India Languages, asked by aasha9948, 10 months ago

Kambaramayanam diea in Tamil paragraph

Answers

Answered by Kannan0017
1

Answer:

மீண்டும் முயற்சிக்கவும் ஆன்லைன் விளையாட ஆன்லைன் ஒரு நர்ஸ் ஒரு நர்ஸ் உடை ஆன்லைன் ஆன்லைன் விளையாட ஆன்லைன் ஒரு நர்ஸ் ஒரு மருத்துவமனையில் ஒரு கட்சி மேக் அப் போன்ற விளையாட்டுகள் விளையாட பற்றி ஒரு கட்சி மேக் மற்றும் உணவகங்கள் ஐந்து ஆண்டுகள் வரை வாழும் மற்றும் உணவகங்கள் நாம் ஒரு கட்சி ஆன்லைன் விளையாட ஒரு மோட்டார் சைக்கிள் பழுது மற்றும் உணவகங்கள் ஐந்து நட்சத்திர விடுதிகள் காண்பிக்கிறது இல் ஆன்லைன் விளையாட விளையாட்டு விளக்கம் ஒரு வரிசையில் ஐந்து ஆண்டுகள் வரை சிறை கீப்பர் ஹேக் ஒரு பதினொரு வயது ஒரு கட்சி ஆன்லைன் விளையாட ஆன்லைன் ஒரு வரிசையில் எலும்புகள் உள்ளன என்று விளையாட்டு விளக்கம் ஒரு கட்சி ஆன்லைன் விளையாட ஒரு வரிசையில் மூன்று தன்னை இணைத்துக் கொண்டது ஆகும் இதில் விளையாட்டு பிடித்த ச ட ஒரு கட்சி மேக்

Explanation:

ஃhope you mate and mark me as brainliest please

Answered by wwwuamuam
4

இராமனது வரலாற்றைக் கூறும் நூல் இராமாயணம் எனப்பட்டது. கம்பராமாயணம் எனும் நூல் குலோத்துங்க சோழனின் ஆணைப்படி கம்பர் எனும் பெரும் புலவரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு வழி நூலாகும். இது வடமொழியில் வால்மீகி என்பவர் இயற்றிய இராமாயணத்தினைத் தழுவி எழுதப்பட்ட நூல் ஆகும். இது ஒரு வழி நூலாகவே இருந்தாலும் கம்பர் தனக்கே உரித்தான பாணியில் கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றியுள்ளார். வடமொழி கலவாத தூய தமிழ்ச்சொற்களைத் தனது நூலில் கையாண்டதால் கம்பர், தொல்காப்பிய நெறி நின்றவர் என்று புகழப்படுகிறார். {("வடசொல் கிளவி வடஎழுத் தொரீ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகுமே ") (தொல்காப்பியம், எச்சவியல், 5)}

மூல இலக்கியமான வடமொழி இராமாயணத்திலிருந்து சில மாறுபாடுகளோடு கம்பர் இந்நூலை இயற்றியிருந்தார். கம்பர் இயற்றிய இராமாயணம் என்பதால், இது கம்பராமாயணம் என்று அழைக்கப்படுகிறது.

கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும், 123 படலங்களையும் உடையது. காண்டம் என்பது பெரும்பிரிவினையும் படலம் என்பது அதன் உட்பிரிவினையும் குறிக்கும். ஏழாம் காண்டமாகிய "உத்திர காண்டம்" என்னும் பகுதியை கம்பரின் சம காலத்தவராகிய "ஒட்டக்கூத்தர்" இயற்றினார் என்பர். தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி கம்பரின் காலத்தில் (கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு) உச்சநிலையினை அடைந்தது என்பர். இந்நூலின் சிறப்பு கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் "தமிழுக்குக் கதி" (கம்பராமாயணம் திருக்குறள்) என்பர்.

கம்பரின் இராமாயணத்தைக் கம்பநாடகம் எனவும் கம்பச்சித்திரம் எனவும் கற்றறிந்த அறிஞர் பெருமக்கள் அழைப்பதுண்டு. கம்பரின் யாப்பு வண்ணங்கள் நூல் நெடுகிலும் மின்னி மிளிர்கின்றன. "வரமிகு கம்பன் சொன்ன வண்ணமுந் தொண்ணூற்றாறே (யாப்பு வண்ணங்களின் எண்ணிக்கை 96)" என்றொரு கணக்கீடும் உண்டு.

கம்பராமாயணம் பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்களை முழுமையாகப் பெற்றது. அணி, பொருள், நடை ஆகியவற்றால் சிறந்து விளங்குவது. சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்டு தமிழ்ப்பண்பாட்டோடு இயைந்து விளங்குவது.

Similar questions