India Languages, asked by umangrai3051, 11 months ago

Maram nadoum malai periyum tamil essay in tamil

Answers

Answered by cskooo7
3

Explanation:

here is ur answer

mark as brainlest answer

follow me for more answers

Attachments:
Answered by kd2832005
0

காடுகள் நாட்டின் கண்கள். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்.

- இப்படி நிறைய வாசகங்களை நாம் பார்த்து விட்டோம். எத்தனையை செயல்படுத்தி இருக்கிறோம்? மரம் வளர்ப்பது நல்ல விசயம் தான், கேட்பதற்கு நன்றாக தான் இருக்கிறது வளர்பதற்கு நேரமோ இடமோ இல்லை என்பது தான் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது.

நாம் அனைவரும் அறிந்தது தான். புவி வெப்பமாதலுக்கு முதன்மையான காரணம், பசுமை கூட வாயுக்களின் வெளியேற்றம், அவற்றில் முக்கியமாக கார்பன்-டை-ஆக்சைடின் விகிதாச்சார அளவு அதிகரிப்பது. ஒளிர்சேர்க்கை செய்யும் உயிர்களைத் தவிர மற்ற அனைத்தும் கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றுபவையாகவே உள்ளன, அத்தோடு மனிதர்களின் உருவாக்கங்களும் கார்பனை வெளியேற்றுகின்றன. பூமியில் இவை அனைத்திற்கும் எதிராக கார்பன் ஆக்சிஜன் விகிதாச்சாரத்தை சமன் செய்யப் போராடுவது மரங்கள் ஒன்று மட்டுமே!

ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள வளர்ந்த மரங்கள் ஒரு வருடத்தில் எடுத்துக் கொள்ளும் கார்பனின் அளவு, ஒரு வாகனம் 26000 மைல் பயணிப்பதால் வெளியிடும் கார்பன் அளவிற்கு ஈடானதாகும், அத்தோடு 18 மனிதர்கள் ஒரு வருடம் சுவாசிக்க தேவையான ஆக்சிஜனையும் வெளிவிடுகிறது.ஒரு தனி மரம் ஆண்டுக்கு 260 பவுண்டுகள் ஆக்சிஜனை வெளியிடுகிறது. இது இரண்டு மனிதர்கள் ஒரு வருடம் சுவாசிக்க போதுமானதாகும். ஒரு கணக்கீட்டின்படி ஐம்பது வருடங்கள் வாழும் ‘ஒரு மரம்’ உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் மதிப்பு $30,000 , சுத்திகரிக்கும் நீரின் மதிப்பு $35,000 மற்றும் கார்பன் வடிகட்டுவதற்கான செலவில் $1,25,000 . அரசாங்கங்கள் நீரை சுத்திகரிக்கவும், கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவும் பல பில்லியன் டாலர்களைச் செலவிடுகின்றன! இவை அனைத்தையும் மரங்கள் இலவசமாகவே செய்து வருகின்றன.

மரங்கள் பணத்திற்காகவே வெட்டப்படுகின்றன, ஆதலால் இயற்கை ஆர்வலர்களும் மரங்களின் மதிப்பை பணத்தின் மதிப்பிலேயே விளக்கத் துவங்கி விட்டார்கள். ஆனால் இயற்கையின் மீதான நமது எந்த அளவீடுகளும் மிகச் சரியான அளவாக இராது. மண் அரிப்பை தடுத்தல், நிலத்தடி நீரின் அளவை உயர்த்துதல், ஆறுகளின் பாதையை-பெருக்கை கட்டுப்படுத்துதல், குளிர்விப்பான்களுக்கு ஆகும் செலவைக் குறைத்தல், பல்லுயிர் பெருக்கம், மரக்கட்டைகளின் மதிப்பு, மழை பொழிவு அதன் வேளாண் பலன்கள் என அளவிட இயலாத செல்வம் மர வளம்.

உதாரணமாக நமது வீட்டு செலவு கணக்கில் போட்டுப் பார்க்கலாம், வீட்டின் நான்கு முனையிலும் நான்கு மரங்கள் நட்டிருந்தால் வீட்டின் உள்வெப்பநிலை 5 முதல் 9 டிகிரி செல்சியஸ் வரை குறைகிறது. இதனால் குளிர்விப்பான்களுக்கு செலவாகும் மின்சாரத்தில் 30% குறைகிறது. வருடத்திற்கு ஒரு வீட்டில் ஆகும் சேமிப்பை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அண்மையில் அரசின் அறிக்கையில் குண்டு பல்புகளை ஒழித்தால் தமிழகத்தில் வருடத்திற்கு 600MW மின்சாரம் சேமிக்கலாம் என்று கூறியிருந்தார்கள், இதோடு ஒப்பிடுகையில் மரங்கள் மூலமான சேமிப்பு இன்னும் அதிகமாக இருக்குமல்லவா.போஸ்கோ வெர்டிகல் என்ற கட்டிடம் 27 மாடிகளுடன் கான்கிரீட் காடாக, முன்மாதிரியாக வடிவமைக்கப்பட உள்ளது. எதிர்காலத்தில் வடிவமைக்கப்படும் கட்டிடங்கள் பசுமைக் கட்டிடங்களாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அரசாங்கம் இவற்றிற்கு வழங்கும் மானியங்கள் சலுகைகளும் ஒரு காரணம். நல்ல சேதியாக சாலைகள் அமைக்கப்படும் போது மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் செயந்தி நடராசன் உறுதி அளித்துள்ளார்.

குறைந்த பட்சம் நம்மால் தொட்டிச்செடிகளாவது வளர்க்க இயலும். துளசி ஓமம் போன்ற மூலிகைச் செடிகள், பூச்செடிகள் வளர்க்கலாம். துளசி கொசுக்களை விரட்டும், காற்றைத் தூய்மையாக்கும். குறைவாக மண் ஈரமாகும் அளவில் நீர் தெளித்தால் போதுமாதலால் தரை வீணாகும் என்று கவலை வேண்டாம். அதிக வெளிச்சம் இல்லாத சூழலில் குரோட்டன்கள் வளர்க்கலாம். செடிகள் வளர்ப்பதின் மூலம் கட்டிட உள்ளமைப்பின் அழகும் கூடும். படரும் கொடிகள், அரளி, மல்லிகை, தாள் பூ, ஜினியா என வீட்டை அழகுபடுத்தும் செடிகள் ஏராளம் உண்டு.

இதற்கும் இடமில்லை என்றால், ஒரு தண்ணீர் பாட்டில் போதும், அதை வெட்டி தொங்க விட்டு அதிலும் செடிகள் வளர்க்கலாம்.நமக்கு முந்தைய தலைமுறையில் இல்லாத ஒன்றாக நாம் தண்ணீரை காசு கொடுத்து வாங்குகிறோம், எதிர்கால தலைமுறை காற்றுக்கு காசு செலவழிக்க போகும் முன் நாம் விழித்திடவும், செயல்புரியவும் வேண்டும். கைப்பிடி அளவு மணல் கிடைத்தாலும் அதில் ஒரு ஆலம் விதை முளைத்து விடுகிறது. விதைகள் தயாராய் உள்ளன. விதைப்பதற்கு நம் கரங்கள் தயாராக வேண்டும்.

குறைந்தபட்சம் ஒரு விதையேனும் நம் எதிர்காலத்துக்காக விதைப்போம்! செய்வீர்களா?

Similar questions