English, asked by thilagesg, 1 year ago

kamarajar speech in tamil​

Answers

Answered by mohdsyedpasha
1

speech in tamil hope it helps you

Attachments:
Answered by ravilaccs
0

Answer:

திருமணம் செய்து கொள்ளாமல் தன் வாழ்நாள் முழுவதும் மக்கள் பணியாற்றிய காமராஜர் 1975-ஆம் ஆண்டு  காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ஆம் தேதி, தன் 72-ஆம் வயதில் காலமானார். முதலமைச்சராக இருந்த போதும், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த போதும் வாடகை வீட்டிலேயே வசித்து வந்த காமராஜர்  இறக்கும் போது அவரிடம் இருந்த சொத்துகள் சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள், 150 ரூபாய் பணம்.

Explanation:

  • பெருந்தலைவர் என்று தமிழ்நாடு மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் காமராஜர். இவர் ஏழை எளிய மக்களுக்காக ஆற்றிய பணிகள் அதிகம். இவர் முதல்வராக இருந்த போது ஏழை மக்களுக்கு அது பொற்காலமாக இருந்தது. அந்த அளவிற்கு அவர் தாழ்த்தப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு அவரை தனது உதவிகளை அவரது திட்டத்தின் மூலம் நிறைவேற்றினார். அந்த ஒப்பற்ற வள்ளல் குறித்து இந்த பதிவில் நாம் முழுமையாக காணஉள்ளோம். காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவினை வாசிக்கவும்.

காமராஜரின் பிறப்பு மற்றும் பெயர்க்காரணம் :

  • காமராஜர் தமிழகத்தின் விருதுநகரில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மை என்ற தம்பதிக்கு 1903ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி மகனாய் பிறந்தார். இவர் பிறந்ததும் இவரது தந்தை அவர்களது குலதெய்வத்தின் அருளால் பிறந்த பிள்ளை என்பதனால் அவருடைய குலதெய்வமான “காமாட்சி” என்று பெயர் சூட்டினார். அவரது அம்மா அவரை ஆசையாக ராஜா என்று அழைப்பார்கள். இந்த பெயரே நாளடைவில் மருவி காமராஜர் என்றானது. -  இயற்பெயர் – காமாட்சி பிறந்த தேதி மற்றும் ஆண்டு – ஜூலை 15, 1903 பெற்றோர் – குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மை பிறந்த ஊர் – விருதுநகர் [தமிழ்நாடு] மருவிய பெயர் – காமராஜர்

கல்வி மற்றும் படிப்பு :

  • தனது தொடக்க பள்ளி படிப்பை தனது சொந்த ஊரான விருதுநகரில் சத்திரிய வித்யா சாலா என்ற பள்ளியில் பயின்றார். காமராஜர் படிக்கும் போது இருந்தே அவருக்கு விட்டுக்கொடுக்கும் பண்பு மற்றும் அமைதியாக எல்லோருடனும் பேசும் பண்பு போன்ற நல்ல குணங்களை தன்னுள் வைத்திருந்தார். இருப்பினும் அவரால் தொடந்து படிக்கமுடியவில்லை. அதன் காரணம் யாதெனில் அவரது பள்ளி படிப்பினை துவங்கிய சிறிது காலத்தில் அவரது தந்தை இறந்து விட்டார் . இதன் காரணமாக அவரது தாய் அவரை மிகவும் கடினப்பட்டு வளர்த்தார். தாயின் கஷ்டத்தை உணர்ந்த காமராஜர் தனது படிப்பினை துறந்து தன்னுடைய அம்மாவிற்காக அவரது மாமாவின் துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார்.

காமராஜரின் அர்ப்பணிப்பு வாழ்க்கை துவங்கிய தருணம் ;

  • காமராஜர் தனது மாமாவின் துணிக்கடையில் வேலை செய்யும் பல தலைவர்கள் உரையாற்றுவதை பார்த்து அவர்களது போராட்ட குணத்தால் ஈர்க்கப்பட்டு 1920ஆம் ஆண்டு தனது 16ஆவது வயதில் காங்கிரஸ் கட்சில் தன்னை இணைத்துக்கொண்டார். அன்றுமுதல் அவர் மக்களுக்காக அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் எண்று தனது மனதிற்குள் கணக்கு போடு அதன்படி நடக்க ஆரம்பித்தார்.

