India Languages, asked by selviesakki7gmailcom, 3 months ago

கவிதை in tamil
topic is அறிவியல் அறிஞர்
in 20 words about​

Answers

Answered by rajamarun1762005
0

Answer:

வானியல் அறிஞர் பிலிப்போ ஜியோர்டானோ புருனோ, ஐரோப்பா கண்டம், இத்தாலி நாட்டில் நோலா நகரத்தில், 1548ல், பிறந்தார். 24ம் வயதில், பாதிரியாரானார். மத நம்பிக்கையால், அறிவியலை ஒதுக்கும் நிலை கண்டு வேதனை அடைந்தார்.

அறிவியல் ஆய்வுகள் மீது, தீரா பற்றுக்கொண்டார். அது தொடர்பான நுால்களை, குறிப்பாக, வானியல் நுால்களை ஆர்வமாக படித்தார். அறிவியலின் அவசியம் பற்றி பிரசாரம் செய்தார்.

'சூரியன், சந்திரன் போன்றவை கிரகங்கள்... கடவுள் அல்ல; பூமி, மற்ற கிரகங்களுடன், சூரியனை சுற்றி வருகிறது; இதனால், இரவு, பகல் உண்டாகிறது; நெருப்பு, நீர், நிலம், காற்றால் ஆனது பூமி...' என விளக்கி பேசினார்.

இந்த கருத்துக்கள், பழமைவாதிகளை கொதிப்படைய வைத்தது.

'கடவுளுக்கு எதிராக பிரசாரம் செய்கிறார்; மக்களை முட்டாளாக்குகிறார்' என்று, கடுமையாக எதிர்த்தனர். எது பற்றியும் கவலைப் படாமல், வானியலில் ஆய்வுகளை தொடர்ந்தார். கண்டறிந்த முடிவுகளை, மக்களுக்கு எடுத்துரைத்தார்.

மதத்துக்கு எதிராக பிரசாரம் செய்ததாக, 1592ல் அவரை கைது செய்தனர். ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டைனை கிடைத்தது. தண்டனை முடிந்து, விடுதலையான பின்னும், அறிவியல் கருத்துக்களை பரப்புவதை அவர் கைவிடவில்லை.

ஆத்திரம் அடைந்த பழமைவாதிகள், 1600, பிப்ரவரி 17ல் அவரை எரித்துக் கொன்றனர். அறிவியல் சிந்தனையை வளர்க்க முயன்ற அறிஞருக்கு கிடைத்த பரிசு கொடூரமானது.

இத்தாலிய வானியல் அறிஞர் கலிலியோ கண்டறிந்த உண்மைகளின் அடிப்படையில் தான், இவரும் கருத்துக்களை கூறினார். பழமை வாதிகளின் நடவடிக்கை அவரது கருத்தை அழித்துவிடவில்லை.

காலம் மாறியது. அறிஞர் புருனோவின் சிந்தனைகளை ஏற்றனர் மக்கள். அவரை கொன்ற பழமைவாதிகளுக்கு எதிராக, கிளர்ந்தெழுந்தனர். அறிவியலை பரப்பியவர்களுடன் இணைந்து, 1607ல், புருனோவுக்கு உருவச் சிலை அமைத்து மரியாதை செலுத்தினர்.

நிலவில் பள்ளத்தாக்கு ஒன்றுக்கு, அவர் பெயரை சூட்டி கவுரவித்துள்ளனர் விஞ்ஞானிகள். அறிவியல் கண்டுபிடிப்புகளால், உலகம் உயர்வு பெற பாடுபட்டு, உயிரையே தியாகம் செய்த புருனோவை மனதில் கொள்வோம்!

Explanation:

I gave you in more words you can short it...❤

Similar questions