India Languages, asked by Su2020, 11 months ago

கலைச்சொல்லாக்கம் பற்றி தமிழில் ஒரு கட்டுரை எழுதுக.

IF YOU ANSWER THIS CORRECTLY I'LL MARK YOU AS BRAINLIEST FOR SURE. ​

Answers

Answered by arekatlarb
5

Answer:கலைச்சொல் (About this soundஒலிப்பு (உதவி·தகவல்)) என்பது, ஏதாவது ஒரு அறிவுத்துறையில் பயன்படக்கூடிய சிறப்புச் சொற்றொகுதியைக் குறிக்கும். ஒவ்வொரு துறைக்குள்ளும் ஒரு கலைச்சொல்லுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பான பொருள்கள் இருக்கக்கூடும். இவை பொது வழக்கில் உள்ள பொருள்களோடு ஒத்திருக்க வேண்டியது இல்லை. ஒரு குறிப்பிட்ட துறை குறிப்பிடத்தக்க காலம் பயிலப்பட்டு வரும்போது அத்துறையில் காணப்படும் இத்தைகைய சிறப்புச் சொற்கள் செறிவான பொருளை உணர்த்துவனவாக வளர்ச்சியடைகின்றன. இவ்வாறான சிறப்புச் சொற்றொகுதியின் பெறுமதி ஒவ்வொரு சொல்லிலும் ஒரு குறிப்பிட்ட அளவு தகவலைப் பொதித்து வைத்திருப்பதில் தங்கியுள்ளது. கலைச்சொல் என்பது சொற்சிக்கனத்தோடு, பொருளில் ஆழத்தையும், துல்லியத்தன்மையையும் பெறுவதற்கான ஒரு வழிமுறையும் ஆகும். இதனால், ஒரு துறைசார்ந்த வல்லுனர்கள் தங்களிடையே அத் துறைசார் விடயங்களைச் சுருக்கமாகவும், துல்லியமாகவும் பரிமாறிக் கொள்வதற்குக் கலைச்சொற்கள் பயனுள்ளவையாக அமைகின்றன.

Similar questions