Kadai elu vallalgal and their contributions
Answers
Answer:
கடையெழு வள்ளல்கள் (Kataiyezhu Vallalgal)
1. பேகன்
பொதினி (பழனி) மலைக்குத் தலைவர். மழை வளம் மிக்க அம்மலையின் காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக் கேட்டு, அது குளிரால் நடுங்கி அகவியது என்று நினைத்தார். அவரகத்தே அருள் உணர்ச்சி பெருகவே, தமது போர்வையை அம்மயிலுக்குப் போர்த்தினார். மயில் போர்வையைப் பயன்படுத்திக் கொள்ளுமா? கொள்ளாதா? எனச் சிறிதும் எண்ணிப் பாராமல் இத்தகைய செயல் செய்தார்.இதனையே ‘கொடைமடம்’ எனச் சான்றோர் போற்றிக் கூறினர்.
King Pegan gave his Blanket to a Peacock who was shivering in cold in the Forests of Palani Hills.
2. பாரி
பறம்பு மலையை ஆண்ட குறுநில மன்னர். வேள்பாரி என்றும் வழங்கப்படுகிறார். இவர், தாம் சென்ற வழியில், தம் தேரைத் தடுத்த முல்லைக் கொடி, தேரை விரும்பியதாகக் கருதி, அது படர்வதற்குத் தனது பெரிய தேரையே அளித்தார்.
King Paari found a Jasmine creeper resting on his chariot. He left his chariot for the creeper.
3. மலையமான் திருமுடிக் காரி
ஒலிக்கும் மணியைக் கழுத்திலும் ஆடுகின்ற அழகிய ‘தலையாட்டம்’ என்ற அணியைத் தலையிலும் அணிந்த குதிரையையும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லை என்னாது அளித்தார்.
Thirumudi Kari gave his horse and kingdom to Iravalas a tribe
4. ஆய்
ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் ஒன்று இவருக்கு ஓர் அரிய ஆடையை அளித்ததாம். நாகம் நல்கிய ஒளிமிக்க ஆடையை இவர், ஆலமரத்தின் கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தாராம்!
King Aai Kandiran received a glowing clothing from a good snake which he gave to Lord Shiva.
5. அதியமான்
இவர் ஒருகால் தன் நாட்டு மலையொன்றின் உச்சிப் பிளவின் சரிவில் நின்ற அருநெல்லி மரத்தின் அருங்கனி ஒன்றைப் பெற்றார். அக்கனி, தன்னை உண்டாரை நரை, திரை, மூப்பு இன்றி நீண்ட நாள் வாழ வைக்கும் வலியுடையது. அக்கனியைத் தாமே உண்ணாமல் வைத்திருந்து தம்மைக் காண வந்த நல்லிசைப் புலமை சான்ற ஒளவையார்க்கு ஈந்து அழியா அறப்புகழ் பெற்றார்.
Athiyaman received a Amla fruit which when eaten gives immortality. He saved it for Avvayar who is a great Tamil Poet for the growth of Tamil.
6. நள்ளி
இவரை நளிமலை நாடன் என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் வழங்கினர்.
He was also called as Nalli Malai Nadan, Kandirai Kopperu. Nalli helped people who came to him for help in the forest without revealing his true identity.
7. ஓரி
இவர் விற்போரில் வல்லவராதலின், இவ் வள்ளலை "வல்வில் ஓரி" என்றும் அழைப்பர்.கொல்லிமலை கலைஞர்களுக்கு தனது நாட்டை பரிசளித்தார்.
Oari is a good Archer. Hence he is also known as “Valvill Oari”. He gave his kingdom to the artists of Kollimalai.;
Explanation:
plz mark me brainliest