India Languages, asked by Ranggivinni, 4 months ago

kalangarai vilakkam katturai in tamil.
LIKE this photo write and send me.
LANGUAGE TAMIL​

Attachments:

Answers

Answered by Anonymous
2

Answer:

  • கலங்கரை விளக்கத்தில் பயன்படும் ஒளிமூலம் விளக்கு எனப்படும். இது மின் விளக்காகவோ எண்ணெய் விளக்குகளாகவோ இருக்கலாம். இவற்றிலிருந்து வெளியாகும் ஒளி வில்லைகளைப் பயன்படுத்திக் குவியச் செய்யப்படுகின்றன.
  • தொடக்ககாலக் கலங்கரை விளக்கங்களில் திறந்த தீச்சுவாலைகள் பயன்பட்டன. பின்னர் இதற்குப் பதிலாக மெழுகுதிரிகள் பயன்பாட்டுக்கு வந்தன. 1781 ஆம் ஆண்டளவில், ஐரோப்பாவில், ஆர்கண்ட் பொட்திரி விளக்கும், பரவளைவுத் தெறிப்பியும் உருவாக்கப்பட்டன.
  • அமெரிக்காவில், 1810 ஆம் ஆண்டில் வின்ஸ்லோ லூயிஸ் என்பவர் ஆர்கண்ட் விளக்கு, பரவளைவுத் தெறிப்பி ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் வரை, திமிங்கில எண்ணெய் பயன்பாட்டில் இருந்தது. 1850 இல் திமிங்கில எண்ணெய்க்குப் பதிலாக ஒருவகைத் தாவர எண்ணெயான, கோல்சா எண்ணெய் பயன்படுத்தப்பட்டது.
  • ஆனால், அமெரிக்க உழவர்கள் இதனை உற்பத்தி செய்வதில் அதிக ஆர்வம் காட்டாததால் அந்த ஆண்டே லார்ட் எண்ணெய் பயன்பாட்டுக்கு வந்தது. 1870 இல் அறிமுகமான மண்ணெய் 1880 ஆம் ஆண்டளவில் ஏறத்தாழ எல்லா கலங்கரை விளக்கங்களிலும் பயன்படத் தொடங்கியது.
  • 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மின்சாரமும், கார்பைட் (அசட்டலீன்) வாயுவும், மண்ணெய்க்குப் பதிலீடுகள் ஆயின.
  • கலங்கரை விளக்குகள், ஆபத்தான கரைப் பகுதிகளையும், பவளப் பாறைகள் நிறைந்த இடங்களைக் குறித்துக் காட்டுவதற்காகவும், துறைமுகங்களுக்கான பாதுகாப்பான நுழை வழிகளைக் குறிப்பதற்காகவும் பயன்பட்டன.
  • ஒரு காலத்தில் பெருமளவில் பயன்பாட்டிலிருந்த கலங்கரை விளக்கங்களின் தேவை இன்று அருகி வருகிறது.
  • பல வகையான மின்னணுவியல் வழிசெலுத்தல் கருவிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், செயற்படும் கலங்கரை விளக்கங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது.

Explanation:

புத்திசாலியாக தேர்வு செய்யவும்.

hi, eludha time illa so adjust with this.....

Similar questions