நாட்டுப்புறப் பாடல் பாடப்படும் இடங்கள் என்னென்ன? in tamil only
Answers
in farm,festival.......etc
Explanation:
I don't have Tamil keyboard
வான்மீகியினை ராமயணத்தை இயற்றியவராகவும், பின்னர் கம்பர் அதனைத் தமிழில் மொழிபெயர்த்தவராகவும் பலரும் அறிந்து வைத்திருப்பார்கள். உண்மையில் ராமாயணம் வான்மீகியால் எழுதப்படுவதற்கு முன்னரே மக்களிடம் நாட்டுப்புறக் கதையாக பல்லாண்டுகளாக இருந்துவந்துள்ளது. இதனாலேயே இந்தியாவினைத் தாண்டியும் யாவா,சீனா, தாய்லாந்து போன்ற பல இடங்களில் வேறுபட்ட வகைகளில் ராமாயணங்கள் உள்ளன. வான்மீகி ராமாயணத்திலிருந்து மாறுபட்ட பவுத்த ராமாயணம் இன்னொன்று இந்தியாவிலேயே உண்டு(அதில் ராமனும் சீதையும் உடன்பிறந்தவர்கள்).
இவ்வாறு ராமாயணக் கதையானது வேறுபடுவதற்கு நெடுநாட்களாக வாய்வழியாகக் கடத்தப்படும்போது ஏற்பட்ட திரிபுகளும், நாட்டுப்புறக் கதையினை எழுத்துவடிவில் கொண்டுவரும்போது அவரவர் தமது விருப்பப்படி எழுதிவைத்ததுமே காரணங்களாகும். இதனை மேலும் விளங்கிக்கொள்வதற்காக கிரேக்கத்திற்கு சென்றுவருவோம். கிரேக்கக் காவியமான ஒடிசி (Odyssey) ஆனது Homer இனால் இயற்றப்பட்டது எனவே நம்பப்பட்டிருந்தது. பின்னர் Milman Parry என்ற அறிஞர் ஏற்கனவே வாய்மொழிப் பாடல்களையே Homer இனால் எழுதப்பட்டதே தவிர இயற்றப்பட்டதல்ல என அறிவியல்ரீதியில் நிறுவினார். அங்கு காப்பியத்துடன் மதம் ராமாயணத்தைப் போன்று கலக்காமையால் உண்மை வெளிவந்தது. கிரேக்கம் ஏன், தமிழர்களையே எடுத்துக்கொண்டால் சங்க காலப் பாடல்களைப் பாருங்கள், அங்கு புலவர்கள் பல நேரங்களில் தொகுத்தவர்களாகவே கூறப்படுவார்கள் (தொகுத்தவன்-புலவன், தொகுப்பித்தோன்- அரசன்) . அவ்வாறாயின் ஏற்கனவே வாய்மொழிப் பாடல்களாக இருந்தவற்றையே சங்ககாலப் புலவர்கள் தொகுத்திருந்தனர்.
இவ்வாறே ராமாயணமும் ஏற்கனவேயிருந்த வாய்மொழிக் கதையினையே வான்மீகி சில மாறுதல்களுடன் ராமரைத் தெய்வீக மனிதராக மாற்றி எழுதினார். பவுத்த ராமாயணமும் தனது நோக்கில் எழுதப்பட்டிருக்கும். இவ்வாறு 24 விதமான இராமாயணங்கள் இந்தியாவில் மட்டுமே இருப்பதாக சி.ஆர்.சீனி வாசய்யங்கார் `இதர இராமாயணங்கள்` என்ற நூலில் கூறியுள்ளார். வான்மீகி எழுதிய பின்னரே ராமாயணம் பிற இடங்களிற்குப் பரவியிருப்பின் அவற்றுக்கிடையே பெரிய மாறுதல்கள் இடம்பெற்றிருக்காது. புராணத்தின்படி பார்த்தாலே நாரதர் சொல்ல வான்மீகி எழுதியதாகவே உள்ளது. இங்கு நாரதர் என்ற புனைவினை விடுத்தால் யாரிடமோ கேட்டே வான்மீகி எழுதியுள்ளார். வான்மீகி எழுதிய பின்பும் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. நம்பகத்தன்மையினை ஏற்படுத்துவதற்காகவே வான்மீகியும் அதே கதையில் ஒரு பாத்திரமாக்கப்பட்டார்.
Sunplus Corp.
