தற்போது எதன் வழியாக ஜல்லிக்கட்டு நடைபெறும்?
IF YOU GIVE ME THE BEST AND CORRECT ANSWER I WILL MAKE YOU BRAINLIST AND THANKS AND FOLLOW
Answers
Answer:
ஜல்லிக்கட்டுக்கு மஞ்சு விரட்டு, ஏறுதழுவுதல் என்ற வேறு பெயர்களும் உண்டு. கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு நடந்த பொங்கலை யாராலும் மறக்கமுடியாது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்திய மற்றும் மாநில அரசுடன் போராடி ஜல்லிக்கட்டுக்கு போடப்பட்ட தடையை நீக்கினர். இதனையடுத்து கடந்த வருடம் பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தமிழர்களும் சந்தோசமடைந்தார்கள். இந்த வருடம் 15 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16ஆம் தேதி பாலமேட்டிலும், 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் நடைபெறுகிறது. அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிகட்டுக்காக பங்குபெற இருக்கும் ஹீரோக்களான காளைகளின் மருத்துவ பரிசோதனை நேற்றுடன் நிறைவடைந்தது. சுமார் 276 காளைகள் அவனியாபுர ஜல்லிக்கட்டில் பங்கேற்கிறார்கள். அதேபோல வீரர்களுக்கான முதல் கட்ட உடல் தகுதி தேர்வுகள் நடைபெற்று, அவர்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. தமிழரின் வீர விளையாட்டை டிவியில் காணவும், நேரில் காணவும் பலரும் ஆயத்தமாக இருக்கிறார்கள். சிட்டியிலிருந்துகொண்டு டிவியில் பார்க்கும் பலருக்கு, ஜல்லிக்கட்டு என்றால் வாடிவாசலில் திறக்கப்படும் மாட்டை ஒருவன் பிடிக்க வேண்டும் அவ்வாறுதான் தெரிந்திருக்கிறது. படங்களில் கூட அதிகம் இதுபோன்ற ஜல்லிக்கட்டைதான் காட்டுகிறார்கள். ஜல்லிக்கட்டு போன்றே இருக்கும் மற்ற விளையாட்டுகள் பற்றியும் அதன் விதிமுறைகள் என்னவென்றும் பார்ப்போம்...
வாடி மஞ்சுவிரட்டு (அல்லது) ஜல்லிக்கட்டு:-
இந்த வகை மஞ்சுவிரட்டு மதுரை, புதுக்கோட்டை, தேனி, தஞ்சாவூர், சேலம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இது மக்களிடையே நன்கு தெரியப்பட்ட ஒன்றாக இருக்கிறது காரணம் தொலைக்காட்சியிலும் திரைப்படங்களிலும் இந்த வகை விளையாட்டையே அதிகம் காட்டப்படுகிறது. "வாடிவாசல்" எனும் வாயில் வழியாக காளை திறந்துவிடப்படும். திறந்தவுடன் சீறிக்கொண்டு ஓடும் காளையை வீரர் ஒருவர் மட்டும் தாவி அதன் திமிலை பிடித்து கோர்த்து குறிப்பிட்ட தூரம் செல்லவேண்டும் அப்படி சென்றால் அந்த வீரர் வெற்றியாளர் பட்டத்தை தட்டிச் செல்வார். காளையை யாராலும் பிடிக்க முடியவில்லை என்றால் காளை வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்படும். காளையை ஒருவர் மட்டுமே பிடிக்க வேண்டும் என்பது பொதுவான விதிமுறை ஆகும்.
வேலி மஞ்சுவிரட்டு:-
இந்த வகை மஞ்சுவிரட்டு மதுரை, மானாமதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பிரபலமாகும். திறந்தவெளியில் காளையின் மூக்குக்கயிறை அவிழ்த்து விடுவார்கள், அது எந்த திசையை நோக்கி வேண்டுமானாலும் ஓடலாம், வீரர்கள் அதை அடக்கவேண்டும். இந்த விளையாட்டு ஐந்து நிமிடங்களில் இருந்து ஒரு மணிநேரம் கூட நடைபெறும்.
வடம் மஞ்சுவிரட்டு:-
வடம் என்றால் தமிழில் "கயிறு" என்று பொருள்படும். காளையை 15 மீட்டர் கயிற்றில் கட்டி அந்த விட்டத்துக்குள்ளே நடைபெறுவதுதான் வடம் மஞ்சுவிரட்டு. 7 அல்லது 8 பேர் கொண்ட அணி அந்த காளையை 30 நிமிடங்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.
வடம் என்றால் தமிழில் "கயிறு" என்று பொருள்படும். காளையை 15 மீட்டர் கயிற்றில் கட்டி அந்த விட்டத்துக்குள்ளே நடைபெறுவதுதான் வடம் மஞ்சுவிரட்டு. 7 அல்லது 8 பேர் கொண்ட அணி அந்த காளையை 30 நிமிடங்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.தமிழரின் வீர விளையாட்டு என்று கருதப்படும் ஜல்லிக்கட்டு மற்றும் காளைகளை வைத்து விளையாடுவது மட்டுமல்ல, ஆடுகளை வைத்து கிடா சண்டை, கோழிகளை வைத்து சேவசண்டை என்றும் இருக்கிறது. தற்போதைய நிலையில் மக்களிடையே ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் போன்ற விளையாட்டுகளே அதிகம் தெரியப்படுகிறது.
ஜல்லிக்கட்டின் விதிமுறைகள்:
this in the above photo .
போட்டியாளர் மாட்டின் திமிலை எல்லைக்கோட்டை மாடு தாண்டும் வரை பிடித்திருக்க வேண்டும். அப்படி பிடித்திருப்பவர் வெற்றியாளர் ஆவார்.
i hope you got the best answer