India Languages, asked by chithraindia56, 5 months ago

III. சிறுவினா: 5x4=20
1. திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
2. ஏறுதழுவுதல், திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?
3. விதைக்காமலே முளைக்கும் விதைகள்- இத்தொடரின் வழிச் சிறுபஞ்சமூலம் தெரிவிக்கும் கருத்துகளை விளக்குக.
4. சமைப்பது தாழ்வா? இன்பம் சமைக்கின்றார் சமையல் செய்வார்.
அ) இன்பம் சமைப்பவர் யார்?
ஆ) பாவேந்தர் கூற்றுப்படி சமைப்பது தாழ்வா?
5. அறிவையும் உயிரினங்களையும் தொல்காப்பியர் எவ்வாறு தொடர்பு படுத்துகிறார்?​

Answers

Answered by keerthikk156
3

Answer:

முன்னுரை :

திராவிட மொழிகளுள் முதன்மையாக விளங்குவது தமிழ். எத்தகைய காலமாற்றத்திலும் மாறிவரும் புதுமைகளுக்கும் ஈடு கொடுத்து இயங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு. தமிழாய்ந்த அயல்நாட்டவரும் செம்மொழித் தன்மையைத் தரணியெங்கும் எடுத்துரைத்து வருகின்றனர். திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

திராவிட மொழிகளின் பொதுப்பண்புகள் :

சொற்களின் இன்றியமையாப் பகுதி வேர்ச்சொல் ஆகும். இதற்கு அடிச்சொல் என்றும் பெயர். திராவிட மொழிகளின் சொற்களை ஆராய்ந்தால், அவை பொதுவான அடிச்சொற்களைக் காணமுடிகிறது.

திராவிட மொழிகளின் எண்ணுப் பெயர்களும் ஒன்று போலவே அமைந்துள்ளன.

திராவிட மொழிகளுள் பிறமொழித் தாக்கம் மிகவும் குறைந்ததாகக் காணப்படும் மொழி தமிழே ஆகும். தமிழ் மொழி திராவிட மொழிகள் சிலவற்றின் தாய் மொழியாகக் கருதப்படுகிறது. தமிழின் பல அடிச் சொற்களின் ஒலியன்கள், ஒலி இடம் பெயர்தல் என்ற விதிப்படி பிற திராவிட மொழிகளின் வடிவம் மாறியிருக்கின்றன. சுட்டுப்பெயர்களும் மூவிடப் பெயர்களும் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பெற்றிருக்கின்றன.

நிறைவுரை :

திராவிட மொழிக்குடும்பத்தின் மூத்த மொழியாகத்திகழ்கின்ற தமிழ், பிற திராவிட மொழிகளை விட ஒப்பியல் ஆய்வுக்குத் துணையாக அமைந்துள்ளது.

Answered by afinechandramohan
0

Answer:

v    புல் , மரம் , செடி போன்றவற்றை தொடுவுணர்வால் அறியக்கூடிய ஓர் அறிவுடையன .

v   முதலை,நத்தை போன்ற உயிரிகள் உடல் , நா ஆகியவற்றால் அறியக்கூடிய இரண்டு அறிவுடையன.

v   கரையான் ,எறும்பு போன்றவை  உடல் , நா,மூக்கு ஆகியவற்றால் அறியக்கூடிய மூன்று அறிவுடையன.

v   வண்டு, தும்பி போன்றவை உடல் , நா மூக்கு , கண் இவை நான்காலும் அறியக்கூடிய நான்கறிவுடையன.

vவிலங்குகள் உடல் , நா , மூக்கு , கண் , காது ஆகிய ஐந்தாலும் அறியக்கூடிய ஐந்தறிவுடையன.

v     மனிதர்கள் உடல் , நா ,மூக்கு , கண் ,காது, மனம் இவை ஆறாலும் அறியக்கூடிய ஆறறிவுடையோர்.

இவ்வாறு உயிரினங்கள் ஆறுவகை அறிவுடையனவாய் தொடர்பு படுத்துகிறார்.

Similar questions