India Languages, asked by sarithakeerthana8, 5 days ago

அகழாய்வுகள் மூலம் நாம் தெரிந்து கொள்வது யாது

IF YOU GIVE ME THE BEST AND CORRECT ANSWER I WILL MAKE YOU BRAINLIST AND THANKS AND FOLLOW ​

Answers

Answered by NithishTheking0382
2

Answer:

சிறுவினா

Question 1.

வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் நிலையில் அகழாய்வின் தேவை குறித்த உங்களது கருத்துகளைத் தொகுத்துரைக்க.

Answer:

அறிவியல் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பழைய தலைமுறையைப் பற்றித் தெரிந்து என் செய்வது? செல்லிடப்பேசிக்குள்ளே உலகம் சுற்றும் வேளையில் அகழாய்வில் கிடைக்கும் செல்லாக்காசுகள் வந்தென்ன செய்ய முடியும்? மடிக்கணினி மலைக்கவைக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு மண் ஓடுகள் இறந்தோரைச் சுமந்த மண்தாழிகள் கண்டறிந்து என்ன சாதிக்க முடியும்? இவ்வாறு இருக்க, அகழாய்வு என்ன செய்ய இருக்கிறது?

அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன. அதனால் ரோமானியர்களுக்கும் நமக்கும் இருந்த வணிகத் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டது.

ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டு பிடிக்கப்பட்டன.

நம் முன்னோர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல் அடிப்படையிலான பண்பாட்டு வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். தமிழர்களின் உணவு, உடை, வாழிடம் முதலியன இயற்கையைச் சிதைக்காத இயல்புகளைக் கொண்டவை என்பதற்கு அகழாய்வில் கண்ட சான்றுகளே ஆவணங்களாகத் திகழ்கின்றன.

Explanation:

அகழாய்வின் பயனும் முடிவும்:

அகழாய்வின் பயனும் முடிவும்:அகழாய்வில் கிடைத்த ஆவணங்களோ அடுத்த தலைமுறைக்கு நம் பண்பாட்டின் மேன்மையைப் பறைசாற்றும். எனவே, அகழாய்வு என்பது நமக்கு மிகமிகத் தேவையான செயல்பாடு. அகழாய்வு தரும் சான்றுகளின் மூலம் நமது வளமான வரலாற்றையும் பண்பாட்டையும் அறிந்துகொண்டு வலிமையான எதிர்காலத்தை உருவாக்க முடியும். இயற்கையோடு இணைந்த பண்பாட்டு வாழ்க்கை நம்முடையது. மக்கள் அறிவியல் என்கிற மகத்தான சிந்தனையைப் புரிந்துகொள்வதற்கும் நமது பண்பாட்டின் மேன்மைகளை இன்றைய தலைமுறை எடுத்துக்கொண்டு சிறப்பாக வாழ்வதற்கும் அகழாய்வு துணைநிற்கின்றது.

Similar questions