CBSE BOARD X, asked by haritcbm, 10 months ago

Nanbanuku kaditham ezhuthuga.

Answers

Answered by rakzhana01
11

Answer:

அன்புள்ள தோழி கயல்விழிக்கு,

உன் உயிர் தோழி கவிதா எழுதும் மடல். என் வீட்டில் அனைவரும் நலம்.அதுபோல் உன் வீட்டினர் நலத்தையும் அறிய ஆவலுடன் இருக்கிறேன். தோழியே, உன்னிடமிருந்து நீண்ட நாட்களாக, கடிதம் வரவில்லையே! காரணத்தை அறிய ஆவலுடன் இருக்கிறேன். நீ சென்ற முறை எழுதிய கடிதத்தில் ஒரு சின்ன நாய்க்குட்டியைச் செல்ல பிராணியாக வளர்க்க போவதாக எழுதியிருந்தாய். அந்த நாய்க்குட்டியும் தற்போது நன்கு வளர்ந்திருக்கும் என நான் நினைகிறேன்.

அதைவிடு,நான் இந்த கடிதம் எழுதுவதின் காரணம், என் பள்ளியில், தமிழ் பாடத்தை கணினி மூலம் கற்றுக்கொண்ட அனுபவத்தை உன்னிடம் பகிர்ந்து ஆகும். இக்காலத்தில், தொழில்நுட்பம் அதிகமாகிவிட்டது. இப்போது என் பள்ளியில் கணினிமுலம் வீட்டுப்பாடங்கள் செய்யலாம் . அதை நினைத்து நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன். என் பெருமிததிற்கான காரணம் கணிணியினால் நான் என் அன்றாட வீட்டுபடங்களை எளிமையாகவும், சீராகவும், சிறப்பாகவும், நேர்த்தியகவும், நேர்தொடும் செய்து முடிக்க முடியும்.

மேலும் இதன் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது மாணவர்கள் எவ்வளவு கவனம் செலுத்தி இருக்கின்றனர் என்று தெரிந்து கொள்ளவும் முடியும். இணையம் வழி கல்வி கற்கும்போது எனக்கு மிகவும் சுலபமாக இருந்தது. நீயும் முயற்சி செய். நிச்சயம் அது உனக்கு பயநுள்ளதாக இருக்கும். இதை சொல்லிகொண்டே விடைபெற்று கொள்ளகிறேன்.

இப்படிக்கு உன் அன்புள்ள தோழி,

கவிதா.

பெறுநர் முகவரி

கயல்விழி,

06-32 , பிராட்வே தெரு,

லண்டன்,

இங்கிலாந்த்.

Similar questions