inmaiyillum virunthombal patri yeluthuga
Answers
Answer:
விருந்தோம்பல் என்பது உங்கள் விருந்தினர்களை கவனித்துக்கொள்வது மற்றும் அவர்களின் தேவைகளை எதிர்பார்ப்பது என வரையறுக்கப்படுகிறது. விருந்தோம்பலுக்கு ஒரு எடுத்துக்காட்டு, உங்கள் வீட்டில் யாரோ தங்குவதற்காக தினமும் காலையில் படுக்கையை உருவாக்குவது.
பழங்காலத்தில் தமிழர் வழக்க்கில் இல்லத்திற்கு வரும் அறிமுகமில்லாத புதியவரே விருந்தினர் என்று அழைக்கப் பெற்றனர். பிற்காலத்தில் சிறப்பு உணவு ஏற்பாட்டிற்கு விருந்து என்றும், நன்கு அறிமுகமான உறவினரும் சுற்றத்தாரும் விருந்தினர் ஆயினர். சங்க இலக்கியங்களிலும் பெரிய புராணத்திலும் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும் போதெல்லாம் எல்லோருக்கும் விருந்து அளிக்கப் பெற்றிருப்பதாகக் காண்கின்றோம். ‘ விருந்து புறத்திருக்கச் சாவா மருந்தெனினும் தனித்து அருந்தாமை”.. என்பதே தமிழர்களின் உயர்ந்த பண்பாடு. இல்லத்திற்கு வந்த விருந்தாளி முன்புறமோ அல்லது வரவேற்பறையிலோ இருக்க, அமிழ்தம் என்று சொல்லக் கூடிய உணவே ஆயினும் அதனை வீட்டின் அடுக்களையிலோ அல்லது மறைவான இடத்திலோ, விருந்தினருக்குக் கொடுக்காமல் உண்பது என்பது தமிழர் பண்பாடு ஆகாது என்று தெளிவாகிறது.