India Languages, asked by Sanjayk187, 5 hours ago

'மொழிக்குடும்பம்' என்றால் என்ன?

If you knows Tamil Language, you can answer this question.​

Answers

Answered by krishna9242
1

Answer:

பெரும்பாலான மொழிகள், ஏதாவதொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. ஒரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் எல்லாம் ஒரு பொதுமொழியிலிருந்தே தோன்றின. இத்தகைய பொதுமொழிகள் பல இன்று வழக்கிழந்து போய்விட்டன. அவற்றிலிருந்து தோன்றித் தற்போது வழக்கிலுள்ள மொழிகள் மூலமாகவே மேற்படி குடும்பப் பொது மொழிகளின் தன்மைகளை அறிந்து கொள்ள முடிகிறது.

மொழிக்குடும்பங்களின் பரவல்

மொழிக்குடும்பங்கள், மேலும் பல துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்படுள்ளன. அவை "கிளைகள்" எனப்படுகின்றன. மொழிக்குடும்ப வரலாறு பொதுவாக ஒரு "மர"மாகச் சித்தரிக்கப்படுவதாலேயே மூலத்திலிருந்து பிரிந்தவை கிளைகள் எனப்படுகின்றன. ஒரு குடும்பத்தின் அல்லது ஒரு கிளையின் பொது மூல மொழி, அவற்றின் "முதல்நிலை மொழி" என்று அழைக்கப்படுகின்றது. உதாரணமாகத் திராவிட மொழிக் குடும்பத்தின் மூலமொழி முதல்நிலைத் திராவிடம் எனவும், இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் மூலமொழி முதல்நிலை இந்தோ-ஐரோப்பியன் எனவும் குறிப்பிடப் படுகின்றன.

Neenga tamila

Nice to meet you

Nanum tamil than

Similar questions