in the topic விலங்குகள், பலவிதம் write one paragraph on விலங்குகள் பலவிதம் நீங்கள் அறிந்தவிலங்குகள் விலங்குகள்
பாதுகாப்பு சட்டங்கள்
அழிந்துவரும் விலங்குகள்
பாதுகாக்கும்வழிமுறைகள்
முடிவுரை dont ask what language is this
Answers
பூமி அனைத்து உயிர்களுக்குமானது. நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளைப் போலவே நம்முடன் நேரடியாக சம்பந்தப்படாத மற்ற விலங்கு களையும் நேசிக்க வேண்டும். விலங்குகளை துன்புறுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. அதற்கான தினம்தான் இன்று (அக்டோபர்4) கடைப்பிடிக்கப்படுகிறது. விலங்குகள் நலம் பேணும் (அனிமல் வெல்பேர் டே) நாளான இன்று விலங்குகளின் உரிமைகள் மற்றும் மனிதனின் விலங்கு நல கடமைகள் பற்றி தெரிந்து கொள்வோமா...
மனிதர்களுக்கு அடிப்படை உரிமைகள் இருப்பது போலவே விலங்குகளுக்கும் உரிமைகள் உள்ளன. அவை சுதந்திரமாகத் திரியவும், உண்ணவும், உறங்கவும் உரிமை பெற்ற உயிரினங்களாகும். அவற்றை அடைத்து வைத்தல், கட்டி வைத்தல், காயப்படுத்துதல், துன்புறுத்துதல், கொல்லுதல், உணவுக்காக பயன்படுத்துதல் போன்றவை விலங்குகளுக்கான உரிமை மீறல்களாகும். குறிப்பிட்ட சில வளர்ப்பு பிராணிகளைத் தவிர மற்றவற்றை வேட்டையாடவும், உணவுக்காக பயன்படுத்தவும், மேற்குறிப்பிட்டுள்ள வழிகளில் துன்புறுத்துவதும் கூடாது. விலங்குகளுக்கான இந்த உரிமைகளுடன் அவை நலமாக வாழத் தேவையான வழிகளை உருவாக்கிக் கொடுப்பதே விலங்குகள் நல தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
1. விலங்குகளுக்கு வாழத் தேவையான சூழலை உருவாக்குவது,
2. அவற்றுக்கு பொருத்தமான உணவுக்கு வழிவகுப்பது,
3. அவை வழக்கமான குணங்களுடன் வாழ அனுமதிப்பது,
4. அவற்றை காயப்படுத்தும், கட்டுப்படுத்தும் தடைகளை அனுமதிக்காமல் இருப்பது,
5. காயங்கள் மற்றும் நோய்களில் இருந்து அவற்றை காப்பாற்றுவது
6. மற்ற விலங்குகளிடம் இருந்து ஆபத்து நேராமல் ஒவ்வொரு விலங்கிற்கும் தனி இருப்பிட சூழலை பேணுவது
ஆகியவை விலங்குகள் நலத்திற்கான வழிகளாகும்.
விலங்குகள் நலனைப் பாதிப்பது எது? என்பதை தெரிந்து கொண்டால்தான் அவற்றில் இருந்து விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.
சர்க்கஸ்களில் சாகசம் செய்வதற்காக பயிற்சிகள் அளிப்பது, வளர்ப்பு என்ற பெயரில் சங்கிலியால் பிணைத்து அவற்றை தனிமைப்படுத்துவது, உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தாமல் இருப்பது, இறைச்சிக்காக மொத்தமாக விலங்குகளை அழிப்பது, பலவிதமான விலங்குகளையும் வளர்ப்பு பிராணிகளாக மாற்றுவது, அசைவ விலங்குகளுக்காக சைவ விலங்குகளை உணவாக கொடுப்பது, ஆய்வுகளுக்காக பிராணிகளை பராமரிப்பது, மோதவிடும் விளையாட்டுகளில் மற்றும் காயப்படுத்தும் விளையாட்டுகளில் ஈடுபடுத்துவது போன்ற நேரங்களில் விலங்குகள் அதிகமாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றன.
விலங்குகள் நலத்தை காக்க நாம் செய்ய வேண்டியது என்ன?
