைகள் என்று எத்தனையோ கதைகளை நமக்கு அறிமுகம் செய்திட்ட அம்புலி மாமாக்கள் அவர்கள். நன்னெறிக் கதைகள் எல்லாம் நம்மை நல்வழிப்படுத்திய காலமது. அறம் என்றால் என்ன என்பதை நமக்கு போதித்து நமக்கு வழிகாட்டும் வாழ்ந்துகாட்டிகள்.தனக்காக எதுவும் சேர்த்துக் கொள்ளாமல் நமது கண்களில் இருந்து கண்ணீர் வரக்கூடாது என்பதற்காகவே செந்நீர் சிந்தி உழைத்தவர்கள். இன்றைய தினத்தில்நாம் எத்தனை வீடுகளில் அந்த நினைவுகளை சேமித்து வைத்திருக்கும் தாத்தா பாட்டிகளைப் பார்க்கிறோம் என்பதை சற்றே யோசித்துப் பாருங்கள். அவர்களை அருகிலே இருந்து ரசிக்கும் பாக்கியம் பெற்றவர்களே எதிர்காலத்தில் அன்பு மிகுந்தவர்களாக உருவாகிறார்கள்.

Similar questions