India Languages, asked by shobhashobha83543, 6 months ago

தமிழ் kilai mozikal ontu ethu​

Answers

Answered by tanishasurekhah
1

Answer:

கிளைமொழிகள் என்பது ஒரு குறிப்பிட்ட பேச்சு மொழியின் வகையைக் குறிப்பதாகும் . இதனை வட்டார வழக்குகள் எனலாம். மனிதன் பேச்சாலும் எழுத்தாலும் தனது கருத்தைப் பிறருக்குத் தெரியப்படுத்தும் கருவியாகிய மொழியில் பேச்சு வழக்கில் மட்டும் ஏற்படும் மாற்றங்களைக் கிளைமொழியாக கொள்ளலாம் .ஒரு மொழி பரந்த பரப்பில் பேசப்படும்பொழுது அம்மொழியில் ஏற்படும் மாற்றங்களாக இது அமைகிறது.இதனை தனி மனித பேச்சு வழக்கு எனவும் அழைக்கப்படுகிறது .இந்த தனி மனித பேச்சு வழக்குகள் பல நபர்களால் பேசப்படும்போது ஒரு கிளை மொழியாகவும் பல கிளைமொழிகள் சேர்ந்து ஒரு பொதுமொழியையும் தோற்றுவிக்கிறது.

கிளைமொழி வகைகள் தொகு

கிளைமொழியை வழங்கும் இடம் சார்ந்து வட்டாரக்கிளைமொழி என்றும் பேசுகின்ற மக்களின் சமூக நிலையைக்கொண்டு சமூகக் கிளைமொழி என்றும் வகைப்படுத்தப்படுகிறது.

Similar questions