* ஒருவர் சைவத்திற்கு மாறினால் ஆண்டிற்கு 100 உயிரினங்கள் இறைச்சியாக்கப்படுவது தடுக்கப்படும் என்கிறது ஒரு புள்ளி விவரம். ஆம் அசைவ உணவில் இருந்து சைவ உணவுக்கு மாறுவது விலங்குகளுக்கு நன்மை செய்வதாகும். இறைச்சி, பால், முட்டை, இறகுகள், தோல், கொம்பு இன்னும் பல தேவைகளைக் காரணம் காட்டி விலங்குகள் கொல்லப்படுவதை இது தடுக்கும்.
* நாம் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு, அலங்கார பொருட்களால் ஏராளமான உயிரினங்கள் பாதிக்கப்படுகிறது என்பதை அறிவீர்களா? தண்ணீருடன் கலக்கும் ரசாயனங்களால் தவளைகள், நன்மை செய்யும் பூச்சியினங்கள் வெகுவாக அழிந்து வருகின்றன. பல நேரங்களில் சோப்புகள், அலங்காரப் பொருட்களின் வாசனையால் கவரப்படும் எலிகள் மற்றும் பூச்சியினங்கள் அவற்றை சாப்பிடுவதால் உயிரிழக்கின்றன. எனவே தீங்கு விளைவிக்காத, விஷத்தன்மை மற்றும் ரசாயனத்தன்மை குறைந்த இயற்கை பொருட்களை குளியலுக்கும், அழகு அலங்காரத்திற்கும் பயன்படுத்துவது மற்ற உயிரினங்களுக்கு நன்மை செய்வதாகும்.
* வாகனங்களில் செல்லும்போது மிதவேகத்தில் செல்வது நமக்கும், மற்ற விலங்குகளுக்கும் பாதுகாப்பானதாகும். சாலையில் குறுக்கிடும் நாய் மற்றும் காட்டு விலங்குகள், தவளைகள், பாம்புகள் போன்றவற்றுக்கும் தீங்கு நேராமல் பயணிப்பதை உறுதி செய்யுங்கள்.
* அதுபோல ‘பர் டாய்ஸ்’ எனப்படும் விலங்குகளின் ரோமங்கள் கொண்டு தயாரிக்கப்படும் பொம்மைகள் மிருதுவாகவும், அழகாகவும் இருக்கும் என்றாலும் விலங்குகள் நலன் கருதுபவர்கள் அவற்றை பயன்படுத்துவதை குறைக்கலாம். விலங்கு தோல் மூலம் செய்யப்படும் பொருட்களையும் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
* விலங்குகள் வேடிக்கை உயிரினங்கள் அல்ல. நீங்கள் உங்கள் தாய்-தந்தையரைப் பிரிந்து இருக்க விரும்புவதில்லை அல்லவா? அதுபோலவே விலங்குகளும் அவற்றின் வசிப்பிடத்தில், அவற்றின் இனம் மற்றும் குடும்பத்துடன் வாழ உரிமை பெற்றவையாகும். அவற்றை சினிமா, சர்க்கஸ் மற்றும் பூங்காக்களில் அடைத்து வைத்து கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பராமரிப்பது அவற்றுக்கு ஒரு சிறை வாழ்க்கைதான்.
காயமுற்ற மற்றும் பராமரிப்பில்லாத, அழிவுறும் நிலையில் உள்ள உயிரினங்களை மட்டுமே பாதுகாப்பிற்காக பூங்காக்களில் பராமரிக்க வேண்டும். மற்ற வகையில் விலங்குகளை வளர்ப்பதும், துன்புறுத்துவதும் தண்டனைக்குரியதாகும். கூண்டில் அடைத்த விலங்குகளை ரசிப்பதைவிட, கதைகளில் வீடியோகேம்களில் காட்டப்படும் விலங்குகளை ரசிப்பதுடன், அவை பற்றி விழிப்புணர்வு பெறுங்கள். வேட்டையாடும் வீடியோ விளையாட்டுகளை தவிர்க்கலாம். விலங்குகள் நலனுக்காக குரல் கொடுங்கள். சமூக சேவையாக விலங்குகளுக்காகவும் தொண்டு செய்யுங்கள்!