சுற்றுச்சூழல் கட்டுரை
In Tamil
Answers
hope it helps......
mark as brainliest
and thank. my answer
சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல் என்பது குறிப்பிட்ட ஒரு பொருளையோ அல்லது உயிரினத்தையோ சுற்றியுள்ள இயற்கைச் சூழலைச் குறிக்கின்றது. அதாவது உயிரினங்களும் அவை வாழும் பகுதியில் உள்ள காற்று, நீர் போன்றவையும் அடங்கிய இயற்கை அமைப்பு சுற்றுச்சூழல் ஆகும்.
சுற்றுச்சூழல் மாசுபடுதல்
இயற்கையமைப்பில் அமைந்துள்ள அனைத்து உயிரினங்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செலுத்துகின்றன. ஆறறிவு பெற்ற மனிதன் மட்டும், தன்னை தன் சுய லாபத்திற்காக இயற்கையாய் அமைந்துள்ள அனைத்தையும் வரைமுறை இல்லாமல் அழிக்கத் தொடங்கிவிட்டான். அதன் விளைவாக மனித சமூகம் இன்று சுனாமி, புவி வெப்பமடைதல், ஓசோன் படலத்தில் ஓட்டை என பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறுகின்ற கழிவுப்பொருள்களால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. காற்று மாசு படுகிறது. காடுகளும் காடுகளில் காணப்படும் மரங்களும் வியாபார நோக்கத்தில் அழிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக, மழை பொய்த்து போயின. பருவநிலை மாறி உள்ளது. பருவநிலை மாற்றதின் காரணமாக பல்வேறு சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழல் பாழாகாமல் பாதுகாக்கும் செயலாகும். மக்கள்தொகை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள், அரசு சாரா பொதுநல அமைப்புகள், சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன. பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மனித நடவடிக்கைகளினால் சுற்றுச்சூழலில் தாக்கம் எந்த அளவிற்கு ஏற்படுகின்றது என்பது தெளிவாக அளவிடமுடியவில்லை. சுற்றுச்சூழல் சட்டங்கள், நெறிமுறைகள் மற்றும் கல்வி மூன்றும் பின்னிப்பிணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு வழிவகுக்கின்றன
சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகள், சுற்றுச்சூழல்கல்வி, சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் போன்ற படிப்புகள் தற்போது பல்வேறு நிலைகளில் வழங்கப்படுகின்றன.கழிவு உற்பத்தி, காற்று மாசுபாடு மற்றும் பல்லுயிர் இழப்பு (நுண்ணுயிரிகளின் மற்றும் உயிரினங்களின் அழிவு) முதலியவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளாகும். இப்பிரச்சனைகளுக்கு மேற்கண்ட படிப்புகள் தீர்வுகளை தர வேண்டிய கட்டாயத்திற்க்கு உள்ளாகியுள்ளது. மேலும், அரசு பல நடவடிக்கைகளை இன்னும் எடுக்க வேண்டியுள்ளது. புதிய சிந்தனை மற்றும் தொலைநோக்கு பார்வையில் அணுகவேண்டும்.
எங்கும் எதிலும் மாசுகள் கலந்துள்ள இன்றைய உலகில் ஒன்று இதனை எதிர்கொள்ள வேண்டும். இல்லையேல் மாசற்ற உலகினை உருவாக்க வேண்டும். இதில் இரண்டாவது வகை சாத்தியமல்ல. ஆனால், முதல் வகை நம்முடைய கட்டுப்பாட்டில் இருப்பதனால் அதனைக் கடைபிடிப்பது சிரமமான காரியமல்ல. கீழ் கண்டவற்றின் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்கவோ அல்லது பாதிப்பை குறைக்கவோ முடியும்.
சுத்தப்படுத்துதல் பிரச்சாரம்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம்
காற்று மாசுபாடு தவிர்த்தல்
தண்ணீர் மாசுபாடு தவிர்த்தல்
மரம் நடுதல் ஆகியவற்றின் மூலம் சுற்றுப்ப்புறத்தை பாதுகாக்கலாம்
“ சுவாசிக்கும் மக்கள் அனைவரும் மரம் நட வேண்டும்”
"மரங்கள் தான் மனிதர்களின் நுரையீரல். நம்மை நாம் காத்து கொள்ள வேண்டுமென்றால், மரங்களை காப்பது அவசியம்''
மரங்கள் வெளிவிடும் காற்றை, நாம் சுவாசிக்கிறோம்; நாம் வெளிவிடும் காற்றை, மரங்கள் சுவாசிக்கின்றன. அந்த வகையில், மரங்கள் தான் நம் நுரையீரலாக செயல்படுகின்றன. நுரையீரலை பாதுகாப்பது நமது கடமை இல்லையா? அந்த வகையில், நம்மை நாம் காத்துக் கொள்ள, மரங்களை காப்பாற்ற வேண்டும்.
உலகிலேயே தமிழகம் தான், 12 ஆயிரம் ஆண்டுகளாக விவசாயத்தை தொடர்ந்து தொழிலாக செய்து வரும் ஒரே சமூகம். வேறு எங்கும் இதுபோல் இல்லை. இன்று கிராமங்களில், மற்ற எல்லாம் இருக்கிறது; ஆரோக்கியம் இல்லை. இதற்கு காரணம், நமக்கு தேவையான சத்தான உணவுகளை பயிர் செய்யவில்லை. எலும்பு வளர்ச்சி கூட முழுமை பெறாத அரைகுறை மனிதனாக தான் பலரும் உள்ளனர். இந்த நிலை மாற வேண்டும். மரங்களை வளர்ப்பது நம் அடிப்படை கடமைகளில் ஒன்று என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். யார் யார் எல்லாம் சுவாசிக்கின்றனரோ, அவர்கள் எல்லாம் மரங்கள் நட வேண்டும். மூச்சு விடாதவர்கள், மரங்களை பேண வேண்டிய அவசியம் இல்லை.
அரசு சாரா அமைப்புகள்
சுற்றுசூழல்பாதுகாப்பில் குடியிருப்போர் மற்றும் அரசு சாரா பொதுநல அமைப்புகள் மற்றும் சங்கங்கள் சுற்றுப்புறபாதுகாப்பில் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது. அவற்றுள் சில
தினமும் குப்பைகளை அகற்றி தெருகளையும், வீடுகளையும் தூய்மையாக பராமரிக்க தொடர்ந்து நமக்கு உதவி வருகிறது
நமது நகரத்தில் சேர்ந்த குப்பை கூளங்கள் மற்றும் பாலிதின் பைகள் ஆகியவற்றை அகற்ற சென்ற ஆண்டு சிறப்பு முகாம்களை நடத்துகின்றன.
சுத்தமான குடிநீர் அனைவருக்கும் தங்கு தடையின்றி கிடைபதற்க்கு நடவடிக்கை எடுத்துவருகிறது.
சாலையோரங்களில் மரங்கன்றுகளை நட்டு சுற்றுபுறச்சூழலை பாதுகாத்து வருகிறது.
சில சங்கங்கள் உணவு சுழற்சியை காக்கும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன.