Nan en Natin muthalvar anal essay in Tamil with munnurai and mudivurai
Answers
Hi Buddy, Neenga Tamizha?
Your Answer is.....
முன்னுரை:
நான் முதலமைச்சரானால் என்ன பணிகளைச் செய்வேன் என்பதையும், என்னென்ன திட்டங்களை நிறைவேற்றுவேன் என்பதையும் கூற விரும்புகிறேன்.
மாணவர்களுக்குப் பயன்தரும் திட்டங்கள்:
மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்குச் சென்றுவர சிறப்புப் பேருந்துகளை இயக்க உத்தரவிடுவேன். ஏழை மாணவர்களும் உயர் கல்வி பெற உதவித்தொகை வழங்குவேன். பெண் கல்விக்கு ஊக்கமளிப்பேன்.
உழவர் நலம்:
ஏரி, ஆறு, வாய்க்கால் போன்ற நீர்ப்பிடிப்புப் பகுதிகளை ஆழப்படுத்துவேன். உழவர்கள் தங்கள் விளைபொருளுக்கு நல்ல விலைபெற வழிவகுப்பேன். வேளான் ஆய்வுக்கூடங்கள் அமைப்பேன்.
மின் உற்பத்தியைப் பெருக்குவேன்:
மின் பற்றாக்குறையைப் போக்க புதிய மின் உற்பத்தி நிலையங்கள் துவங்க உத்தரவிடுவேன். தொழிற்சாலைகளை ஏற்படுத்தி அனைவருக்கும் வேலைவாய்ப்பளிக்க விரைந்து செயல்படுவேன்.
முடிவுரை:
உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை அனைத்து மக்களும் பெற்று இன்புற்று வாழ வழிவகை காண்பேன். கல்வி வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துவேன். அனைவரும் எனக்கு ஆதரவு தர அன்புடன் வேண்டுகிறேன்.
Buddy......
(One Request: அடுத்த டைம் இந்த மாதிரி long answer questions-க்கு கொஞ்சம் points அதிகம் தாங்க pls.....)
✌✌✌☺️
keep smiling... bye
Answer:
முன்னுரை :
நாட்டில் ஒவ்வொருவர்க்கும் எதிர்காலத்தை பற்றி பல்வேறு சிந்தனைகள் மற்றும் கனவுகளைக் கொண்டு வாழ்வர். அக்கனவுகள் அவர்களின் தனிப்பட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தான் தோற்றம் பெறும்.
அதற்கேற்றவாறு எதிர்காலத்தில் நான் தமிழகத்தின் முதலமைச்சராக வரவேண்டும் என்பதே எனது கனவாகும்.
கனவின் காரணம் :
எனக்குள் இக்கனவு வருவதற்கு காரணமாக இருந்தவர் டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாம் அவர்கள் ஆவார்.அவர் சிறுவயதில் சந்தித்த கடினமான வாழ்க்கையையும், இன்னல்களையும் தனது சவால்களிற்கெல்லாம் வெற்றிகரமாக முகங்கொடுத்து அவர் எவ்வாறு இந்திய நாட்டின் குடியரசு தலைவர் ஆனார் என்பதனையும் தெரிந்து கொண்டபோது, நானும் அவரைப்போல நானும் நமது தமிழகத்தின் முதலமைச்சராக வரவேண்டும் என்று உறுதிக்கொண்டேன்.
நான் முதலமைச்சர் அனால்...:
ஒரு மனிதர் சிறந்த தலைவராக வரவேண்டுமெனின் அவர் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, சிறந்த தலைமைத்துவம் போன்ற பண்புகளைக் கொண்டு இருக்க வேண்டும். அத்துடன் மக்களுக்கு சிறந்த சேவை செய்யும் நோக்கமும் வேண்டும்.
நான் முதலமைச்சர் அனால் மேற்கூறிய பண்புகளை ஒருங்கிணைத்து சிறந்த தலைவராக விளங்குவேன். நாட்டிற்கும் நாட்டிலுள்ள மக்களுடைய கோரிக்கைகளை கேட்டு அவர்களுடைய தேவைகளை தெரிந்துகொண்டு அதற்கேற்றாற் போல் தூரநோக்குடன் செயல்படுவேன்.
நான் தலைவரானால் அனைத்து திட்டங்களிலும் உள்ள நன்மை தீமைகளை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் அனைவருக்கும் நன்மை பயக்கும் திட்டங்களை மட்டுமே உருவாக்குவேன். தோலை நோக்கத்துடன் செயல்பட்டு , இயற்கையை பாதுகாப்பதோடு, காடுகளையும் ஏனைய இயற்கை வளங்களையும் அழிப்போர்க்கு எதிராக கடுமையான சட்டக்கட்டுப்பாடுகளை உருவாக்குவேன்.
அதுமட்டுமல்லாமல் நகரங்களை மட்டும் முன்னேற்றம் செய்யாமல் கிராமங்களையும் வளமாக்குவேன். கிராமங்களுக்கு தேவையான மின்சாரம், போக்குவரத்து, நீர்வளங்கள் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற கட்டுமானங்களை வழங்குவேன்.
அதுமட்டுமின்றி கிராமங்கள் தோறும் காணப்படுகின்ற பள்ளிகளை மாணவர்களது கல்வி வளர்ச்சியை மதிப்பீடு செய்ய குழுக்களை அமைப்பேன்.
நாட்டில் வறுமையில் வாடுவோர்களிற்காக சமூக நலப்பணித்திட்டங்களை அறிமுகப்படுத்துவேன். ஏழை எளிய மாணவர்களுக்கு என்னால் இயன்ற சேவைகளை வழங்குவேன்.
சிறந்த இலவச கல்வி மற்றும் நல்ல சத்துள்ள உணவை மாணாக்கர்களுக்கு வழங்குவேன். குறுகிய நோக்கில் சிந்திக்கின்ற மாணவ சமுதாயத்தை உருவாக்காமல், அவர்களுக்கு செயல்முறை கல்வியை ஊக்குவித்து பரந்த வகையில் சிந்திக்கும் ஆற்றலை உருவாக்கப்பாடுபடுவேன்.
வானியல், விண்வெளி, இயற்கை விவசாயம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஈடுபாட்டுடன் கல்வி கற்க மேலும் அதில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மாணவர்களிற்கு தேவையான ஊக்குவிப்புக்களை வழங்குவேன்.
முடிவுரை :
நான் ஒரு தலைவரனால் சிறப்பானதொரு மாணவ சமுதாயத்தை மற்றும் உருவாக்காமால் நமது மாநிலத்தை அனைத்து வகையிலும் சிறந்து விளங்க நான் அயராது பாடுபட்டு வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் செயல்படுவேன். எனவே, நான் முதலமைச்சர் அனால் நமது மாநிலத்தை சமாதனமும் ஒற்றுமையும் நிறைந்த மகிழ்ச்சியான நாடாக உருவாக்குவேன்.
#SPJ2