காமராஜரின் அரசியல் குரு :

  • காங்கிரஸ் கட்சியின் முதன்மை பேச்சாளரும் தலைவருமான சத்தியமூர்த்தியின் மேல் இருந்த மதிப்பின் காரணமாக அவரை தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார் . அவரின் அனைத்து மேடைப்பேச்சினையும் கேட்டு மெய்மறந்து போன அவர் சத்யமூர்த்தியுடன் தனது நல் உறவினை தொடர்ந்தார். சத்தியமூர்த்தி காங்கிரஸ் தலைவரான போது காமராஜரை செயலாளராக நியமித்தார்.

தமிழக முதல்வர் :

  • குலக்கல்வி அப்போது ராஜாஜியின் உத்தரவின் படி இருந்தது ஆனால் அதற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் நாளுக்கு நாள் வந்த வண்ணம் இருந்தன . இதனால் மத்தியில் காங்கிரஸ் பலமாக இருந்தாலும் தமிழகத்தில் தனது பலத்தினை இழந்தது. இதன் காரணமாக ராஜாஜி தனது முதல்வர் பதவியினை துறந்தார். மேலும் தனக்கு பதிலாக சுப்பிரமணியம் என்பவரை நிறுத்தினார். ஆனால் சட்டசபையில் காமராசருக்கு இருந்த செல்வாக்கின் அடிப்படியில் ஓட்டெடுப்பில் வென்று 1953ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழகத்தின் முதல்வர் ஆனார்.

மதிய உணவுத்திட்டம் :

  • ஒருமுறை தனது அமைச்சரவை குழுவினை கூட்டி தமிழக பள்ளி தேர்ச்சி மற்றும் எண்ணிக்கை குறித்து அமைச்சர்களிடம் பேசினார் . அவர்களிடம் ஆலோசித்த பிறகு காமராஜர் ஒரு முடிவுக்கு வந்தார். மாணவர்கள் பள்ளிக்கு வர முதலில் நாம் ஒரு வழி செய்யவேண்டும் என்று நினைத்த அவர் மதியஉணவு அளித்தால் கண்டிப்பாக ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள் என்று முடிவு செய்து மதிய உணவு திட்டத்தினை துவங்கினார். மேலும் குலக்கல்வி திட்டத்தினை கைவிட்டார் . தமிழகத்தில் மூடி இருந்த 6000 பள்ளிகளை மீண்டும் திறந்தார். மேலும் 17000க்கும் மேற்பட்ட பள்ளிகளை தமிழகம் முழுவதும் உள்ள சின்ன சின்ன கிராமங்களுக்கு அவரே சென்று திறந்து வைத்தார்.

தொழில்துறையில் வேலைவாய்ப்பு :

  • தமிழக இளைஞர்கள் படித்து முடித்து வேலை செய்யவேண்டும் என்று தனது முற்போக்கு சிந்தனையில் அவர் பல திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்தார் . அதில் முக்கியமான சிலவற்றை கீழே தொகுத்துள்ளோம். ‘நெய்வேலி நிலக்கரித் திட்டம்’, ‘பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை’, ‘திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்’, ‘கல்பாக்கம் அணு மின்நிலையம்’, ‘ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை’, ‘கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை’, ‘மேட்டூர் காகிதத் தொழிற்சாலை’, ‘சேலம் இரும்பு உருக்கு ஆலை’, ‘பாரத மிகு மின் நிறுவனம்’, ‘இரயில் பெட்டித் தொழிற்சாலை’, ‘நிலக்கரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை’ என மேலும் பல தொழிற்சாலைகள் காமராஜரால் உருவாக்கப்பட்டன.

Reference Link

  • https://brainly.in/question/144259
Similar questions