கீழ்காண்பவற்றில் m-ன் மதிப்பு யாது?
n1=7, n2=8, m=(n1>n2) ? n1 : n2 ;
Answers
Answered by
0
8
- நிபந்தனை ஆபரேட்டர்(Conditional Operator) if-else அறிக்கைக்கு ஒத்ததாக இருக்கிறது, ஏனெனில் அது if-else அறிக்கையின் அதே வழிமுறையைப் பின்பற்றுகிறது.
- இந்த கூற்றில் n1 - ன் மதிப்பு 7 என சேமிக்கபட்டுள்ளது, n2 இன் மதிப்பு 8 என சேமிக்க பட்டுள்ளது. இக்கூற்றின் நோக்கமானது ஏதேனும் ஒரு நிபந்தனையை சரிபார்க்கும், சரியாக இருந்தால் ஒரு மதிப்பையும் தவறாக இருந்தால் மற்றொரு மதிப்பையும் வெளியிடும். n1 - ன் மதிப்பு n2 - ன் மதிப்பை விட பெரியதா என்று சரிபார்க்கப்படும்.
- நிபந்தனை சரியாக இருந்தால் ? க்கு அருகில் இருக்கும் n1 - ன் மதிப்பு வெளியிடப்படும். நிபந்தனை தவறாக இருக்கும் மட்டில் : க்கு அருகில் இருக்கும் n2 - ன் மதிப்பு வெளியிடப்படும் இவ்வாறு வெளியிடப்படும் இந்த கூற்றில் m-ல் சேமிக்கப்படுகிறது மேலும் இந்த மதிப்பானது பயனர்களால் அச்சிடவும் முடியும்.
Similar questions