மாணவர்கள் மற்றும் ஒழுக்கம் தமிழ் கட்டுரை
Kumarakom
Answers
Answer:hi!! i am sneha. i use translator for translating...if there is any mistake plz...correct it...
வணக்கம்!! நான் ஸ்னேஹா. நான் மொழிபெயர்ப்பதற்கு மொழிபெயர்ப்பாளரைப் பயன்படுத்துகிறேன் ... ஏதேனும் தவறு இருந்தால் தயவுசெய்து திருத்தவும் ... ☺
Explanation:
ஒழுக்கக்கேடு ஒரு முக்கிய தகுதியாகும். ஒழுக்கம் இல்லாமல் வாழ்க்கை ஒரு கப்பலோட்டி இல்லாமல் ஒரு கப்பலை போல. மற்ற நல்லொழுக்கங்களை வெளிப்படுத்துவது அவசியம். வாழ்க்கையில் வெற்றிக்காக இது முற்றிலும் அவசியம். ஒழுக்கநெறி வாழ்க்கையில் ஒழுங்கமைப்பைக் குறிக்கிறது, இது கற்றறிந்த மக்களால் தயாரிக்கப்பட்ட சில குறிப்பிட்ட நெறிமுறைகளுக்கு நம் கடைப்பிடிப்பிலிருந்து விளைகிறது. இது நமது சமுதாயத்தில் உடல் மற்றும் ஒழுக்க சட்டங்களை மதித்து நடப்பதை குறிக்கிறது.
ஒழுக்கம் இல்லாமல், சமுதாயத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவது மிகவும் கடினம். எங்கள் சொந்த வழியில் வாழ முயற்சித்தால், ஒழுக்கநெறி மற்றும் குழப்பம் இருக்கும். இருவரும், தனிப்பட்ட மற்றும் சமூகம் அபாயத்தில் இருக்கும்.
இயல்பில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்போம். பூமியும் சந்திரனும் சூரியனை சுற்றி ஒழுங்குபடுத்தப்பட்ட விதத்தில் சுழல்கின்றன. இதன் விளைவாக, இரவும் பகலும் பன்னிரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் வருகின்றன. பூமியிலுள்ள பருவங்களின் சுழற்சியை நாம் அனுபவிக்கிறோம். வெளிப்புற இயல்பில் ஒரு பெரிய ஒழுக்கம் காரணமாக நமது உடல் இருப்பு சாத்தியமாகும். நம் உடம்பின் பல்வேறு உறுப்புகளின் அனைத்து உறுப்புகளும், அதனுடனான ஆற்றலும் ஒரு ஒழுக்கமான முறையில் வளரும் போது வளரும்.
ஒழுங்குமுறை வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பயன்படுத்தப்படலாம். பள்ளியில் உள்ள வீரர்கள், போர்க்களத்தில் வீரர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வீட்டில் எங்களுக்கு இது அவசியம். ஒழுங்குபடுத்தப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்களின் குழுவுடன் ஒரு தொழிற்சாலை சீராக இயங்குவதோடு, லாபத்தை ஈட்டும்.
தேசத்தை கட்டியெழுப்புவதில் சீர்திருத்தம் முக்கிய பங்கை வகிக்கிறது. இது குழந்தையின் மனதில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தனது குழந்தை பருவத்திலிருந்து அவர் ஒழுங்குமுறையை கடந்து, எதிர்காலத்தில் ஒரு நாகரீக குடிமகனாக மாறுகிறார். அவர் ஒரு ஒழுக்கமான வாழ்க்கை நடத்துகிறார்.
அனுபவம் வாய்ந்த வீரர்களின் குழு அடிக்கடி போட்டியில் தோல்வியைத் தழுவியதால் போட்டியில் தோல்வியடைகிறது. ஒரு பயங்கரமான போர் ஒரு ஒழுக்கமான இராணுவத்தால் வெற்றிபெற முடியும்.
மாணவர் வாழ்வில் சீர்திருத்தம் மிகவும் முக்கியமானது. அவர் ஆசிரியர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். பள்ளியில் உள்ள விதிகளை அவர் கடைப்பிடிக்க வேண்டும். அவர் அவர்களை மீறினால், அவர் எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை சந்திக்கிறார். ஒரு ஒழுக்கமான மாணவர் வெற்றியை அடைய முடியும். அதேபோல், ஒரு ஆசிரியராக இல்லாமல் ஒரு வாழ்க்கை ஆசிரியராக இருக்க முடியாது.
சுய ஒழுக்கம் மிக முக்கியம். ஆத்மாவின் சுதந்திரத்தை அடைவதற்கு ஆன்மீக நபர்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள். நமது கட்டுக்கடங்காத ஆசைகளையும் அசிங்கமான தூண்டுதல்களையும் கட்டுப்படுத்துவதில் சுய ஒழுக்கம் பொய்யானது.
இவ்வாறு, எல்லா இடங்களுக்கும் ஒழுங்குமுறை அவசியம்.
Answer:
HI....
Explanation:
முன்னுரை:
'ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
'ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்எய்துவர் எய்தாப் பழி’
திருவள்ளுவர், இந்தக் குறளில் ‘ஒழுக்கத்தால் மேன்மை கிடைக்கும் என்றும், ஒழுக்கம் தவறுவதால் பழி ஏற்படும்’ என்றும் ஒழுக்கத்தின் சிறப்பை வலியுறுத்துகிறார். கல்வி கற்கும் மாணவர்களாகிய நாம் ஒழுக்கத்தையும், கல்வியையும் இரு கண்களாக கடைப்பிடித்து வாழ்க்கைக் கல்வியை பயின்று சிறப்புற வேண்டும். ஒழுக்கத்தை காலம்தோறும் பேணிக் காக்க வேண்டும்.