வான்மீகி ராமயணத்தின் பவுத்தத்தின் மீதான போர்:
வான்மீகி ராமாயணம் என்பது பவுத்த எதிர்பினையும், பார்ப்பனியத் தாங்கலையுமே முதன்மையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தது. இதனை விளங்கிக்கொள்வதற்கு புத்தரின் காலத்திற்குச் சென்றுவரவேண்டும். பார்ப்பனியர் குளிரான இடங்களிலிருந்து வந்தமையால் நெருப்பினைக்(அக்கினி) கடவுளாகவும் வேள்வியினை(யாகம்) முதன்மையான சடங்காகவும் கொண்டிருந்தனர். இந்த வேள்விகளின் போது பெருமளவு மாடுகளையும், பிற மிருகங்களையும் வெட்டி வேள்வியில் பலியாக்கி வந்தனர் (இதற்கான சான்றுகளை வேதங்களிலேயே காணலாம்). இத்தகைய நிலையில் வேளாண்மையில் பயன்படுத்தப் போதிய மாடுகள் இன்மையால் புத்தர் வேள்வியினை எதிர்த்தார். ஒரு முறை சொர்க்கத்திற்குச் செல்ல என்று கூறி பார்ப்பனர்களால் யாகம் ஒன்று நடாத்தப்பட்டு மிருகங்கள் வெட்டப்பட்டு அதில் பலியிடப்பட்டன. அந்த யாகம் நடைபெறுமிடத்திற்குச் சென்ற புத்தர், ஏன் இவ்வாறு மிருகங்களை நெருப்பில் பலியிடுகிறீர்கள் எனக்கேட்டார். அப்போது பார்ப்பனர்கள் யாகத்தில் பலியிடப்படும் மிருகங்கள் எல்லாம் நேரே சொர்க்கம் செல்வதால் கவலைப்படவேண்டாம் எனக்கூற, புத்தர் “ இவ்வாறு மிருகங்களைப் பலியிட்டுப் பின்னர் சொர்க்கம் போவதற்குப் பதில் நீங்களே நேரில் நெருப்பில் குதித்து நேரடியாகச் சொர்க்கம் செல்லலாமே! “ என்றார். பார்ப்பனர்களிடம் பதிலில்லை, அந்த யாகம் பாதியிலேயே குழம்பிற்று. இவ்வாறு புத்தரிற்குப் பின்னரும் பவுத்தர்களிற்கும் பார்ப்பனர்களிற்கும் யாகங்கள் தொடர்பான மோதல்கள் இடம்பெற்றுவந்தன. இக் காலப்பகுதியிலேயே வான்மீகி ராமாயணம் எழுதப்படப்பட்டது.
இப்போது ராமாயணத்திற்கு வந்தால், ராமன் மேற்கொண்ட முதற்போர் தாடகை என்ற அரக்கப் பெண்ணிற்கு எதிராகவேயிருந்தது. அதாவது வேள்வியினைக் குழப்ப வந்த தாடகையினை எதிர்த்து விசுவாமித்திரரின் அழைப்பின் பெயரில் ராமன் எதிர்த்துப் புரிந்த போரே ராமனின் முதற்போர். இதிலிருந்தே அரக்கர்களுடனான பகை ராமனிற்குத் தொடங்குகின்றது. இங்கு யாகத்தைக் குழப்பும் அரக்கர்களாக புத்தரும், அவரது கொள்கையினைப் பின்வற்றுவோருமே உருவகப்படுத்தப்படுகின்றார்கள். இங்கு ராமயணத்தில் வேள்வியிக்குக் கொடுக்கப்படும் சிறப்பினையும், அதனை எதிர்த்தோரை கொடிய அரக்கர்களாகவும் உருவகப்படுத்துவதனைப் பார்த்தால் வான்மீகியின் நோக்கம் புலனாகும். இதனைப் படிக்கும் சிலரிற்கு `நாம் இறைச்சி சாப்பிட்டுவிட்டுக் கோயிலிற்கே போவதில்லை, ராமபிரான் எவ்வாறு மிருகங்களைப் பலியிடும் யாகத்திற்கு உதவுவார்` என்ற ஐயம் ஏற்படும். ராமாயணத்தில்
ராமர்_இறைச்சி_உண்பவர்_மட்டுமல்லாமல்_மதுவும் உண்பார் (சான்று- (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 8). வான்மீகி ராமாயணம் பவுத்தத்தை எவ்வாறு எதிர்க்கின்றது எனப் பார்த்தோம். இனிப் பார்ப்பனியத்தை எவ்வாறு தாங்கிப் பிடிக்கின்றது எனப் பார்க்க உருத்திர காண்டத்திற்கு வரவேண்டும்.
ராமர் அரசனாக முடி சூட்டப்பட்ட பின்பும் அரசாட்சியில் ஈடுபடவில்லை. பரதனும், அமைச்சர்களுமே ஆட்சியினைப்
hope this is helpful to you.