நம்மை நல்வழிகளில் நெறிப்படுத்தி, மேன்மையோடு கூடிய வாழ்வில் தழைக்கச் செய்யும் பண்பே ஒழுக்கம் ஆகும். வாழ்வில் ஒழுங்கைக் கடைப்பிடித்து வாழ்வதே நாம் தலைச்சிறந்து வாழ வழிவகுக்கும். ஒழுங்கு என்பது சாட்சிகள் இல்லாத இடத்திலும் தவறிழைக்காமல் நேர்மையாக நடப்பதாகும். இதை முன்னோர் அறநெறிகள், அனுபவங்கள் மூலம் ஒழுக்கத்தை உணர்த்திச் சென்றுள்ளனர். நீதி நூல்களாக எழுதி வைத்து உள்ளனர்.
மாணவர்களாகிய நாம், நேர்மையுடன், பொறுப்புடன், சமூகப் பொறுப்பு கொண்டோராக வளர வேண்டும். ஆசிரியர்கள், பெரியோர்கள் வழிகாட்டும் பழக்க வழக்கங்களை பின்பற்றி, அறிவினால், திறமையினால் சிறந்த சிந்தனை கொண்டோராக செயல்பட வேண்டும்.
நீதி நூல்கள்:
நீதி நெறிகளை நமக்கு வலியுறுத்தும் நோக்குடன் நம் சான்றோர்கள் இயற்றிய நீதிநூல்கள் பல நீதிக்கருத்துகளை எளிய நடையில் நமக்கு எடுத்துரைப்பதாக உள்ளன. அவைகளில் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், திருக்குறள், நாலடியார், திரிகடுகம், சிறுபஞ்ச மூலம், பழமொழி முதலிய நூல்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்திரை பதித்தவை ஆகும். இவற்றில் திருக்குறள், உலகளவில் தமிழர்களின் ஒழுக்க நெறிகளை பறைசாற்றும் ஒப்பில்லா நூலாக புகழப்படுகிறது. அதனால்தான் அதை ‘உலக பொதுமறை’ என போற்று கிறார்கள். உலக மொழிகள் பலவற்றில் மொழிப்பெயர்க்கப்பட்டு பயிலப்படுகிறது.
‘ஒழுக்கம் விழுப்பம் தரும்’ என்பது குறள் நெறி. விழுப்பம் என்றால் உயர்வு என்று பொருள். ஒழுக்கம் வாழ்வில் உயர்வைத் தருவதால் ஒழுக்கத்தை உயிரினும் பெரியதாய் மதித்துப் போற்ற வேண்டும் என்று வள்ளுவர் குறளின் வழியே வலியுறுத்துகிறார். ஒருவர் தம் வாழ்வில் நன்மை அடைய வேண்டுமென்றால் நல் ஒழுக்கத்தை கடைப்பிடித்து வாழ்தல் அவசியமானது. இக்கருத்தையே வள்ளுவர் “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்” என்று விளக்குகிறார். நல்லொழுக்கத்தோடு கூடிய உயர்வே நிலைக்கும், தழைக்கும்.
ஒழுக்கக் கல்வி:
பள்ளிப்பருவத்தில் கவனத்துடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ளாவிட்டால், வாழ்க்கைப் பாதையில் வழுக்கி விழ நேரும். நம்மை வழுக்கி விழாமல் தாங்கிப்பிடிக்கும் ஊன்றுகோல் ஒழுக்கமுடையோர் வாய்ச்சொல்லும், நம் தமிழ் நீதி நூல்களும்தான். எந்த நிலையிலும் நமக்கு தீர்க்கமான வழியை அறம் சார்ந்தே போதித்து வழிநடத்தும் வழிகாட்டிகள், நீதிநூல்கள் தான்.
மாணவர்களாகிய நாம், பாடங்களில் கற்கும் நீதிக் கருத்துக்களைத் தேர்வு முடிந்தவுடன் மறந்து விடுதல்கூடாது. மாணவ பருவத்திலேயே ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும், நாட்டுப்பற்றையும் மேலும் வளர்த்து, எந்த வித பேதங்களும் இன்றி அனைவரையும் மதிக்க வேண்டும். வாழ்க்கை முழுவதும் கற்ற நெறிப்படி நடக்க வேண்டும். இதையே வள்ளுவர், “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்று அழகாகவும், தெளிவாகவும் உலக மாந்தருக்கு எடுத்துரைக்கிறார்.
முடிவுவரை:
மாணவர்களாகிய நாம் திரைப்படம், தொலைக்காட்சி போன்ற புறக் கவர்ச்சிகளில் அடிமையாகி நம் வாழ்வை வீணடிக்காமல் உயிரினும் மேலான ஒழுக்கத்தையும், அறிவூட்டும் கல்வியையும் செம்மையாக்கி கற்று, கற்ற நல்நெறிகளை வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்தால் சிறக்கலாம். நெறி தவறாமல் வாழ்ந்து சிறப்போம்! நாட்டின் பெருமை காப்போம்!
இது உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்!!!
இந்த நாள் இனிய நாளாகட்டும்!!!